Tuesday, January 31, 2023

புள்ளிமான் வேட்டை 19.

 புள்ளிமான் வேட்டை 19.

 திங்கட்கிழமை காலை கல்லூரிக்கு சென்ற சுநந்தா முதல் வேலையாக ப்ரொபசரை சந்தித்து ப்ராஜெக்ட் வொர்க் விஷயமாக கிருஷ்ணன் சொன்னதை அவருக்கு ஞாபகப்படுத்தி, பேசுவதற்கு கிருஷ்ணன் எப்பொழுது வர வேண்டும் என்று கேட்டாள். "புதன்கிழமை. காலை 3 மணிக்கு மேல் வர முடியுமா என்று கேள்"என்றார் ப்ரொபசர்.சுநந்தா  கிருஷ்ணனுக்கு போன் செய்து விவரத்தை கூற அதற்கு கிருஷ்ணன் "சரி" என்று கூறி" புதன் மத்யான்னம் ரெண்டு மணிக்கு முடிஞ்சா நேக்கு ஞாபகப்படுத்து. நிச்சயம் வந்து விடுவேன். பை சான்ஸ் மறந்தா நன்னா இருக்காது. அதனால்தான் உன்னை ஞாபகப்படுத்த சொன்னேன்" என்றான். "சரி.அப்படியே செய்யறேன்" என்றாள் சுநந்தா. புதன்கிழமை மதியம் இரண்டு மணிக்கு கிருஷ்ணனுக்கு போன் செய்தாள் சுநந்தா. "நேக்கு ஞாபகம் இருக்கு. நான் கிளம்பிண்டே இருக்கேன். ரெண்டே முக்காலிலிருந்து மூணு மணிக்குள் உங்க கேம்பஸுக்கு  வந்துடுவேன்" என்றான். "மெயின் எண்ட்ரன்ஸிலேந்து கொஞ்ச தூரம் வந்ததும்,ஆபீஸ் இருக்கு. அங்கு நான் உனக்காக காத்துண்டிருப்பேன்" என்றாள் சுநந்தா. கிட்டத்தட்ட மூன்று மணிக்கு கிருஷ்ணன் அங்கு வந்து சேர்ந்தான். சுநந்தா அவனுடைய பைக்கில் அமர்ந்து கம்ப்யூட்டர் சயின்ஸ் பிளாக்குக்கு  வழி  சொன்னாள். டிபார்ட்மெண்ட் வந்ததும்  வெளியில் பைக்கை  நிறுத்தி, இருவரும் உள்ளே போனார்கள். "ப்ரொபசர் தங்கராஜ்" என்று போர்ட் போட்டிருந்த அறையின் கதவைத் தட்டிய சுநந்தா "மே ஐ கம் இன் சார்" என்றாள். "எஸ்.கம் இன்" என்ற குரல் கேட்டதும். இருவரும் உள்ளே சென்றார்கள். தங்கராஜ் கிருஷ்ணனைப்பார்த்து "சோ. யூ ஆர் மிஸ்டர் ஸ்ரீகிருஷ்ணன்" என்றார் கையை நீட்டியவாரே. "எஸ் சார். நைஸ் மீட்டிங் யூ" என்ற கிருஷ்ணன் அவரது கையை குலுக்கினான். "ப்ளீஸ் டேக் யுவர் சீட் "என்றார் ப்ரொபசர். "நீயும்  உட்காரம்மா"  என்றார் சுநந்தாவிடம். இருவரும்

ப்ரொபசரின் எதிரில்  போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்தார்கள்.  ப்ரொபசர் பேச ஆரம்பித்தார். அதற்கு முன் கிருஷ்ணன் தன்னுடைய  பிசினஸ் கார்டை எடுத்து அவரிடம் நீட்டினான். அதை வாங்கி படித்த அவர்,பின்பு அதை மேஜையின் மேல் அதற்குரிய இடத்தில் வைத்தார். "சோ மிஸ்டர் கிருஷ்ணன். நீங்க படிச்ச வருஷம், நீங்க யுனிவர்சிடி கோல்ட் மெடலிஸ்ட்ன்னு கேள்விப்பட்டேன்.கன்கிராஜுலேஷன்ஸ்"என்றார். இதெல்லாம் போய் இவ  ப்ரொபசர் கிட்ட சொல்லி இருக்காளே என்று நினைத்தான் கிருஷ்ணன். "ஆமாம் சார்" என்றான் கிருஷ்ணன். "குட்" என்று சொன்ன ப்ரொபசர் "நீங்க சுந்தாவுக்கு சொன்ன ப்ராஜெக்ட் விஷயமாக யோசித்து பார்த்தேன். எங்கள மாதிரி அகடமிக்கில் இருக்கவங்கள விட உங்கள மாதிரி இன்டஸ்ட்ரீல இருக்கறவங்கதான் லேட்டஸ்ட் ட்ரெண்ட ஈசியா புரிஞ்சுக்க முடியுது. நீங்க சொன்ன மாதிரியே அவ டீம் அந்த ப்ராஜெக்ட்டை செய்யட்டும். எங்களால் அவ்வளவு கைடு பண்ண முடியலன்னா நீங்களே அவளை கைடு பண்ணலாம். இப்ப நான் உங்க வர சொன்னது இதுக்காக மட்டும் இல்லை. அடுத்த வாரம் ஒரு நாள் நீங்க இங்க வந்து செவன்த் அண்ட் எய்த்  செமஸ்டர் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஈசிஈ பிரான்ச் ஸ்டுடென்ட்ஸ் மத்தியில் 

"லேட்டஸ்ட் ட்ரெண்ட்ஸ் இன் ஐ டி இண்டஸ்ட்ரி" என்ற தலைப்பில்  ஒரு மணி நேரம் லெக்சர் கொடுக்கணும். உங்களால முடியும் என்று நினைக்கிறேன்" என்றார். இது சற்றும் எதிர்பார்க்காத  கிருஷ்ணன்" சார் என்னை விட. சிறந்தவர்களும்,அதிக எக்ஸ்பீரியன்ஸ் இருக்கவங்களும் இண்டஸ்ட்ரில  இருக்காங்க.அவங்கள வெச்சு லெச்சர் கொடுக்க சொல்லுங்க" என்றான். "இல்ல கிருஷ்ணன். உங்கள பார்க்கும் போது  இங்க இருக்கிற பசங்களுக்கு நீங்களும் ஏதோ ஒரு ஸ்டூடன்ட் அப்படின்ற ஒரு மனோபாவம் வரும்.

அதனால உங்க ஸ்பீச்சை அவங்க கவனமா கேப்பாங்கன்னு  நான் நம்பறேன்" என்றார். இதைக் கேட்ட கிருஷ்ணன் "ஓகே சார். நீங்க எனக்கு டேட் மற்றும் டைம் சொல்லிடுங்க. நான் வரேன். அதுக்கு முன்னாடி நான் என் கம்பெனி கிட்ட பர்மிஷன் வாங்கணும். அது ஜஸ்ட் ஃபார்மாலிட்டி தான். அத நான் பாத்துக்குறேன்" என்றான். "ஓகே மிஸ்டர் கிருஷ்ணன். தட் ஈஸ் வெரி கைண்ட் அப் யூ.நைஸ் மீட்டிங் யூ. ஹவ் எ நைஸ் டே" என்றார்." யூ டூ சார் " என்றான் கிருஷ்ணன். ப்ரொபசர் எழுந்து வாசல் கதவை திறந்து கிருஷ்ணனை வழி அனுப்பி வைத்தது, அவர் கிருஷ்ணன் மேல் வைத்திருந்த மதிப்பைக் காட்டியது.மணி மூணே முக்கால் ஆகி இருந்தது. 

"சரி நான் கிளம்பட்டுமா" என்றான் கிருஷ்ணன். "காபி சாப்டூட்டு போலாமா" என்றாள் சுநந்தா". "சரி எங்க போகலாம்"என்ற கிருஷ்ணனிடம் "எங்க கேண்டின்ல காபி சுமாரா இருக்கும். கேண்டினிக்கு போலாமா"என்றாள் சுநந்தா.கேண்டீனில்  காபி வாங்கி இருவரும் குடித்துக் கொண்டிருந்தபோது தாடி வைத்த ஒருவன் சுநந்தாவை பார்த்து "ஹாய் சுநந்தா" என்றான். அவனைப் பார்த்து "ஹாய்" சொல்லிய சுநந்தா "இவர் மிஸ்டர் ஸ்ரீ கிருஷ்ணன்" கம்பெனியின் பெயரை சொல்லி "அந்த கம்பெனியில் டீம் லீடரா இருக்கிறார்"என்று சொன்னாள். பின்பு" இன்சிடென்ட்லி ஹீ இஸ் ரிலேடட் டு மீ" என்றாள். அதைக் கேட்ட இந்த தாடிவாலாவின் முகம் சுருங்கியது. அவன் கிருஷ்ணனிடம் கைகுலுக்க கூட இஷ்டப்படவில்லை. சுநந்தாவைப் பார்த்து "எனக்கு வேலை இருக்கிறது. நம்ப அப்புறம் பாக்கலாம்"  என்று சொல்லி அவசரமாக  கிளம்பினான். அவன் சென்றதும் கிருஷ்ணன் "என்ன இவன். ரொம்ப அன் சிவிலைஸ்டா  இருக்கான்"என்றான். "அது என்னுடைய கிளாஸ்மேட். அப்துல் கரீம்" என்றாள் சுநந்தா.

அப்துல் கரீம் ஏன் அப்படி நடந்து கொண்டான் என்று சுநந்தாவுக்கு முதலில் புரியவில்லை. புத்திசாலியான என் வாசகர்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

No comments:

Post a Comment