Monday, January 30, 2023

புடலங்காய் ரோஸ்ட்

 புடலங்காய் ரோஸ்ட்

 தேவையான* *பொருள்கள்

   புடலங்காய் - அரைக் கிலோ,

 கடலைமாவு - ஒரு கப், பச்சரிசி மாவு - அரை கப், 

மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி (காரத்திற்கேற்ப), மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி, 

இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி,

 உப்பு - தேவையானது, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

 செய்முறை

  புடலங்காயை மெல்லியதாக நறுக்கவும்.அதில் கடலைமாவு, அரிசிமாவு, மிளகாய்தூள், மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு, உப்பு சேர்க்கவும்.சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து ஒன்றாக பிசையவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்ததை போட்டு சிவக்க விட்டு எடுக்கவும்.சுவையான புடலங்காய் ரோஸ்ட் தயார். 

இந்த ரோஸ்ட் சாம்பார் சாதம், ரசத்துக்கு மிக பொருத்தமாக இருக்கும். இரண்டு நாட்களுக்கு வைத்துக் கொள்ளலாம்.

🪷🪷🪷

No comments:

Post a Comment