Friday, June 26, 2020

மானசரோவர் பயணம் பகுதி 02

துபாயிலிருந்து ஒரு ஆன்மீகப் பயணம்  இரண்டாவது (2) அத்தியாயம்.  தொடர்கின்றது. 😊

 By சுபஸ்ரீஸ்ரீராம் (Subhasri Sriram)😊


மானசரோவர் பயணம் பகுதி (2)..


இரவு நன்கு உறங்கினோம் . இன்று ஜூன் 22ம் தேதி வெள்ளிக்கிழமை..

காலை எழுந்து, தினசரி கடமைகளை முடித்தோம். பிறகு  பெட்டிகளை எல்லாம் தயாராக பூட்டி வைத்துவிட்டு, ஹோட்டலில் நான்காம் தளத்தில் இருக்கும் ரெஸ்டாரண்டிற்கு போய், டிபன் சாப்பிடப் போனோம்..

 காலை டிபன் டீ, ஆலு பரோட்டா, தயிர், சப்ஜி, ப்ரட், ( நாங்க தமிழ் நாடு தெரிஞ்சுக்கிட்டாங்க போல) உளுந்துவடை இருந்தது... வடையைப் பார்த்தவுடன், என்னம்மோ தமிழ்நாடே என் கைக்குள்ள அடக்கமா இருக்கிறாப்ல ஒரு  ஃபீலிங்க்.. (வடை அவ்வ்வ்வ்வளவு சிறியது)... 

தேவைக்கேற்ப கொஞ்சமாக டிபன் எடுத்துக்கொண்டோம். அடுத்தடுத்து பயணம் செய்வதால், யாரும், யாரையும் சாப்பாட்டு விஷயத்தில பயமுறுத்தவில்லை..  

அங்கிருந்து மறுபடியும் ரூமிற்கு வந்து, செக் அவுட் செய்துக்கொண்டு, ஓலா புக் பண்ணினோம்...

கார் வந்தது.. முதலில் லக்கேஜை வைத்தோம். பிறகு நாங்களும் ஏறிக்கொண்டோம். 

அடுத்தது “காசி மாநகரை நோக்கிப் பயணம்”..  


அதனால் டெல்லி ஏர்ப்போர்ட்  போனோம்..  அங்கிருந்து வாரணாசிக்கு ஜெட் ஏர்வேஸ்ஸில் பயணம் செய்தோம்..கிட்டத்தட்ட 7 நாட்கள் இருந்து, பித்ருக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை செய்தோம்.. 

அடுத்து அயோத்தி சென்று,  ராமபிரானை தரிசித்தோம். அங்கு தமிழ்நாட்டிலிருந்து வந்த பாகவதர்கள், பஜன் மேளாவில் பாடிக்கொண்டு இருந்தார்கள். நாங்கள் ஏதேச்சையாக அரங்கினுள் சென்றோம். அங்கு கலந்துக் கொண்டது, எங்களுக்கே ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. 


தற்பொழுது  மீண்டும் மானசரோவர் தொடர்ச்சியை எழுதுகிறேன்..

சரியாக 2018 ம் வருஷம்,  ஜூன் 28ம் தேதி பல ஊர்களைப் பார்த்துவிட்டு, காரை புக் பண்ணிக்கொண்டு, சரியாக மாலை 5.30 மணிக்கு  லக்னோ வந்து சேர்ந்தோம்... எங்கள் டூர் ஆப்பரேட்டர், எல்லாரும் தங்குவதற்காக நல்ல ஹோட்டலை ஏற்பாடு செய்து இருந்தார்.

சென்னையில் இருந்து,  டூருக்கு வரும் அனைவரும் 28ம் தேதி சாயங்காலம்  சென்னை ஃப்ளைட்டில் ஏறி லக்னோ மாலை வந்தார்கள்...

எங்களைப் போல, மத்த நாட்டில் உள்ளவர்கள், பாஸ்போர்ட் கொடுப்பதற்காக 10 நாட்கள் முன்னரே வந்துவிட்டு, பிறகு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப வேறு இடம் சென்றுவிட்டு, லக்னோ 28 ம் தேதி மாலை  வந்து சேர்ந்தார்கள்.

ரூமிற்கு வந்து ஒரு குளியல் போட்டோம்.. பிறகு டின்னர் சாப்பிட 5ம் தளத்திற்குச் சென்றோம்..

அங்கு சுடச் சுட, சூப், டீ, காபி, பனீர் சப்ஜி, ஆலு சப்ஜி, அவல் உப்புமா, பூரி, தயிர் சாதம், குலோப் ஜாமூன், நாண், சப்பாத்தி இருந்தது. எது தேவையோ, அதைச் சாப்பிட்டுவிட்டு கான்ஃப்ரன்ஸ்   ஹால்  வந்தோம்.

டூர் ஆப்பரேட்டர் மீட்டிங்க் வைத்து  இருந்தார்கள். முடிந்தவுடன், ரூமிற்கு  வந்து தூங்கினோம். 

எங்கள் அனைவரின் கைலாஷ் பயணம்  29ம் தேதி இரவுலிருந்து 3ம் தேதிவரை தான்..  அதாவது,4 நாள் பகல், ஒரு இரவு மட்டுமே..லக்னோவில் இருந்து, திரும்ப வரும் வரை மட்டுமே..
அதற்கான தொகையைத் தான்  நாங்கள் அனைவரும் கட்டி இருந்தோம்.

ஆனால்  நடந்தது  என்ன?.  😳

பொறுமையாகப் படியுங்கள்.. 

மீண்டும் நாளை பயணத்தைத்   தொடருவோம்.  !!!  :)


No comments:

Post a Comment