புள்ளிமான் வேட்டை- 13.
பின்பு விரதம் தொடங்கியது. சுநந்தாவின் பக்கத்தில் அமர்ந்து கொண்ட சுப்பிரமணியன் விரதம் நாம எப்படி செய்கிறோம்,சிராரர்தத்துக்கும் விரதத்துக்கும் என்ன வித்யாசம், விரதம் செய்வதால் என்ன பலன் என்றெல்லாம் விளக்கிக் கொண்டிருந்தான். சுநந்தா பிடிக்கிறதோ, பிடிக்கலையோ எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டாள். அப்போதைக்கப்போது ஸ்ரீ கிருஷ்ணன் அந்த பக்கம் ஜாடை மாடையா மாடையாக வந்து போய்க் கொண்டிருந்தான். 12 மணிக்கு சாப்பாடு போட ஆரம்பித்தார்கள். சாப்பிட்டு முடித்தவுடன் அவரவர்கள்
அவரவர்களுடைய ரூமுக்கு திரும்பினார்கள். சுப்பிரமணியன் ரூமும் சரசாவின் ரூமும் அடுத்தடுத்து இருந்தன. மூணு மணிக்கு வாக்கில் சரசா சுப்பிரமணியன் ரூமில் நுழைந்தாள்." என்ன சமாஜாரமண்ணா.உங்கள எல்லாம் பாத்து வருஷ கணக்காச்சு .ஏன் மதுரை பக்கம் வரப்படாதா. நாங்க அங்க இருக்கோம்னு மறந்து போச்சு போல இருக்கு உங்களுக்கு" என்றாள். "அதெல்லாம் இல்லம்மா. எங்க வரது சொல்லு.ஆபீஸை கட்டிட்டிண்டு அழுவேண்டியிருக்கு" என்றான் சுப்பிரமணியன். "வந்து போயிண்டு இருந்தா தானே நமக்குள்ள உறவு இருக்கும்" என்றாள் சரசா. " சரசா.ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ஏதாவது பாக்க ஆரம்பிச்சு இருக்கயா" என்றான் சுப்பிரமணியன். "ஆமாண்ணா.கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும்,கேட்டபோது சரி பாக்க ஆரம்பிக்கலாம். நல்ல பொண்ணா இருந்தா பாருன்னு சொன்னவன் இப்ப மத்தியானம் சாப்படற போது அதை பிரஸ்தாபம் பண்ணச்சே, திடீர்னு இப்ப வேணாம். ரெண்டு மூணு வருஷம் போகட்டுமேன்றான். இந்த காலத்துல பசங்கள புரிஞ்சுக்கவே முடியல"என்று அங்கலாயத்தாள் சரசா. சரசாவுக்கு புரிந்துகொள்ள முடியாவிட்டாலும். சுப்பிரமணியத்துக்கு ஒருவேளை அப்படி இருக்குமோ என்று புரிந்தது. அப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று யோசித்தான் சுப்பிரமணியன்.
பின்பு சரசாவிடம்"ஒரு வேளை மனசுல யாரையாவது நெனச்சிண்டிருக்கானோ என்னவோ" என்று சுப்ரமணியன் கூற சரசா"மணி அண்ணா.நேக்கு அவனை நண்ணா தெரியும்.என் பிள்ளைன்னு பெருமைக்கு சொல்லலை.நான் கிழிச்ச கோட்டை அவன் தாண்டமாட்டான்" என்றாள்."சரசா.நம்ப பசங்கள வளக்கற விதம் அப்படி.சுநந்தாவையும் நான் அப்படித்தான் வளத்திருக்கேன்" என்றான் சுப்ரமணியன் சுநந்தாவை பார்த்துக் கொண்டே.
இதைக்கேட்டு தர்ம சங்கடமான சுநந்தா சீக்கிரமே சுதாரித்துக்கொண்டாள். தன்னுடைய பாடி லாங்வேஜால் அப்பா ஏதாவது தெரிந்து கொண்டு விடுவாரோ என பயந்தாள்.
