பீன்ஸ் உசிலி
தேவையான* *பொருள்கள்
பீன்ஸ் - 2 கப்,
ஊற வைத்த சோயா பீன்ஸ் - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, காய்ந்த மிளகாய் - 7, தேங்காய் - சிறிது, இஞ்சி - சிறு துண்டு, உப்பு - தேவைக்கு ஏற்ப, எண்ணெய், கடுகு, சீரகம், பெருங்காயம், உளுந்து, கறிவேப்பிலை - தாளிக்க
*செய்முறை*
முதலில் பீன்ஸை முக்கால் பதமாக வேக வைத்து கொள்ளவும்.சோயா பீன்ஸ், காய்ந்த மிளகாய், தேங்காய் சேர்த்து அரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் சேர்த்து தாளிக்க வேண்டியவற்றை சேர்த்து தாளிக்கவும். பின்பு வெங்காயம், இஞ்சி சேர்த்து வதக்கவும்.அரைத்த சோயா பீன்ஸ் சேர்த்து வதங்கியதும் உப்பு சேர்க்கவும்.
அதில் பீன்ஸ் சேர்த்து தண்ணீர் தெளித்து சிம்மில் வைத்து கிளறவும்.சுருள வந்ததும் அடுப்பை அணைக்கவும். மேலே கொத்தமல்லி தழை தூவவும்.சுவையான பீன்ஸ் உசிலி தயார்
🪷🪷🪷
No comments:
Post a Comment