கத்திரிக்காய் மசியல்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
கத்திரிக்காயைக் கொண்டு புளிக்கொழம்பு, சாம்பார், பொரியல் செய்து போர் அடித்துவிட்டதா? அப்படியானால் கத்திரிக்காயைக் கொண்டு மசியல் செய்து அப்படியானால் அதிலும் வட இந்திய ஸ்டைலில் மசியல் செய்து பாருங்கள்.
இங்கு அந்த வட இந்திய ஸ்டைல் கத்திரிக்காய் மசியல் தான் கொடுக்கப் பட்டுள்ளது. இந்த கத்திரிக்காய் மசியல் செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பபி சாப்பிடுமாறும் இருக்கும். ஏன் உங்கள் வீட்டில் உள்ள சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த வகையில் இருக்கும்.
தேவையான பொருட்கள்
செய்முறை
முதலில் கத்திரிக்காயை நன்கு சுத்தமாக கழுவி, அதனை கத்தி கொண்டு லேசாக கீறி விட வேண்டும். பின் அதில் எண்ணெய் தடவி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் எண்ணெய் தடவி வைத்துள்ள கத்திரிக்காயை போட்டு, கத்திரிக்காய் கருப்பாக மாறும் வரை நன்கு வறுத்து இறக்கி வைக்க வேண்டும்.
பிறகு அதன் தோலை நீக்கி விட்டு, அதனை கையால் மசித்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு, மற்றும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். அடுத்து இஞ்சி பேஸ்ட், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப்பொடி, சேர்த்து 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.
பின் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து 3-4 நிமிடம் கிளறி விட்டு மசித்து வைத்துள்ள கத்திரிக்காயைப் போட்டு, 2-3 நிமிடம் நன்கு வதக்கி இறக்கி, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவினால், சுவையான கத்திரிக்காய் மசியல் ரெடி!!!
🌺🌺🌺
No comments:
Post a Comment