வாய் புண் ஏன் வருகிறது தெரியுமா.
வயிற்றில் புண் இருந்ததன் விளைவாக வாய் புண் வருகிறது
இதற்கு ராகவன் sir sollliya படி மணத்தக்காளி கீரை சமைத்து சாப்பிடலாம்
கீரையை வெறும் வாயில் மென்று சாரு குடித்து விட்டு சக்கையை துப்பி விடவேண்டும்.
மேலும் நல்ல எண்ணை ஒரு கரண்டி வாயில் ஊற்றி கொப்பளிக்க வேண்டும். புண் இருக்கும் இடத்தில் படுமாறு கொப்பளிக்க வேண்டும்.இதை காலையில் வெறும் வயிற்றில் பல் தேய்பதற்கு முன் செய்ய வேண்டும்.
அப்பைக்கு அப்போ செய்தால் நன்றாக இருக்கும்.
பல் தேய்த்து விட்டு செய்யும் போது அதனை குடிப்பது நன்று.
இது நிச்சியம் பலன் கிடைக்கும்.இதற்கும் சரி ஆக வில்லை என்றால் doctor பார்த்து கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறேன்
1 பச்சை மிளகாயை ஒதுக்கி சிவப்பு மிளகாய் கொஞ்சமாகவும் மிளகு தூக்கலாகவும் சமைத்தால் வாய்ப்புண் கட்டுப்படும்.
2 ரசம் வைக்கும் போது புளி அளவாக இட்டு நன்கு கொதித்ததும் மற்றவை சேர்த்து பயன்படுத்தி வர , 3 ம் நாளே வாய்ப்புண் மறையும்.
புளி இல்லாமல் பயத்தம் பருப்பு மிளகு பொடி போட்டு ரசம் வைக்கலாம் கர்நாடகா வில் இதை பொறி சாத்துமது என்பர்
பச்சைமிளகாய் மிளகாய் வத்தல் மிளகாய் பொடியே வாய்புண்ணுக்கு காரணம். வாயில் புண் வந்தவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும். மலச்சிக்கலும் ஏற்படும்
உணவுக்குழாய் மேல் வயிறு ஈரப்பதம் குறையாமல் பார்த்துக் கொண்டால் வாய்ப்புண் வரும் வாய்ப்பு குறைவு.
மிக சூடான மிக குளிர்ந்த பானங்கள் பழங்கள் உடல் வெப்பநிலைக்கு மாறாக முறையுடன் எடுத்துக் கொள்வது வாய் தொண்டை புண் வராமல் தடுக்கும்.
தொடர்ந்து 6-8 மணி நேரம் பேசிக்கொண்டு இருந்தால், விடாமல் பட்சணங்கள் கொரித்துக் கொண்டு இருந்தால் வாயில் உள்காயம் ஏற்படலாம்.
24 நிமிடம் உணவுக்கு முன், பின் காலை எழுந்தவுடன், உறங்கச்செல்லும் சமயம் இவை இளஞ்சூட்டில் தண்ணீர் அருந்த உகந்த நேரங்கள்.
இந்த உணவுப் பழக்கங்களே நல் மருந்தாகும்.
பொதுவாக வாய் புண் வந்தால் கார வகைகள் தவிர்ப்பது நல்லது.எங்க அம்மா, சித்தி, வாய் புண் வந்தால் 3 வேளையும் தயிர் சாதம் சாப்பிட சரி ஆகும் என்று சொல்லி தொட்டுக்க ஒன்றும் கொடுக்காமல் தயிர் சாதம் தருவார்கள்
No comments:
Post a Comment