டீ கடை பருப்பு வடை
🌷💐💐💐🌷
டீ கடைகளில் வாங்கி சாப்பிடப்படும் வடை தனி டெஸ்ட் தான் ஆனால் நாம்பளும் வீட்டில் அந்த பருப்பு வடை செய்திருபோம் ஆனால் அந்த டெஸ்ட் வராது அதற்கு காரணம் அதில் சேர்க்கப்படும் பருப்பு தான்.
இனி கவலையே வேண்டாம் டீ கடை டேஸ்டில் வடை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க அப்றம் மீண்டும் எப்பொழுது செய்விக்கனு வீட்டில் உள்ளவர்கள் கேட்பார்கள்.
*தேவையான பொருட்கள்*
1½ கப் பட்டாணி பருப்பு
1½ ஸ்பூன் சோம்பு கறிவேப்பிலை கொஞ்சம்
7 பல் பூண்டு
12 வர மிளகாய்
உப்பு தேவையான அளவு
1 ஸ்பூன் இஞ்சி பொடியாக நறுக்கியது
1¼ கப் ஸ்பூன் வெங்காயம்,
சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது
3 பச்சை மிளகாய் கருவேப்பிலை பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி இழை பொடியாக நறுக்கியது
செய்முறை
முதலில் பட்டாணி பருப்பை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
அடுத்து ஒரு மிக்சியில் சோம்பு, கருவேப்பிலை கொஞ்சம், பூண்டு, வர மிளகாய் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
பிறகு அரைத்ததில் ஊறவைத்த பருப்பையும் சேர்த்து கொரகொரப்பாக பக்குவமாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பிறகு அதில் தேவையான அளவு உப்பு, இஞ்சி, வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
அடுத்து ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் வடை மவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதனை வடை போல் தட்டி எண்ணெயில் பூட்டு பொன்னிறமாக வெந்ததும் பரிமாறவும்.
இப்பொழுது டீ கடை வடை தயார்.
🌺🌺🌺🌺🌺💐💐🌺🌺🌺🌺🌺
No comments:
Post a Comment