Sunday, October 24, 2021

அன்னம்மா

 அன்னம்மா.. என் மாமனார் எனக்கு கொடுத்த பெரிய சீதனம்..

வாட்ஸ் அப் சிறுகதை..

இந்தாங்கோ.. இந்த ஓட்ஸ் கஞ்சியைக் குடிச்சிட்டு.. சலுனுக்கு போயி ஒட்ட வெட்டிண்டு ஷேவ் பண்ணிண்டு வாங்கோ.. எனக்கே பாக்க சகிக்கலை..வந்து குளிச்சி பூஜை முடிசிட்டு.. அப்படி சிவப்பழமா.. மாப்பிள்ளை வந்திருக்காரு.. அவர் கூட ஒரு செல்பி எடுத்து எனக்கு வாட்சப்புல அனுப்புங்கோ.. நான் இன்னைக்கி அதை பேஃஸ்புக்ல போடணும்..

அறுபது வயதிலும்  அழகான அன்னம்மாவை நிமிர்ந்து பார்த்தார் வைத்தி.. இந்த வயதிலும் எத்தனை களையான முகம்.. முத்து முத்தனா நெற்றியில் வேர்வை அவளின் உழைப்பின் அழகு..அப்போதுதான் கையைக் கவனித்தார்..

என்ன அன்னம்?.. கையில கொப்புளம்?..

அது.. விடியற்காலை புளிக் காய்ச்சல் காய்ச்சினேன்.. புளி கொதிக்கும்போது கையில தெளிச்சுடுத்து..என் பொண்ணுக்கு நான் செய்யற புளிக் காய்ச்சல்னா உயிர்.

இப்படித்தான்.. போன மாசம் பையன் வீட்டுக்கு போனப்போ குக்கர்ல சூடு வச்சிண்டே..

இங்க பாருங்கோ.. இந்த சூடு..தழும்பெல்லாம் எங்களுக்கு கிச்சன் தர்ற பரிசு.. 

அங்க போனா பையனுக்கு புடிச்சதைசெஞ்சுதரணும்னு உழைக்கிறே.. இங்க பொண்ணு வந்தா அவளுக்கும்.. பேத்திக்கும் புடிக்கிமேன்னு எல்லாத்தையும் இழுத்துப் போட்டுண்டு உழைக்கிறே.. எப்போ ரெஸ்ட் எடுத்துக்கப் போறே?

ரெஸ்ட்டா?.. மாப்பிள்ளை என்அடை அவியல் சாப்பிடும்போதும்.. என் பொண்ணு என் வத்தக் கொழம்பை சாப்பிடும் போதும்.. என் பேத்தி என்னோட கருவேப்பிலை பொடியை சப்பு கொட்டி சாப்பிடும்போதும் கிடைக்கற சந்தோஷம்.. அளவிட முடியாதது..

இங்க பாருங்கோ.. யாரும் வரலேன்னு தனியா வீட்டுல உட்கார்ந்து புலம்பறதை விட.. இவ வந்தா அந்த சந்தோஷத்துல உழைக்கிறது இருக்கே.. அதுதான் சொர்க்கம்..இப்படியே கிச்சன்ல பாடு படும்போதே என் பிராணன் போயிடணும்.. அதுக்காகத்தான் தினமும் டைரியில மகா பெரியவா துணைன்னு எழுதிண்டு வரேன்.. நாம என்ன நெனைக்கிறமோ அதுதான் நடக்கும்..

அப்போ.. அன்னம்.. என்னை விட்டு நீ போயிடுவியா?..

சே..சே.. அப்படி ஓட்ஸ் கஞ்சிக்கும்.. காப்பிக்கும் உங்களை கையேந்த விடுவேனா,.,.. நீங்க முன்னால போகணும்னுதான்.. டைரியில பின்  பக்கம்.. ஓம் நமச்சியவாய எழுதிண்டு வரேன்..

மெல்லிய சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தாள் என் அன்னம்..

அவள் ஒரு விளாம்பழம்.. நான்தான் இன்னும் பக்குவப்படவேண்டுமோ?

No comments:

Post a Comment