Monday, January 30, 2023

முள்ளங்கி ஆலு துவரன்

 முள்ளங்கி ஆலு துவரன்

  தேவையான பொருள்கள்

முள்ளங்கி கீரை - ஒரு கட்டு,

 வேக வைத்த உருளைக்கிழங்கு -1, மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி, தேங்காய்த்துருவல் - கால் கப், 

பூண்டு - 2 பல், வெங்காயம் - 1, சீரகத்தூள் - கால் தேக்கரண்டி, மஞ்சள்த்தூள் - சிட்டிகை, 

உப்பு - தேவைக்கு          

 செய்முறை

வேக வைத்த உருளைக்கிழங்கை சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் கீரையை கழுவி பொடியாக நறுக்கவும்முதலில் தேங்காய், மிளகாய்த்தூள், பூண்டு, சீரகத்தூள், மஞ்சள்த்தூள் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம் தாளிக்கவும்.வெங்காயம் வதங்கியதும் கீரையை போட்டு உப்பு சேர்த்து மூடி மிதமான தீயில் வதக்கவும்.வதங்கியதும் வேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கை அதில் போட்டு வதக்கவும்.

பின் அரைப்பை போட்டு மிதமான தீயில் வதக்கி இறக்கவும்.இது ரசம் சாதம் மற்றும் சப்பாத்தி, பிரெட்டுடன் சாப்பிட பொருத்தமாக இருக்கும்.

🪷🪷🪷

No comments:

Post a Comment