🌹🙏திருப்பதி முதல் திருமலை வரை...ஒரு விரிவான 🚐பயணத்தொகுப்பு
By சுஜாதா &வெங்கடேசன்
பகுதி 11
தொடர்ந்து சொல்றார்
அப்ளாய குண்டா கோவிலைச் சுற்றி பெரிய சுற்றுச் சுவர் அதைசுற்றி கார் மற்றும் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம் விஸ்தாரமாக இருக்கு.
கோவிலில் இருந்து சற்று தொலைவில் மலை மேலே "சந்திரமௌலீஸ்வரர்" என்கிற சிவன் வீற்றிருக்கிறார். கொஞ்ச தூரம்தான் என்றாலும் மலைமீது ஏறணும். கோவிலைச்சுற்றி மலைகளும் மரங்களும் சூழ்ந்து இருக்கும்.
ஆனா நாம இப்ப அங்க போகமுடியாது. நேரம் இல்லை. நாம என்ன இன்னோவா கார்லயா வந்து இருக்கோம். சந்த்ர கிரி போகலாம்கிறார்.
(ஆமா எந்த பாங்க் எஃப்டில வட்டி கூட, தரான்னு தேடி தேடி பாங்ல போட்டு இன்கம்டாக்ஸ் கட்டிண்டு இருங்கோ.இன்னோவா என்ன..இனாமா கெடைச்சா கூட கார்ல ஏற மாட்டேள்னு எனக்கு தெரியாதா?ன்னு மனசுல நெனச்சிண்டு)
ராமனை சீதா மாதிரி நீங்க எங்க போறேளோ பின்னாடியே வந்துண்டு இருக்கேனேங்கறேன்.
சந்திர கிரி போறோம். …
திருப்பதியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் சந்திரகிரிஇருக்கு. , இது விஜயநகர் ராஜியத்தின் நாலாவது தலைநகராக இருந்ததுள்ளது. இது ஆந்திராவின் ஒரு முக்கிய பாரம்பரிய தளம் மற்றும் திருப்பதிக்கு அருகிலுள்ள மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்கு பார்க்க பல இடங்கள் இருக்கு.
இதில் ஒரு பெரிய கோட்டையும் மற்றும் விஜயநகர ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட இரண்டு அரண்மனைகளும்இருக்கு. . இந்த கோட்டை 183 மீட்டர் உயரத்தில் ஒரு பெரிய பாறை மீது அமர்ந்திருக்கும். கோட்டை தெற்குப் பக்கத்தில் வலுவான சுவர்களாலும், திருடர்கள் கோட்டைக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக கோட்டை பலப்படுத்தப்பட்டுள்ளது. கோட்டையின் உள்ளே எட்டு கோயில்கள் உள்ளன,அவை இடிந்த நிலையில் கிடக்கின்றன.
கோட்டை ஒரு வலுவான கட்டிடக்கலை என்றாலும், அரண்மனைகள், ராஜா மஹால் மற்றும் ராணி மஹால் தான் விஜயநகர கட்டிடக்கலைக்கு நேர்த்தியான எடுத்துக்காட்டுகள் ஆகும்.
இந்த கோட்டை ஒரு மூன்று மாடி கட்டிடம் ஆகும். முழு கட்டிடத்திலும் மர வேலைக்கான பயன்பாடு ஏதும் இல்லை. அரண்மனையின் மைய கோபுரத்தில் தர்பார் மண்டபம் உள்ளது, இது இரண்டாவது மாடி வரை உயர்ந்து தூண்களால் ஆதரிக்கப்படுகிறது. கட்டிடக்கலை அற்புதமும் அலங்காரத்தின் அதிசயமும் இந்த இடத்தை பார்க்க மிகவும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த இடம் காலை 10:00 மணி முதல் மாலை 8:45 மணி வரை திறந்திருக்கும், மேலும் நுழைவுக் கட்டணமாக ஒரு நபருக்கு 10 ரூபாய் செலுத்த வேண்டும்.
1) ராஜ்மஹால்:
இந்த கலையம்சம் வாய்ந்த கட்டிடம் இந்தோ - சாராசினிக் கட்டிட கலையின் வடிவமைப்பாக திகழ்கிறது. சந்திரகிரி கோட்டைக்குள் உள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களில் முக்கியமான இந்த கட்டிடம் தற்போது அரும்பொருள் காட்சியகமாக (muesium) உள்ளது. வரலாற்றில் பல சப்தங்களை ஏற்படுத்திய ராஜ் மகாலின் பல பாகங்கள் இந்த ம்யூசியத்தில் அமைதியாக உறங்கினாலும், பழமையான இந்த அரண்மனை இன்னமும் பழமையை பேசியபடி உள்ளதை காணத் தவறாதீர்கள்.
2) சந்திரகிரி கோட்டை:
11 ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசர்களால் கட்டப்பட்ட இக்கோட்டை தற்போது இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு துறையின் கீழ் இருந்தாலும், அழிவின் விளிம்பிலுள்ள கட்டிடங்களின் தாழ்வாரங்கள் இன்னும் பழைய தூண்கள் மற்றும் கேரிடார்களின் வலிமையிலேயே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள ராஜா ,ராணி மகால்களைக் காணும்போது அழிவின் விளிம்பிலும் இருந்தாலும் அதன் கட்டிட கலையம்சங்களை கண்டு ரசிக்காமல் இருக்க முடியாது.
3) ராணி மஹால்:
ராணி மஹால் சந்திரகிரி கோட்டையின் மகாராணிகள் வசித்த பகுதியாகும். இது சந்திரகிரி மலையின் உச்சியிலும், ராஜ் மகாலின் ஒரு பகுதியாகவும் உள்ளது. அழகிய கலையம்சங்களுடன் கூடிய இக்கட்டிடம் இந்தோ - சராசனிக் கட்டிட முறையில் கட்டப்பட்டதாகும். வரலாற்றுப் பிரியர்கள் அவற்றை பார்த்து ரசிப்பதோடு, அரண்மனையின் அருகே உள்ள நிழல் தரும் மரங்கள் அடங்கிய தோட்டத்தில் ஜில்லென்ற தென்றல் காற்றை அனுபவிக்கலாம். ஓய்வெடுத்தபடியே சந்திர கிரி கோட்டையின் பழம் பெருமைகளை அசை போடலாம்.
கோட்டை பெரிசா இருக்கு. என்னால சுத்த முடியாது. தாயாரைப்பார்த்துட்டு மேல மலை ஏறணும்.
போலாம்கறேன். ஆட்டோ வழில ஶ்ரீவாரி மெட்டு படிக்கட்டு. வழியா போறது. ஏற்கனவே அதுவழியா ஏறி பெருமாளை சேவிச்சதை நெனச்சு கன்னத்துல போட்டுக்கறேன்.
ஆட்டோ திருச்சானூர்ல போய் நிக்கறது.
குறிப்புகள்
இந்த திருப்பதி ஏழு மலைகளில்
1.த்ருவ ஸ்ரீநிவாசர்
2. போக ஸ்ரீநிவாசர்
3. கொலுவு ஸ்ரீநிவாசர்
4. உக்ர ஸ்ரீ நிவாசர்
5. மலையப்பர்
No comments:
Post a Comment