"#விருது"நகர் ....
#விருதுநகர்_மாவட்டம் தன் பெயரை போலவே விருதுபெறும் வகையில் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
இத்தனை சிறப்புகள் இருந்தும், பல் மருத்துவக் கல்லூரி கொண்டு வருவதாக கூறி, அரசு மற்றவைகளை கண்டுகொள்ளாமல் கைவிட்டதேனோ ?
ஒரு அரசு #மருத்துவக்_கல்லூரி ?
ஒரு அரசு #பொறியியல்_கல்லூரி ?
ஒரு அரசு #கலை மற்றும் #அறிவியல்_கல்லூரி ?
ஒரு அரசு #சட்டக்_கல்லூரி ?
இதில் ஏதாவது ஒன்று கூடவா எங்க மாவட்டத்துக்கு கொண்டு வர தகுதி இல்லை ?
1.தமிழகத்திலேயே முதன் முறையாக மழை நீர் வடிகால்கள் அமைத்து ஊர் மத்தியில் அமைந்துள்ள தெப்பத்தில் நீர் தேக்கியது விருதுநகரில்தான்.
2.இரண்டு தமிழக முதல்வர்களை தந்த மாவட்டம். திருவாளர்கள் :
1. P.S.குமாரசாமி ராஜா 1949 - 1952
2. கர்மவீரர் K.காமராஜர் 1954 - 1963
3.விருதுநகர் எண்ணை புரோட்டா. இந்தியாவின் வணிக தலைநகரமாக எண்ணைவித்துக்கள், தானியங்கள், டின் தொழில்கள் என முற்றொருமை பெற்று விளங்கும் விருதுநகர்.
4.இன்றும் கைத்தறி நெசவுத்தொழில் சிறந்து விளங்கும் அருப்புகோட்டை.
5.சிவகாசி பட்டாசு, காலண்டர், டைரி, பாட புத்தகங்கள், ஆசியாவின் சின்ன ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசி அமைந்துள்ள மாவட்டம்.
6.ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா.
7.மோப்ப நாய்கள், ஸ்பின்னிங் மில்கள் அதிக அளவில் உள்ள ராஜபாளையம்.
8.சாத்தூர் சேவு.
9.ஆசியாவிலேயே பேண்டஜ் துணிகள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் சத்திரப்பட்டி.
10.நைட்டீஸ், பெண்களின் உள்ளாடைகள், தயாரிப்பில் முன்னணயில் உள்ள தளவாய்புரம்.
11.பிரசித்திபெற்ற ராம்கோ சிமெண்ட், ஆலங்குளம் அரசு சிமெண்ட் தொழிற்சாலைகள் உள்ள மாவட்டம்.
12.உலக அளவில் முன்னணயில் உள்ள தீப்பெட்டி தொழில்.
13.தமிழக அரசின் சின்னமான ஆண்டாள் கோயில் கோபுரம்.
14.வீடு தோறும் கைப்பிடி அரிசி கொடுத்து KVS கல்வி நிலையங்கள் உருவாகிய ஊர்.
15.சபரிமலை பக்தர்கள் மற்றும் இதர கோயில்களுக்கு செல்லும் பக்தர்கள் கழுத்தில் அணியும் துளசிமணி மாலை, ஸ்படிக மாலை புனைந்து இந்திய முழுவதும் அனுப்பும் துலுக்கப்பட்டி.
16.ரமண மகரிஷி அவதரித்த இடம் திருச்சுழி.
17.சித்தர்கள் இன்றும் வாழ்வதாக நம்பப்படும் மகாலிங்கமலை.
18. விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில், வெயிலுகந்தம்மன் கோவில், அருப்புக்கோட்டை சிவன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், சிவகாசி பத்திரகாளி கோவில், திருச்சுழி திருமேனிநாதர் திருக்கோவில், இருக்கண்குடி மாரியம்மன் கோவில், திருத்தங்கல் திவ்ய தேசங்களில் ஒன்றான நாராயண பெருமாள் கோவில் ஆகிய திருத்தலங்களை கொண்ட மாவட்டம்.
19.வறுமையின் காரணமாக உயிர் நீத்த நல்லதங்காள் பிறந்த ஊர் மல்லி அருகே அர்ஜுனாபுரம்.
20.வெள்ளையனுக்கு எதிராக தமிழர் வீரத்தை உலகிற்கு உணர்த்திய மருது சகோதரர்கள் பிறந்த ஊர் முக்குளம்.
21.வெள்ளையனுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய தியாகி சங்கரதாஸ் பிறந்த ஊர்.
22.தமிழகத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட தேசப் பந்து மைதானத்தில் (தற்போதய பொட்டல்) உண்ணா நோன்பு இருந்து உயிர் விட்ட தியாகி சங்கரலிங்கனார் பிறந்த ஊர்.
23.நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் தம்பதிகள் பிறந்த மாவட்டம்.
24.திரைத்துறை பிரபலங்கள் நடிகர் மறைந்த அய்யா திரு.V.K.ராமசாமி, அண்ணன் சமுத்திரக்கனி, விஜய் சேதுபதி மற்றும் நடிகை ஸ்ரீ தேவி ஆகியோர் பிறந்த மாவட்டம்.
25.விருதுநகரில் இருந்து 45 கி.மீ தொலைவில் சாம்பல் நில அணில்கள் சரணாலயம் அமைந்துள்ளது. வழக்கமான அணில்களை விட பெரியதாக, சாம்பல் நிறத்தில் இந்த அணில் இருக்கும். இந்த அரிய வகை அணில் இந்த சரணாலயத்தில் அதிகமாக காணப்படுகிறது. மேலும் பறக்கும் அணில், சிங்கவால் குரங்கு, யானை, மான் மற்றும் பறவைகள் இங்கு காணப்படுகின்றன.
விருதுநகர் டைம்ஸ் வாசகர்களின் தகவல்கள் :
26.ஈமெயில் கண்டுபிடித்த திரு.சிவாஅய்யாதுரை பிறந்த ஊர் இராஜபாளையம்.
27. தொடர்ச்சியாக 27 ஆண்டுகள் +2 அரசுப் பொதுத் தேர்வு தேர்ச்சி சதவிகிதத்தில் முதலிடம் பிடித்த ஒரே ஒரு மாவட்டம் நமது விருதுநகர் மாவட்டம்.
No comments:
Post a Comment