ஸ்ரீ கிருஷ்ணனை பற்றி பேசிக் கொண்டிருந்த பொழுது சரசா "அண்ணா நோக்கு ஒண்ணு தெரியுமோ. அனேகமா உங்ககிட்ட அவன் சொல்லி இருக்க மாட்டான்" என்றாள். "என்ன சொல்ல வர நீ" என்றான் சுப்பிரமணியன். "அவன் படிச்ச வருஷம் அவன் தான் நான் யுனிவர்சிட்டி கோல்ட் மெடலிஸ்ட்" என்றாள் சரசா. "அப்படியா இதை அவன் என்கிட்ட சொல்லவே இல்லையே" என்றான் சுப்பிரமணியன். "சாதாரணமாவே அவனுக்கு கொஞ்சம் கூச்சம் ஜாஸ்தி. இதெல்லாம் போய் தம்பட்டம் அடிச்சுக்ககூடாதுன்னு சொல்லுவான்" என்றாள் சரசா.நடுவில் குறுக்கிட்ட சுநந்தா
"அப்போ அவர் பி ஜி பண்ணி இருக்கலாமே" என்றாள் " ஆமாம்மா. அவனும் அப்படி தான் நினைச்சிண்டு இருந்தான். ஆனால் அவன் இப்ப இருக்கிற கம்பெனியில் இருந்து பப்ளேஸ்மென்ட்ல நல்ல ஆஃபர் கொடுத்தா. அதோட இல்லாம சேந்த ஒரு மாசத்துக்கு எல்லாம் ஒரு வருஷம் யூ.எஸ் ல ட்ரைனிங் இருக்குன்னு வேற சொல்லி இருந்தா. அதனால அவன் பி.ஜி படிச்சு ஒண்ணும் அதிக பிரயோஜனம் இல்ல. நான் இங்கயே சேர்ந்தூண்றேன்னு சேந்தூட்டான்"என்றாள்.
இதைக்கேட்ட சுநந்தாவுக்கு ஸ்ரீகிருஷ்ணன் மேலிருந்த மதிப்பு அதிகமாகியது.
"என்னண்ணா.சுனந்தாவுக்கு எப்ப பண்ணறதா இருக்கே" என்றாள் சரசா. "அவ இன்னும் படிச்சு முடிக்கலையேம்மா. படிச்சு முடிச்சு வேலைக்கு போய் ஒண்ணு, ரெண்டு வருஷம் கழிச்சு பண்ணனும்னு இருக்கேன் "என்றான். "நல்ல பையனா வேற கெடைக்கணும்" என்றான் சுப்பிரமணியன். இதை பேசும்போது சரசாவின். முகத்தை கூர்ந்து கவனித்தான் சுப்பிரமணியன். "யார் யாருக்கு எங்க போட்டு இருக்கோ. யார் கண்டா அண்ணா?" என்றாள் சரசா. "இந்த காலத்துல ஒறவு வுட்டு போகாம இருக்கணும்னு எவ்வளவு பேர் கல்யாணம் பண்ணிக்கிறா?" என்றாள். அதற்குள். சமையல்கார மாமா வந்து, "காப்பி டிபன் ரெடியா இருக்கு. எல்லாம் வந்து சாப்ட்டுக்கலாம்" என்றார். அதன் பிறகு நிச்சயதார்த்தமும், ஜான வாசமும் நடந்தேறியது. இரவு 8 மணிக்கு டின்னர் முடிந்ததது. எல்லோரும் கொஞ்சம் கதை பேசிக் கொண்டிருந்தார்கள். ஒன்பதரை மணிக்கு உறங்க ஆரம்பித்தார்கள்.
சீக்கிரம் முகூர்த்தம் என்பதால் காலையில் காசி யாத்திரை,பிடி சுத்தி போடல் போன்றவை சீக்கிரமே நடந்தேறின. சுநந்தா மெருன் கலர் பட்டு புடவையும், மேட்சிங் பிளவுசும் அணிந்து கொண்டிருந்தாள். நெற்றியில். குங்குமப்பொட்டும், தலையில் சூடிய மல்லிகை மல்லிகைப்பூவும். அவளைப் பேரழகியாக காட்டியது. பெண்கள் சைடில் அவள்தான் ஸ்டார் அட்ராக்ஷன். ஸ்ரீ கிருஷ்ணன் வேஷ்டியுடன், வெள்ளை நிற முழுக்கை சட்டை அணிந்திருந்தான். ஏற்கனவே நல்ல உயரம். நல்ல முகக்களை வேறு. கல்யாணத்துக்கு வந்திருந்த பல பெண்களின் கண்கள் அவனை மொய்த்தில் ஆச்சரியம் இல்லை. சுனந்தாவை அருகில் வைத்துக் கொண்டு சுப்பிரமணியன். அவளுக்கு பாணி கிரஹணம், பிரவரம், கன்னியாதானம், அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல், கிரகப்பிரவேசம்,சேஷ ஹோமம் போன்ற சடங்குகள் நடக்கும் பொழுது அவை ஒவ்வொன்றைப் பற்றியும் தனக்கு தெரிந்தை சொல்லிக் கொண்டிருந்தான் இதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சுனந்தாவுக்கு நம்முடைய கலாசாரத்தில் இவ்வளவு பெரிய விஷயங்கள் இருக்கின்றன என்று புரிய ஆரம்பித்தது. ஷைலஜா வேறு சுநந்தாவை அக்கா அக்கா என சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தாள்
No comments:
Post a Comment