Monday, January 16, 2023

பிரண்டை பொடி

 பிரண்டை பொடி செய்யலாம்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, சிவப்பு மிளகாய், சிறிது புளி இவற்றை உளுத்தம்பருப்பு சிவக்கும் வரை வறுக்கவும். வேறு தட்டில் கொட்டி ஆற விடவும் 

பிறகு அதே வாணலியில் பொடி யாக நறுக்கிய பிரண்டை, கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். ஆறவைத்து தேவையான உப்பு சேர்த்து பொடி செய்து கொள்ளவும். 

ஈரம் படாமல் fridge ல் வைத்தால் நீண்ட நாட்களுக்கு பயன் படுத்தலாம்

இதே முறையில், அரைக்கும் போது நீர் சேர்த்து அரைத்தால் துவையல்

புளியை தவிர்த்து பாதி தக்காளி சேர்த்து வதக்கவும்.

புளி மருத்துவ பலனை குறைத்து விடும் நாங்கள் குடம் புளி உபயோகப் படுத்தப்படுகிறோம்

No comments:

Post a Comment