தாயினும் சாலப் பரிந்த தயாபரன் நம் பெரியவா!
பெரியவாவை தரிசிக்க ஒரு பணக்கார தம்பதியர் விரும்பினர்.. அதற்காக சுவாமிகளுக்கு சமர்ப்பிக்க எலுமிச்சை மாலை தயாரிக்க எண்ணி, சந்தையில் 108 எலுமிச்சம் பழங்கள் வாங்கினர்..
அவற்றை தண்ணீரில் கழுவி மாலையாக தொடுக்கும் பணியை வீட்டில் வேலை பார்க்கும் பெண்மணியிடம் ஒப்படைத்தனர்.. அந்தப் பெண் மஹா சுவாமிகள் மீது அளவற்ற பக்தி கொண்டவள்..
பழத்தை ஒவ்வொன்றாக நூலில் கோர்க்க ஆரம்பித்தாள்.. அப்போது சுவாமிகளைத் தவிர வேறு எதையும் அவள் சிந்திக்க வில்லை..
மாலை தயாரானதும், அதை கண்களில் ஒற்றி பிரம்புக் கூடையில் வைத்தாள்..
அத்துடன் வாழைப்பழம், பூக்கள் முதலியவற்றை எடுத்துக் கொண்ட தம்பதியர் ஸ்ரீ மடம் கிளம்பினர்..
பக்தர்களுடன் வரிசையில் காத்திருந்து, அவர்கள் முறை வந்ததும், மகானை சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து விட்டு, கூடையை சுவாமிகளின் முன் வைத்து நின்றனர்..
கூடையை உற்றுப் பார்த்த சுவாமிகள், எலுமிச்சை மாலையை மட்டும் எடுத்து கழுத்தில் அணிந்து கொண்டார்..
இந்த அற்புதக் காட்சியைக் கண்ட தம்பதியர் மீண்டும் மகானின் காலில் விழுந்து வணங்கினர்...
அவர்களுக்கு பழங்கள், குங்குமத்தை வழங்கினார் பெரியவா... பின் அவர்களை நிற்கச் சொல்லி, மேலும் குங்குமம் கொடுத்தார்.. "எலுமிச்சை மாலையை நேர்த்தியா தயார் பண்ணின அம்மாளுக்கு இந்தக் குங்குமத்தைக் கொடுங்கோ! அவருக்கு என் ஆசிகள் எப்போதும் உண்டு.." என்றார்...
மனம் தூய்மையுடன் ஆத்மார்த்தமாகச் செய்யும் செயல்கள் வீண் போவதில்லை.. சமைக்கும் ஏழைப் பெண்ணின் பக்திக்கும் தெய்வ சந்நிதியில் அங்கீகாரம் உண்டு என்பதை உணர்ந்த தம்பதியர் கண் கலங்க, மனம் உருகி வணங்கினர்..
No comments:
Post a Comment