Sunday, January 29, 2023

சூளகிரி வரதராஜப்பெருமாள்.

 🙏🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🙏

  சூளகிரி_வரதராஜபெருமாள்_கோயில்

🌺 ( 3000-அடி உயரம்கொண்ட சூளகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள,

சுமார் 2000-ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்த வைணவ திருத்தலத்தில், #ஏழு_அடி உயரம் கொண்டவராய் நம் திருவேங்கடவன்_அருட்காட்சியளிக்கிறார்.

🌹தனி சன்னதியில், தாயார் அமர்ந்த கோலத்தில் அழகு திருக்காட்சியளிக்கிறாள்.

(🙏🏻சிறப்புக்கள் பல பெற்ற, இத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்)

வனவாசத்தின்போது, பஞ்சபாண்வர்களில் ஒருவரான #அர்ஜுனனால்_பிரதிஷ்டை செய்யப்பட்டவராம் இந்த சூளகிரி வரதராஜப்பெருமாள்.

🌺 கர்ப்பகிரகம் பிற்கால சோழராலும், மண்டபம் விஜயநகரப்பேரரசர் கிருஷ்ண தேவராயராலும் கட்டப்பட்ட இந்த பழமைமிகு ஆலயம்,

பின்வந்த ஹோய்சாள மன்னர்கள், பாளையக்காரர்கள், விஜயநகர சிற்றரசர்கள் என, பல்வேறு காலங்களில் பல மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்ட பெருமையை கொண்டது.

🌺( சூளகிரி மலை, #திரிசூலத்தின் வடிவில் இருப்பதால், இவ்வூர் (சூலகிரி) சூளகிரி என்றழைக்கப்படுகிறது)

'தக்ஷின_வைகுண்டம்' என்றும், 'ஹஸ்தகிரி' என்றும் அழைக்கப்படும்இந்த மேற்கு பார்த்த பெருமாள் கோயிலில், உத்ராயண (தை-ஆடி) காலத்தில்சூரியன் அஸ்தமனம் ஆகும்போது,  சூரிய ஒளிக்கதிர்கள் இறைவனின் திருப்பாதத்தில்_படர்ந்து வழிபட்டுச் செல்வது சிறப்பு.

🌺 ஒவ்வொரு ஆண்டும், (வைகாசி) மே 21-ல் வரதராஜப்பெருமாள் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

அன்றய நாளில், உலகம் சுபிட்சம் பெற நடைபெறும் சிறப்பு பூஜைகள், யாகங்கள் மற்றும் கல்யாண உற்சவ நிகழ்வுகள் வெகு விசேஷமாம்.

இத்தல #பெருமாள்_விக்ரகம்_வளர்ந்து #வருவதாகவும், 

இவரை வழிபட நம் வாழ்க்கையில்எல்லா நலன்களும் மென்மேலும் வளரும் என்பது ஐதீகம்).

      🙏🏻ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏

🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅

No comments:

Post a Comment