Monday, January 23, 2023

புள்ளிமான் வேட்டை-11

 புள்ளிமான் வேட்டை-11

சுநந்தவை பார்த்து சுப்பிரமணியன் "இவந்தான் உன் அத்தை பையன் ஸ்ரீ கிருஷ்ணன்" என்றவன் "என் பொண்ணு சுனந்தாவை நீ முன்னாடி பாத்திருக்கயா?" என்றான். "ரொம்ப சின்ன வயசுல பாத்த ஞாபகம்"என்ற கிருஷ்ணன் அவளை பார்த்து"ஹாய்"என்றான்.பதிலுக்கு சுநந்தாவும் அவனுக்கு "ஹாய்" சொன்னாள். "மெட்ராஸ்ல எங்க வேலை பாக்கற" என்றான் சுப்பிரமணியன். ஓ.எம்.ஆர் ல ஒரு பெரிய சாஃப்ட்வேர் கம்பெனி பெயர் சொல்லி "அங்கதான் மாமா வேலைல இருக்கேன்" என்றான்." என்ன படிச்ச.எப்ப முடிச்ச" என்று சுப்ரமணியன் கேட்க "நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் மூணு வருஷம் முன்னாடி மதுரை தியாகராஜா என்ஜினியரிங் காலேஜ்ல முடிச்சேன்" என்றான்.அவன் கம்ப்யூட்டர் சயின்ஸ்ன்னு தெரிந்ததும் சுநந்தாவிற்கு அவன் மேல் ஒரு பிடிப்பு வந்தது. "நீ என்ன பண்ற என்றான்" அவன் சுநந்தாவை பார்த்து. 

"நான் இப்போ செவன்த் செம் சி.எஸ்.பண்றேன்" என்றாள் அவள். "எந்த காலேஜ்" என்று கிருஷ்ணன் கேட்க "அண்ணா யுனிவர்சிட்டி.கிண்டி கேம்பஸ்" என்றாள் சுநந்தா. " எப்படி போறது படிப்பெல்லாம்" என்றான் கிருஷ்ணன். "இதுவரைக்கும் எல்லாம் கிளியர் பண்ணிட்டேன்.இந்த வருஷம் கோர் சப்ஜெக்ட் தான் கொஞ்சம் டப்பா இருக்கு" என்றாள் அவள்."அத பத்தி எல்லாம் நீ ஒண்ணும் கவலைப் பட வேண்டாம். என்ன டவுட் இருந்தாலும் என்கிட்ட கேட்கலாம். நான் சொல்லித் தருவேன்" என்றான். "நிச்சயம் கேக்கறேன்.ரொம்ப தேங்ஸ்" என்றாள் சுநந்தா. "என்ன ப்ராஜெக்ட் பண்றதா இருக்க"என்றான் கிருஷ்ணன்.

அவள் செய்யப்போற பிராஜெக்ட் பற்றி அவனிடம் விவரித்தாள்."நீ இதைவிட பைத்தன் பேஸ்ட் ப்ராஜெக்ட் பண்ணா நண்ணா இருக்கும்.மார்கட்ல இப்ப அதுக்கு பயங்கர டிமாண்ட். படிப்பு முடிச்சதுக்கு அப்புறம் நிறைய ஆப்பர்சூனிட்டிஸ் அதுக்கு இருக்கு "என்றான் கிருஷ்ணன். "சரி நான் என்

 ப்ரொபசர் கிட்ட இது பத்தி டிஸ்கஸ் பண்ணி பாக்றேன்" என்றாள் சுநந்தா. 

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது அவர்களை கவனித்த சுப்பிரமணியன் ரெண்டு பேருக்கும் ஜோடி பொருத்தம் நன்றாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டான். "ஈஸ்வரா. நான்நெனக்கற மாறி நடக்குமா" என்றும் நினைத்துக் கொண்டான்.

மணி 12 நெருங்கிக் கொண்டிருந்தது. அவரவர்கள் தத்தம் பர்த்துக்கு போய் உறங்கலானார்கள்.

சுநந்தாவின் கனவில் அவளது தற்சமய பாய்(இரண்டு அர்த்தம் பண்ணிக் கொள்ளவும்)பிரண்டும் ஸ்ரீகிருஷ்ணனும் எம்.ஜி.ஆர், வீரப்பா மாதிரி கத்திச்சண்டை போடுகிறார்கள்.யாரை சப்போர்ட் செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறாள் அவள்.தீடிரென்று அவள் முதுகை தொட்டது ஒரு கை."ஸ்ரீரங்கம் வர போறதடி.எந்திருசுக்கோ" என்று சம்யுக்தா தான் அவளை தட்டி எழுப்பிக் கொண்டிருந்தாள்.ஆமாம், ஸ்ரீ கிருஷ்ணனுக்கு கனவு வரவில்லையா என நீங்கள்முணுமுணுப்பது என் காதில் விழுந்தது.அவனுக்கும் கலர் கனவு வரத்தான் செய்தது.அந்த ரசமான கனவை விவரிப்பது கதாசிரியரது தர்மமல்ல என்பதால் அதை தொடாமல் விட்டு விடுகிறேன்.வியாழக்கிழமை காலை விடியலுக்கு முன் ஸ்ரீரங்கத்தில் ரயில் நின்றது.காலை மட்டுமா விடிந்தது? சுப்பிரமணியத்துக்கும் சேர்ந்து விடிந்ததா,பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment