Saturday, January 21, 2023

புள்ளிமான் வேட்டை - 9

 புள்ளிமான் வேட்டை - 9

 சனிக்கிழமை முடிந்து ஞாயிற்றுக்கிழமை விடிந்தது. அன்றுதான் சுப்பிரமணியத்துக்கும் சுநந்தாவிற்கும் ஒரு  ஆசிட் டெஸ்ட்  காத்திருந்தது. நியாயமா பார்த்தால் அன்றுதான் சுனந்தா அந்த பையனுடைய நோன்பு விருந்தில் கலந்து கொண்டிருக்க வேண்டும்.இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருந்தான் சுப்ரமணியன். காலை ஏழு மணி இருக்கும். சுநந்தாவைப் பார்த்து சுப்பிரமணியம் "இன்னிக்கும் ஸ்பெஷல் கிளாஸ் இருக்குன்னு சொன்னயே.கெளம்பாம  இங்கேயே உக்காந்து இருக்கயே. போலையா" எனக்கேட்டான்.அவள் பதில் சொல்லும் வரை சுப்பிரமணியத்தின் இதயம் 'திக் திக்' என்று அடித்துக் கொண்டது.சுநந்தா பொறுமையாக

"இல்லப்பா நான் போறதா இல்லை" என்றாள்.சுப்பிரமணியம் விடாப்பிடியாக "ரொம்ப இம்பார்ட்டண்ட் கிளாஸ்ன்னு சொன்னயேம்மா.போகாட்டி  பரவாயில்லையா"என்றான். சுப்பிரமணியம் சுநந்தாவும் தனியாக இருந்ததால் சுனந்தா சுப்பிரமணியத்திடம் "உங்களை விட நேக்கு கிளாஸ் இம்பார்ட்டெண்ட் இல்லப்பா" என்றாள்.சுப்ரமணியம் புரிந்து கொண்டு ஆறுதல் பெருமூச்சு விட்டான். பல படிகள் கொண்ட திருப்பதி மலையில்,காளி கோபுரத்தின் முதல் படியில் ஏறிவிட்டதாக நினைத்து சுப்பிரமணியம் சிறிது மகிழ்ந்தான். சுநந்தாவை தன் வழிக்கு கொண்டு வர வேண்டும் என்றால் தான் முதலில் தன்னுடைய மரபுகளை பழையபடி பின்பற்ற வேண்டும் என்று சுப்பிரமணியம் புரிந்து கொண்டான். நடுவில் செய்யாமல் இருந்து சந்தியாவந்தனத்தை  மூன்று காலமும் செய்ய ஆரம்பித்தான். கிரி ஸ்டோரிலிருந்து வாங்கிக்கொண்டு வந்த சந்த்யா வந்தன புக் இதற்கு பேருதவியாக இருந்தது.இதைத் தவிர ஒரு ஸ்லோகா ப்ளையரை வாங்கிக் கொண்டு வந்து காலையில் 5 மணியிலிருந்து அதை ஆன் செய்து எல்லோருக்கும் கேட்கும் படியாக  ஸ்லோகங்களை சொல்ல வைத்தான். மூன்று மாதத்துக்கு ஒரு முறை  காஞ்சிபுரம் மடத்திலிருந்து வேத விற்பன்னர்களை வரவழைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டில் வேத கோஷம் ஏற்பாடு செய்தான். "இன்னிக்கு காஞ்சிபுரத்திலிருந்து வேதம் படித்தவர்கள் வந்து ஆத்துல வேத கோஷம் பண்ண போறாம்மா .நீ ஆத்துல இருந்து அதல கலந்துண்டயானா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்" என்று சுநந்தாவிடம் சொன்னான்.

"தான் கலந்து கொள்ளவில்லை என்றால் அப்பா மனது கஷ்டப்படும். அதனால் அவருக்கு ஏதாவது ஆகிவிடும்" என்று பயந்த சுநந்தா "அதனால் என்னப்பா தாராளமாக கலந்துகறேன்" என்று சொல்லும் படியாக ஆகிவிட்டது.

அவளுக்கு ஆரம்பத்தில் இதிலெல்லாம் அவ்வளவு இஷ்டம் இல்லாவிட்டாலும் அப்பாவின் உடல்நிலை கருதி அவர் சொல்வதெல்லாம் கேட்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டாள். இத்தோடு இல்லாமல் சில  ஞாயிற்றுக்கிழமைகளில் வாடகை கார் ஏற்பாடு செய்து கொண்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் தென்னாங்கூர், திருவான்மியூர்,மைலாப்பூர்,திருவல்லிக்கேணி,திருவொற்றியூர்,மாங்காடு,சிங்க பெருமாள் கோவில் போன்ற அருகில் இருந்த தலங்களில் உள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வரவும் தலைப்பட்டான் சுப்ரமணியன். ஆறுமாதத்துக்குள் திருப்பதிக்கு ஒரு ட்ரிப்பும், திருவண்ணாமலை, திருக்கோவிலூர்,ஆதி திருவரங்கத்துக்கு  மற்றுமொரு ட்ரிப்பும் குடும்பத்துடன்  அடித்தான்.சுநந்தாவிடம் இப்படி ட்ரிப் போவதற்கு பதினைந்து நாள் முன்னமே இத்தலங்களைப் பற்றிய சிறப்பு செய்திகளை சேகரிக்கச்சொல்லி

காரில் போகயில் அவளை விட்டே ராஜேஸ்வரியிடமும்,சம்யுக்தாவிடம் சொல்லச்சொன்னான்.யூ ட்யூப்பில் கிடைக்கும் சத் விஷயங்களை சுநந்தாவின் மொபலைக்கு பார்வேட் செய்தான். ராஜேஸ்வரிக்கு தன் பையன் திடீரென்று இப்படி பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டது ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இதுவும் நல்லது தானே என்று நினைத்து அவனிடம் இது பற்றி ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. இது சுநந்தாவை மூளைச்சலவை செய்யும் டெக்னிக் என்று பாவம் ராஜேஸ்வரிக்கு தெரியாது.சுநந்தா கொஞ்சம் கொஞ்சமாக தனது மதத்தின் மீதும், பிராமண கலாச்சாரத்தின் மீதும் லேசாக பற்று வருவது கண்டு சுப்பிரமணியம் அடைந்த சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை.சுதந்தாவின் மற்றுமொரு வித்தியாசம் அவன் கண்களுக்கு சமீபத்தில் தெரிந்தது. வெள்ளிக்கிழமைகளில் கல்லூரிக்கு புடவை உடுத்தி, கொண்டு நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு வைத்தும்,தலையில்  பூச்சூடியும் செல்ல ஆரம்பித்தது தான். இவ்வாறு போய்க் கொண்டிருக்கையில் கடவுள் சுப்ரமணியத்திற்கு சுனந்தாவை மேலும் நல்வழிப்படுத்துவதில் முக்கியமான ஒரு திருப்பத்தை அமைத்துக் கொடுக்க நினைத்தான். என்ன அது?

No comments:

Post a Comment