அப்பா பேசறார்-6
"அமாம்.நான் எங்க வுட்டேன்" என்று கேட்டது அப்பாவின் குரல்."உங்க பேங்க் பேலன்ஸை பத்தி சொல்லிண்டிருந்தேள்" என்றான் ரகு."ஆமாண்டா.இருக்கற அமெண்ட்ல பதிமூணு நாள் செலவு, தான சாமனுக்குண்டான பணம்,வேத பாடசாலை டொனெஷனெல்லாம் கழிச்சூட்டு மீதில வருஷ காரியத்துக்கும்,வருஷாப்தீக செலவாற அமௌண்ட்டை கழிச்சுக்கோ.
மீதி இருக்கற அமௌண்ட்டை மூணு பாகமா பண்ணி கோபலனுக்கு ஒருபாகம் கொடுத்தூடு. மீதி உள்ளது நோக்கும் அம்மாவுக்கும்.உம்பேர்லயும் அம்மா பேர்லயும் E or S அகவுண்ட் ஓப்பன் பண்ணீடு. எனக்கென்னமோ உங்க அம்மா ஆயுசு கெட்டீன்னு தோன்றது.அவ இன்னும் பத்து பன்னெண்டு வருஷம் இருப்பாள்னு நெனைக்றேன்.அவ போய் சேந்ததக்கப்புறம் இருக்கற அமௌண்டை மூணா பிரிச்சி ஒரு பாகத்தை கோபலனுக்கு கொடுத்தூடு" என்றார் அப்பா."சரிப்பா" என்ற ரகுவிடம்"சுபம் முடிஞ்சதக்கப்புறம் உன்னால முடியறன்னிக்கு சைதாப்பேட்டைல இருக்க பென்ஷன் ஆபிசுக்கு போ. டெத் சர்டிபிகேட் இன்னும் சில டாகுமெண்ட்ஸ் கேப்பா. அதையெல்லாம் சப்மிட் பண்ணயானா ஆறுமாசம் கழிச்சு ஒரு ஐம்பதனாயிரம் கொடுப்பா.அத உன் பையன் பேர்ல FD ல போட்டூடு.
கோபலனுக்கு அமௌண்ட் கொடுக்கற போதெல்லாம் கோகிலா,அம்மா,சாருவை வெச்சுண்டு,பாஸ் புக்கை எல்லாருக்கும் காமிச்சூட்டு கொடு.கோபாலன் உன்ன போல நல்லவன்.வெளுத்ததெல்லாம் பால்னு நம்பறவன்.ஆனா கோகிலா சித்த முன்ன பின்ன இருப்பா.அவளும் நல்லவதான்.ஆனா கொஞ்சம் சந்தேக பிராணி"என்றார் அப்பா.
"எல்லாத்தையும் ஞாபகம் வெச்சிண்டு சொல்றது கஷ்டமாத்தான் இருக்கு.இன்னும் ஒரே விஷயம் மட்டும் பாக்கி இருக்கு. சட்டுன்னு ஞாபகம் வரமாட்டேங்கறது "என்றவர் "ஞாபகம் வந்தூட்து.கடைசியா வீட்டை வுட்டு நான் க்ளினிக் போற அன்னிக்கு நேக்கு நன்னா நெனவு இருந்தது.கெளம்பச்சே திருப்பதி பெருமாள் கிட்ட மானாசீகமா" என் உடம்ப சொஸ்தமாக்கி வீட்டுக்கு திருப்பி கொண்டு வர்து உன் பொறுப்பு.அப்படி பண்ணீட்டேன்னா உன் உண்டியல்ல பத்தாயிரம் ரூபா போடரேன்னு டீல் போட்டேன்.பெருமாள் என் டீலை ஏத்துகல. முதல்ல பெருமாள் ஏமாத்தீட்டாரேன்னு கோபம் இருந்தது. அப்புறம் யோசிச்சு பாத்ததல பெருமாள் நான் ஆத்துக்கு திரும்பி வந்தா கூட மறுபடியும் வியாதி வெக்கேன்னு நானும் அவஸ்த பட்டு இருக்கறவாளையும் நோக அடிப்பேன்னு நெனச்சு என்ன கூப்டுண்டூட்டார்னு புரிஞ்சுண்டேன். அதனால கொடுத்த வாக்கை நான் காப்பாத்தணம்.நீ திருப்பதி பெருமாளுக்காக பத்தாயிரத்தை சுபம் முடிஞ்ச கையோட பேங்கல போட்டூடு. எப்படியும் வருஷத்துக்குள்ள நீ கோவில்,கொளம் போக முடியாது. முக்கியமா மலை ஏற கூடாது. வருஷாப்தீகத்துக்கு அப்றமா ஒரு நாள் டெபாசிட்டை வட்டியோட வித்ட்ரா பண்ணி அந்த ஏழுமலையான் உண்டில போட்டூடு. நேக்கு அந்த பெருமாள் வைகுண்ட பிராப்தி கொடுப்பான்னு நெனைக்றேன்" என்று முடித்தார் அப்பா.(அப்பா இன்னும் பேசுவார்)
No comments:
Post a Comment