அப்பா பேசறார்-5
மூன்றாம் நாள் வீட்டின் பின்புறம் கீற்று கொட்டாய் போட்டு கல் ஊன்றி காரியம் ஆரம்பிக்கப்பட்டது.
அடுத்த ஐந்து நாட்களும் எல்லாம் கிரமமாக நடந்தன.அன்று மாலை வாத்யார் தான சாமான் லிஸ்ட்டுடன் வந்திருந்தார்.லிஸ்டை படித்துப்பார்த்த ரகு பின்பு அதை கோபாலனிடம் நீட்டினான். கோபலன் ஒரே க்ளான்ஸில் அதைப்பார்த்து பின் அதை வைதேகியிடம் காண்பித்தான். லிஸ்ட்டில் கோதானம் உட்பட அனைத்தும் இடம் பெற்றிருந்தன. "மாமா. இதுக்கெல்லாம் சுமாரா எவ்வளவு ஆகும்"என்றான் ரகு."இப்போ விக்கற விலவாசில என் மதிப்புபடி ஒன்றரை லக்ஷம் ஆகலாம்"என் றார் வாத்தியார்."ஒரு நாள் டைம் கொடுங்கோ.நான் நாளைக்கு சொல்றேன் "என்றான் ரகு.பின்பு வழக்கம் போல மொட்டை மாடிக்கு சென்றான்."பாதி கிணறுதாண்டீட்டடா ரகு.வாத்தியார் லிஸ்ட் கொடுத்திருப்பாரே.
கோதானத்தை தவிர அந்த லிஸ்ட்ல இருக்க மீதி எல்லாத்துக்கும் ஓ.கே சொல்லீடு. சிரமப்படாம சாருவையும், கோகிலாவையையும் தான சாமனை எல்லாம் வாங்கிண்டு வரச்சொல்லு. வேணும்னா கோபாலனும் கூட போகட்டும்.நான் ஏன் இத சொல்றேன்னு நோக்கு புரியும்னு நெனைக்கிறேன்.
கோதானமா யாரும் இப்போ கொடுக்றது இல்லை.அதை வாங்கிக்கிறவா அதுக்கு தீனீ போட்டு பராமரிக்க ரொம்ப கஷ்டப்படுவா.கோதானத்துக்கு பதிலா பணத்துக்கு சிரமப்படற வேதபாடசாலையா பாத்து ஒரு லட்சம் டொனேட் பண்ணீடு.இது கோதானத்தை விட ரொம்ப ஒசத்தியானது. வேதம் ஒதறவா வாழ்த்தினா நம்ப கீழ்பரம்பரை எல்லாம் நோய் நொடி இல்லாம இருப்பா" என்றது அப்பாவின் குரல்.பின் தொடர்ந்து "ரகு இப்போ நான் சொல்றதை நண்ணா கேட்டுக்கோ. வேணூம்னா கீழ போனதக்கப்புறம் குறிச்சும் வச்சிக்கலாம். இந்தியன் பேங்கலை என் அக்ககவுண்ட்ல பென்ஷன் கிரெடிட் ஆகி ஆப்புறம் எனக்கும் அம்மாவுக்கும் இருக்கற எய்தர் ஆர் செல்ப் அக்கவுண்ட்ல ட்ரான்ஸ்பர் ஆயிடர்து.கடைசியா முப்பத்தி ஏழு லட்சத்து நாப்பெத்தெட்டாயிரம் பேலன்ஸ் இருந்தது. நான் செத்த மாசத்தல உயிரோடிருந்த நாள்வரை எவ்வவளவு பென்ஷன் வரும்னு தெரியல. ஏன்னா நான் போன நாள் சரியா நேக்கு ஞாபகம் வரல.ஏற்கனவே வயசானதால ஞாபக மறதி இருந்தது.செத்ததக்கப்புறம் ஞாபக மறதி அதிகாமாய்ட்டது"என்றது அவர் குரல்.அதில் இருந்த ஹ்யூமரை நினைத்து ரகுவிற்கு லேசாக சிரிப்பு கூட வந்தது."என்னடா ரகு சிரிக்கறே.நான் கஷ்டப்பட்டுண்டு சொல்லிண்டு வறேன் " என்றார் அப்பா."இல்லேப்பா.இந்த நிலமையிலும் உங்களுக்குள்ள சென்ஸ் அப் ஹ்யூமரை பாத்து லேசா சிரிப்பு வந்தது" என்றான்." நான் செத்தாலும் என் ஹ்யூமர் சாக மாட்டேங்கறது" என்ற அப்பாவின் குரல்(அப்பா தொடர்ந்து பேசுவார்)
No comments:
Post a Comment