Monday, January 16, 2023

புள்ளிமான்வேட்டை-3

 *புள்ளிமான்வேட்டை-3* 

சென்னையிலிருந்த மிகச்சிறந்த சீ.பி.எஸ்.சி பள்ளியில் ஆறாவது சேர்வதற்கு என்ட்ரன்ஸ் டெஸ்ட் எழுதினாள் சுனந்தா.முடிவு தெரியும்போது அவள் பெயர் தேர்ச்சிச்சானவர்கள் லிஸ்ட்டில் இருந்தும் வெகு நேரம் அவர்களை பிரின்சிபால் அழைக்கவில்லை.சிறிது நேரம் காத்திருந்து விட்டு ஆபிஸ் ரூம் சென்று விஜாரித்தான் சுப்ரமணியன்.பெயரை கேட்டவுடன் அங்கிருந்த ஒருவர் " நீங்கள் கொஞ்சம் வெயிட் பண்ணணம்.

பிரின்சிபால்உங்க கிட்ட பேசணமாம்" என்றார்.

"சரி.வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்திருக்கிறார்கள்போல இருக்கு" என்று சுப்ரமணியன் நினைத்துக் கொண்டான். ஒரு மணி போனதும் ஒருவர் வந்து அவர்கள் இருவரையும் "சாந்தகுமாரி, பிரின்சிபல்"என்ற போட்டிருந்த ரூமுக்குள் இட்டுச் சென்றார்."உக்காருங்க மிஸ்டர் சுப்பிரமணியன்.சுனந்தா,நீயும் உட்க்காரம்மா"என்றார் சாந்தகுமாரி. "உங்கள காக்க வெச்சதுக்கு மன்னிக்கணும். உங்கள காக்க வெச்சதுக்கு காரணத்தை ஊகிக்க முடிகிறதா" என்றார்.

" ஒரு வேள சுனந்தாவை வெயிட்லிஸ்ட்ல வைச்சிருக்கேங்களோ"என்றான் சுப்ரமணியன்." யூ ஆர் டோடலி ராங் சார்.என்ட்ரஸ்ல முதல் ரேங்க் எடுத்திருக்கறது சுனாந்தாதான்.உங்க பொண்ணு ஒரு சூப்பர் இன்ட்டலிஜென்ட் கேர்ள்.அவளை எங்க ஸ்கூல்ல எடுத்துக்கணம்ன்னு உறுதியா இருக்கோம்.உங்களுக்கு ஒரு குட் ந்யூஸ்.சுனந்தாவுக்கு நாங்க பீஸ்ல அம்பது சதவீதம் டிஸ்கவுண்ட் தறப்போறோம். அதுக்காக நான் கரஸ்பாண்டண்ட்கிட்ட பேசவேண்டி இருந்தது.அதனாலதான் டிலே ஆயிடுத்து.This girl is an  extra ordinary stuff "என்று முடித்தார்.பாதி பீஸை கட்டி சுனந்தாவை  அட்மிட்செய்தான் சுப்ரமணியன். சுனந்தா பிரின்சிபல் கணித்தபடி ஒரு Extra ordinary srudent ஆக இருந்தாள்.முதல் ரேங்க் வருவது மல்லாமல், பாட்டுப்போட்டி,பேச்சுப்போட்டி,ஸ்லோகா காம்படிஷன் முதலியவற்றில் பரிசாக வாங்கி குவித்தாள். அவள் கப்புகளை வைப்பதற்கென்றே மணி தனி பீரோ செய்து கொடுத்தான்.நாளடைவில் பெரியவளானதும் அவளது வனப்பு கூடிற்று. அவளது சௌந்தர்யத்தை பார்த்து மற்றவர்கள் வியக்க,சம்யுக்தாவுக்கு ஒரு தாய்க்குண்டான பயம் வந்தது. தினந்தோறும் கேள்விப்படும் செய்திகள் வேறு அவள் பயத்தை அதிகமாக்கிற்று ஈஸ்வரா.இவ படிச்சி முடிச்சி வேலைக்கு போய் இவள ஒருத்தன் கையில பிடிச்சு கொடுக்கறவரைக்கும் நீதாண்டாப்பா காப்பாத்தணம்" என்று வேண்டிக் கொள்வதை தவர வேறொன்றும் அவளால் செய்ய முடியவில்லை. கிட்டத்தட்ட 96 சதவீதம் ப்ளஸ் டூவில் மார்க் எடுத்தும்(ஸ்டேட் முதல் ரேங்கை ஒரு மார்க்கில் தவற விட்டதற்காக பத்து நாள் அவள் அழுதது ஒரு தனிக்கதை) அவளது மெடிகல் காலேஜ் கனவை ரிஸர்வேஷன் என்னும் அரக்கன் சின்னா பின்னமாக்கினான். நல்லவேளை அவள் எடுத்திருந்த க்ரூப்பில் மேத்ஸும் இருந்ததால் அவளுக்கு அண்ணா யுனிவர்சிடியில்  கம்ப்யூடர் சயின்ஸில் இடம் கிடைத்தது.இது நன்மைக்கா,தீமைக்கா என நம்மைப்படைத்தவனும்,இக்கதையை படைத்தவனும் மட்டும் அறிவார்கள்.எப்படி இருப்பினும் சுனந்தா வாழ்க்கையில் முக்கியமான அடுத்த கட்டத்துக்கு  நகர்ந்தாள்.(தொடரும்)

No comments:

Post a Comment