Saturday, June 27, 2020

மானசரோவர் பயணம் பகுதி 04

துபாயிலிருந்து ஒரு ஆன்மீகப் பயணம்  நான்காம் (4) அத்தியாயம்.  ஆரம்பமாகின்றது. 😊

By சுபஸ்ரீஸ்ரீராம் (Subhasri Sriram)


இன்று ஜூன் 30ம் தேதி காலை. 

வழக்கம் போல, காலை எழுந்து பல் தேய்த்துக் குளித்தோம். பிறகு எங்கள் லக்கேஜ்களை இரண்டு பகுதிகளாகப் பிரித்தோம்..

முதலில் கைலாஷ் ட்ரிப்புக்குத் தேவையான துணி,மருந்து,டானிக் அனைத்தும் சேர்த்து 10கிலோ Duffle Bag ல் இருந்தது..  இவை மட்டும் தான் எங்கள் கைலாஷ் ட்ரிப்புக்கு கூடவே வரும்.. 

இரண்டாவது, நாங்கள் எடுத்துக்கொண்டு வந்த துணிகள் 4 சூட்கேஸில் இருந்தது.  எங்கள் குழுக்கள் அனைவரும், தங்கள் எக்ஸ்ட்ரா லக்கேஜ்  அனைத்தையும் பூட்டி, கீழே கொண்டு வந்தனர்.. ஹோட்டல் சிப்பந்திகள் சிலர், எங்களுக்கு உதவத் தயாராக இருந்தனர்.

அதாவது எங்கள் எக்ஸ்ட்ரா லக்கேஜ்களுக்கு,  முதலில் அவரவர் தங்கி இருந்த ரூம் நம்பரை, சாக் பீஸால் ஒவ்வொரு லக்கேஜ்களுக்கும் எழுதினர்.. பிறகு ரிசப்ஷனுக்கு அருகில் ஒரு பெரிய க்ளாக் ரூம் உள்ளது.. அதில் அனைவரின் லக்கேஜ்களும் பத்திரமாக வைத்தனர்..

Duffle Bag 10க் கிலோவுக்குள் இருக்கா என்று செக் பண்ண, ரிசப்ஷனில் ஒரு வெயிட் மிஷின் எங்களுக்காக வைக்கப்பட்டு இருந்தது. அவரவர் செக் பண்ணிக்கொண்டோம்..

மணி காலை நேபாள் நேரத்தில் 8.30..இவை முடிந்தவுடன், நேராக 3ம் தளத்தில் டிபன் சுடச் சுட ரெடியாக இருந்தது. சாப்பிட்டுவிட்டு  ரிசப்ஷனுக்கு  வந்தோம்.

சரியாக மணி காலை 8.50 . எல்லாரும் அடுத்து சிமிக்கோட் போக தயாராக இருந்தோம்..
எங்கள் குழுவில் மொத்தம் 120 பேர்..

சைனீஸ் எம்பஸியில் எங்கள் டூர் ஆப்பரேட்டர் தனித்தனி விசா எடுக்க அனுமதியில்லை என்ற காரணத்தால், 

1. First  Group Total - 62

2. Second Group - 12

3. NRI (US, Singapore, Australian Passport Holders)  - 18

4. Third Group - 26

இதில் இருவர் தவிர்க்க முடியாத காரணத்தால் வரவில்லை. அதனால் 118 பேர் தான்..

இதில் ஒவ்வொரு க்ரூப்பில் எத்தனை பேர் இருந்தாலும், ஒவ்வொரு க்ருப்புக்கும் சேர்த்து 1 விசா பேப்பர் தான்.. மொத்தம் 4 விசா பேப்பர் தான்..நாங்கள் Third Group.

ரிசப்ஷனில் எல்லா க்ரூப்பும் தயாராக இருந்தோம்..   டூர் ஆப்பரேட்டர், முதலில் NRI 18 பேரை  அழைத்தார். அவர்கள் 9 மணிக்கு ஏர்ப்போர்ட் போனார்கள்.. அடுத்து, முதல் க்ரூப்பில் உள்ள 11 பேரை list படிக் கூப்பிட்டார். இவர்களுடன் 2 டூர் ஆப்பரேட்டர் சேர்த்து 13 பேர்.. எங்கள் இருவரை மட்டும் கூப்பிட்டார்கள்.. எங்களுடன் வந்த எங்கள் குடும்ப நண்பர் கணேஷைக்(அவரும் Third Group) கூப்பிடவில்லை.

அடுத்த ட்ரிப்பில் வருவார்கள் என்று சொல்லிவிட்டார்கள்.. ஏர்ப்போர்ட் செல்வதற்கு, ஹோட்டல் வாசலில் வேன் தயாராக இருந்தது..  சரியாக  காலை 10 மணிக்கு, நாங்கள் வேனில் ஏறிக்கொண்டோம்.. 

அங்கிருந்து நேபாள்கஞ்ச் ஏர்ப்போர்ட்டுக்கு, சரியாக 12 நிமிடத்தில் வந்து சேர்ந்தோம்... ஏர்ப்போர்ட் ரொம்பச் சிறியது.. நாங்கள் கையில் ஹேண்ட் லக்கேஜ் அதாவது Back Bag செக்யூரிட் செக் இருந்தது..

Duffle Bag க்கு டூர் ஆப்பரேட்டர் எங்கள் 13 பேருக்கும், அவர்கள் 2 பேர் Bags களை,  அவர் எடுத்துக்கொண்டு போய் லக்கேஜ் செக்‌ஷனில் செக் பண்ணிட்டார்.. பிறகு Boarding Pass கொடுத்தார்கள்.. இங்கு பாஸ்ப்போர்ட் ஸ்டாம்பிங்க் கிடையாது..

நேபாள்கஞ்ச் ஏர்ப்போர்ட் வைட்டிங்க் ஏரியாவில் உட்கார்ந்துக்
கொண்டோம்.. மிகச் சிறியது..அங்கு விமானம், போவதற்கும், லேண்ட் ஆவதற்கும் ஆன ரன்வே மிகச் சிறியது.. நேபாள்கஞ்ச் மக்கள், காத்மண்ட் அல்லது மத்த இடத்திற்குச் செல்ல, டவுன் பஸ் போல, சிறிய விமானத்தில்  அடிக்கடி பயணம் பண்ணுகிறார்கள்.. அது அங்கு  உட்கார்ந்து இருந்த போது, கவனித்தேன்..  

நேரம் ஓடிக்கொண்டு இருந்தது.. விமானம் எங்களைக் கூட்டிச்செல்ல வரவில்லை.. நேபாள்கஞ்ச்சிலும், வானிநிலை திடீர் என்று மாறி, மேக மூட்டத்துடன் காணப்பட்டது.. அங்கு ஏர்ப்போர்ட்டில் வேலை செய்யும் அதிகாரி, எப்பவேணா மழை வரலாம் என்று ஹிந்தியில் சொன்னார்.. 


எங்களுக்கு முன்னாடிப் போன NRI's 18  பேர், Flight Cancel ஆகி ஹோட்டலுக்குத் திரும்பி விட்டார்கள்..  நாங்கள் 15 பேர் அப்படியே ஷாக்காகி, எங்கள் முறைக்காக ஏர்ப்போர்ட்டில் காத்துக் கொண்டு இருந்தோம். 

திடீர் என்று எல்லாருக்கும் ஷாக் ஆகறாப்ல ஒரு சம்பவம் நடந்தது..

அது என்ன??

மீண்டும் மானசரோவர் பகுதி தொடரும்... நாளை சந்திப்போம்..



No comments:

Post a Comment