Monday, June 22, 2020

கொரோனா கால திருமண வைபவம்

#கொரோனா கால திருமண வைபவம்

பெண் பார்க்கும் படலம்

* என்னடா, பொண்ண நல்லா பாத்தியா? அப்புறம், அது சரியில்ல, இது சரியில்லன்னு சொல்லக்கூடாது.

ஆமா, இங்க தெரியறதே கண்ணு மட்டும் தான்.  மாஸ்க்கை எடுக்க சொல்லுங்கப்பா. 

இங்க உட்கார்ந்திருக்கிறவங்களில் யாரு மாப்பிள்ளைன்னு பொண்ணுக்கு தெரியலையாம்.
மாப்பிள்ளை பையன் எந்த கலர் மாஸ்க் போட்டுருக்கார்னு சொன்னா சௌகரியமா இருக்கும். 

* என்னடா இது உன்னோட கல்யாண பத்திரிகைல மாஸ்க் குமார் வெட்ஸ் மாஸ்க் ப்ரீதா ன்னு ப்ரிண்ட் பண்ணியிருக்கு?

என்ன பண்றது? கல்யாணத்துக்கு பர்மிஷன் அப்பதான் கிடைக்குமாம். 

** இந்த புடவை கடைல கல்யாண புடவை வாங்கறவங்களுக்கு புடவைக்கு மேட்சா நாலு பட்டு மாஸ்க்கு ஃப்ரீயாம்.  இங்கயே வாங்கிடலாம்பா. 

அப்படியே மாப்பிள்ளை பட்டு வேஷ்டிக்கும் மாஸ்க் இருக்கான்னு கேளு.  இல்லாட்டி அங்க வஸ்திரத்தை கிழிச்சு தைக்க வேண்டியிருக்கும். 

** 
மனைவி : என்னங்க, நம்ம பொண்ணு கல்யாணத்திற்காக நகை சீட்டு கட்டியிருந்தோம் இல்ல, அதுக்கு குலுக்கல்ல வெள்ளி மாஸ்க் ப்ரைஸ் கிடச்சிருக்கு.  சீர் வரிசைல இத பாத்து எல்லாரும் மூக்கு மேல விரல் வைக்க போறாங்க! 

கணவன் :  மெதுவா பேசு, இப்பத்தான் அந்த கார்ப்பரேஷன் பையன் வந்து, வாய், மூக்கு, கண் மேல விரல் படக்கூடாதுன்னு சொல்லிட்டு போனான், அப்புறம் நம்ம இரண்டு பேரையும் குவாரன்டைன்ல போட்டுற போராங்க. 

* மனைவி :  என்னங்க, நாளைக்கு எதிர் வீட்டு மாலதி பொண்ணுக்கு கல்யாணமாம். Zoom Invite அனுப்பிச்சிருக்காங்க. 
அறுசுவை நடராஜன் சாப்பாடு Swiggy-ல ஆர்டர் பண்ணியிருக்காங்களாம். 
இப்பத்தான் மாலதி வாட்ஸப்பில் மெசேஜ் பண்ணா. 

கணவன் : அப்போ நான் Google Pay -ல் பணம் கிஃப்ட் பண்ணிடறேன்.  

* வாத்தியார் : சீக்கிரம் பொண்ண மாஸ்க் மாத்திண்டு வர சொல்லுங்கோ. முகூர்த்தத்திற்கு நேரமாரது. 

* பெண்ணின் அம்மா : சம்பந்தி அம்மா, என்ன இது? இவ்வளவு மாஸ்க்கு ஒரே சமயத்தில் கேட்டா, நாங்க என்ன செய்வோம்?  அதுவும் ஒரே கலரில் வேற கேக்கறீங்க! 
ரவிக்கை துணி கூட வேற வேற கலரில் தான் கிடைக்கும். 

கல்யாண பெண்ணின் அத்தை : 
என்னங்க, ரெடியாகிட்டீங்களா? நம்மோட அலாட்டட் டைம் 10:30 டு 10:45, அதுக்குள்ள நாம மாப்பிள்ளை பெண்ணை ஆசிர்வாதம் பண்ணிட்டு ரூமுக்கு வந்துடணும். Social distancing எல்லாம் நல்லா தான் ப்ளான் பண்ணிருக்கா ! 

அத்திம்பேர் : அது சரிடி, ஆனா,  மாஸ்க் போட்டுண்டு நாம போகும் போது அவா ரெண்டு பேருக்கும் அத்தைனு தெரியுமா இல்ல சித்தினு தெரியுமா?  குழப்பமா இருக்குமே? 

**
பெண்ணின் அக்கா தன் கணவரிடம் : 
ஏங்க, அங்க மூலையில மாஸ்க் போட்டுண்டு தனியா சேரில் உட்கார்ந்திருக்காரே அவர் யாரு, உங்க ஃப்ரெண்டா? ஜுஸ் எல்லாம் கொடுத்து கவனிக்கிறீங்களே! 

கணவர் : அவர் தினமும் நம்ம வீட்டிற்கு காலையில் வந்து “எல்லாரும் நல்லா இருக்கீங்களா”ன்னு கேட்பாரே, அந்த பையன் தான்.  இன்னிக்கு நம்ம வீட்டில் ஸ்பெஷல் ட்யூட்டியாம். அதான், செக் பண்ண வந்திருக்காரு. 

*மனைவி : என்னங்க, ரிடர்ன் கிஃப்ட் கொரியர்ல அனுப்பிச்சிருக்காங்க.  
ஒரு பாட்டில் சானிடைசர், நாலு மாஸ்க்கு, ஹேண்ட் வாஷ் ஒண்ணு. நல்ல ஐடியா இல்ல ! 

கணவன் : இரு இரு. அதையெல்லாம் அப்படியே ஓரமா வச்சிட்டு, நீ முதல்ல நம்ம வீட்டு சோப்பில ஹேண்ட் வாஷ் பண்ணு. 

**
மாப்பிள்ளையின் அப்பா :  அதான் அவன் இஷ்டப்பட்ட பெண்ணையே லாக்டவுன் பீரியட்டா இருந்தாலும் கல்யாணம் பண்ணி வெச்சாச்சே! இன்னும் என்ன வேணுமாம் உன் மகனுக்கு? 

மாப்பிள்ளையின் அம்மா : 
பொண்ணோட அம்மா இப்பத்தான் வந்து சொல்லிட்டு போனா.  வாத்தியார் சாந்தி முகூர்த்தத்தை லாக் டவுன் முடிஞ்சதுக்கு அப்புறமா வெச்சுக்க சொல்லிட்டாராம் அதான்...

***vasanthi. J

No comments:

Post a Comment