Sunday, January 29, 2023

வரட்டு இருமல் குணமடைய

 வழக்கமான நேரங்களில் வரும் இருமலை விடக் குளிர் காலங்களில் பிடிக்கும் ஜலதோஷத்தினால் வரும் வரட்டு இருமல் நம்மைப் படாத பாடு படுத்தி விடும். 

வரட்டு இருமலைப் போக்க அலோபதியில் எத்தனையோ மருந்துகள் இருந்தாலும், ஒரு சிலருக்கு அது பொருந்துவது இல்லை. 

அலோபதி மருத்துவத்தால் நிவாரணம் கிடைக்காத பலருக்கு இயற்கை மருத்துவம் நல்ல பலன் அளித்து உள்ளது.

"தூது வளை, அதி மதுரம் கஷாயத்தைப் பயன் படுத்தித் தொடர்ந்து வரும் வரட்டு இருமலைப் போக்க முடியும். 

அதற்குத் தேவையான பொருட்கள்...

தூது வளைக் கீரை -  ஒரு கைப் பிடி, அதி மதுரம் -  சிறிதளவு, தனியா- 5 கிராம், உலர்ந்த த்ராக்ஷை -  10

முதலில் தூது வளைக் கீரையை சுத்தப் படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். 

ஒரு பாத்ரத்தில் 500 மி. லி. தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்து உள்ள தூது வளை, அதி மதுரம், தனியா மற்றும் உலர் திராக்ஷை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். 

நன்கு கொதித்த நீரை பாதி அளவாகச் சுண்ட வைத்து இறக்கி வடி கட்டவும்.

இந்தக் கஷாயம்  விடாமல் தொடர்ந்து வரக் கூடிய வரட்டு இருமல், சாதாரண இருமல் மற்றும் புகைச்சலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு அரு மருந்து. 

இதனை காலை மாலை என இரு வேளையும் தயார் செய்து வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகக்  குடித்து வரவும்.

அதி மதுரம் வறட்டு இருமலுக்கு மிகச் சிறந்த மருந்து. 

அதி மதுரம் பொடி செய்து வைத்து காலை, மாலை தேனில் குழைத்து சாப்பிட்டு வர சளி, இருமல் குணம் ஆகும்.

தேநீர்ப் பழக்கம் உள்ளவர்கள் அதி மதுரம் தேநீர் தயார் செய்து குடிக்கலாம். 

200 மில்லி தண்ணீர் கொதிக்க விட்டு அதில் ஒரு தேக்கரண்டி அதி மதுரம் சேர்த்து, கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து குடித்து வர உடனே நிவாரணம் கிடைக்கும்.

வரட்டு இருமலுக்கு இஞ்சி எடுத்துக் கொள்ளலாம். 

தொண்டையில் புண் மற்றும் எரிச்சல் ஏற்பட்டு மிகப் பெரிய தொந்தரவுகளை உண்டாக்கும். 

உணவுப் பொருட்களை விழுங்கும் போதும், ஏன் நீர் ஆகாரங்களைக் கூட சாப்பிட முடியாது. 

இஞ்சி தொண்டைப் புண் எரிச்சலுக்கு சரியான தீர்வைக் கொடுக்கும். 

வெது வெதுப்பான நீரில் இஞ்சியைத் தட்டிப் போட்டுக் குடித்து வர நல்ல முன்னேற்றம் காணலாம்."

தூதுவளை இலைகளை பறித்து 10 அல்லது 15 போதும் நன்றாக அலம்பி அரைத்து கோதுமை மாவுடன் பிசைந்து அல்லது தோசை மாவுடன் கலந்து சப்பாத்தி அல்லது தோசை செய்து சாப்பிட சளி கட்டுப்படும். ஒரு சப்பாத்தி or ஒரு தோசை போதுமானது.

எந்த வகை இருமல் என்றாலும் ஒரு பாத்திரத்தில் நூறு மில்லி தண்ணீர், சுமார் பத்து மிளகு ஒன்றிரண்டாக நசுக்கிப் போட்டு, அது கொதிக்கும் போது அதில் இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் 150 மில்லி பால் சேர்த்து நன்றாக 3-4 நிமிடம் கொதிக்க விடவும். மிதமான சூட்டுக்கு வந்தபின் வடிகட்டி, ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துப் பருகவும். இரவு தூங்கப் போகும் முன் மூன்று நாட்களுக்குச் செய்தால், நாள்பட்ட எந்த விதமான இருமலும் குணமாகி விடும். தேன் சேர்க்கும் போது, பால் சூடாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும் 😊

chew slowly 1 to2 KOFOL(AYURVEDIC) tablets, 3 to 4 times a day. VERY EFFECTIVE.

கிராம்பு வாயில் அடக்கி வைத்துக் கொள்ள வேண்டும். உமிழ்நீர் விழுங்க இருமல் வராது.

பல் ஆரோக்கியம்

கிராம்பு ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளது. இது ஆரோக்கியமற்ற பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது. இந்த காரணத்திற்காக, அவை வாய்வழி ஆரோக்கியத்திற்கு உதவியாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

கிராம்பு தீராத பல் வலிக்கும் நிவாரணம் தருகிறது. ஒரு முழு கிராம்பை வாயில் வலி உள்ள இடத்தில் சில நிமிடங்களுக்கு வைத்தால், அது அத்தியாவசிய எண்ணெயை வெளியிடுகிறது. இது வலியை மெதுவாக்குகிறது.

இரண்டு வெற்றிலை நான்கு மிளகு வைத்து மடித்து வாயில் அடக்கி க் கொண்டால் இருமல் ஒரே நாளில் சரியாகி விடும்

4 மிளகு ஏலக்காய் 1 துளசி இலை இவற்றை வெற்றிலையில் வைத்து கடித்து சாற்றை விழுங்கவும்



No comments:

Post a Comment