Wednesday, June 24, 2020

இராம ஜென்ம பூமி முதல் கிருஷ்ண ஜென்ம பூமி வரை பகுதி 27

இராம ஜென்ம பூமி முதல் கிருஷ்ண ஜென்ம பூமி வரை பகுதி 27 
( Sujatha &Venkatesan 6381369319)
மணி. ஒன்னாயிடுத்து. பசியில வழியில இருந்த ஓட்டல்ல பராத்தா சாப்பிடறோம். பயங்கர காரம். மறுபடியும் ரூமுக்கு போக ஆட்டோ பஸ் எதுவும் இல்லை. நடந்தே போறோம். ரூம காலி பண்ணின்டு ஸ்டேஷன் போய் எதாவது ட்ரெய்ன் பிடிச்சி மதுரா போகலாம்கறார். ஸ்டேஷன்ல பொண்ணுகிட்டேர்ந்து போன்.(இது 2012 பெண் கல்யாணமாகி அமெரிக்காவில். என்னிடம் நோகியா போன்).ரொம்ப நாளைக்கு அப்பறம் ஆசையா பேசலாம்கறத்துக்குள்ள ட்ரெய்ன் வந்துடறது...கூட்டமான கூட்டம்...எப்படியோ அடிச்சி பிடிச்சி நிக்க எடம் கெடைக்கறது. ரெண்டு மணி நேரத்துல டெல்லி அங்க உக்கார  எடம் கெடைக்கும்கறார். நெரிசல்ல பக்கத்துல ஒரு தமிழ் கூலி குடும்பம். தனுஷோட கொல வெறி கொலவெறி பாட்டை கேட்டுண்டு வரா..எனக்கு இவர் மேல கொல வெறி வரது.
டெல்லி நெருங்கறது.  உக்காந்தவா எழுந்திருக்க ஆரம்பிக்க அப்பாடான்னு ஒரு எடம் கெடைச்சு உக்கார்ரோம்.  திடீர்னு ஒரு போர்ட்டர் ஜன்னல் வழியா உடம்ப நுழைச்சு உள்ள வந்து எங்க எல்லாரையும் தள்ளி விட்டு ஒரு துண்டை விரிச்சு எல்லா சீட்டும் ரிசர்வ்ட்னு அறிவிச்சு உள்ள நுழையறவாகிட்ட ஒரு எடம் 100/- ரூபாய்க்கு வித்துட்டு காணாம போறான். எங்கள நசுக்கி ஓரத்துல தள்ளிட்டு ரிசர்வ்ட் பாசஞ்சர. கீழே மேல எல்லா எடத்துலயும்.  இவர் இன்னும் ஒரு மணி நேரம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கறார். 
திடீர்னு எலி செத்த நாத்தம்.  குடலை புரட்டறது. ஷூவை கழட்டிட்டு சாக்ஸோட மேல ஏறின மகானுபாவன் காலை எங்களுக்கு நேர தொங்கப்போட்டுண்டு வரான். இவர்ட்ட சொல்ல அவன்ட அரை குறை இந்தில இவர் என்னவோ சொல்ல அவன் சுத்தமான இந்தில இவரப்பாத்து கத்தினதோட அர்த்தம் புரியாததுக்கு நம்ம திராவிட கட்சிங்களுக்கு இவர் நன்றி சொல்றார். 
 எப்படியோ மதுரா வந்து நரகத்துலேர்ந்து விடுதலையாறோம்.  
இந்த தடவையும் மதுராவை தரிசனம் பண்றோம். 
மீண்டும் 2005….
மதுராலேர்ந்து ஆக்ரா பஸ் ஏறரோம்…
இவர் ஃபரெண்டோட போன கஜுராஹோ டூர் கட்டுரைல ஆக்ரா,தாஜ்மகால் பத்தி வேண மட்டும் எழுதிட்டதால உங்க. போர் அடிக்க விரும்பலை.  
ஆக்ரா ஸ்டேஷன் வரோம். வெய்ட்டிங் லிஸ்ட்ல ஒரு டிக்கெட் கன்பர்ம் ஆகி RAC கெடைச்சுது. 

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இனி இவர் பேசுகிறார்...
நான் வெங்கடேசன் பேசுகிறேன்.  
பொறுமையுடன் எங்கள் கட்டுரையை படித்த அனைவருக்கும் நன்றி.  
TTR வந்தார். 
இன்னொரு டிக்கெட் கெடைக்குமாங்கறேன் ..அவர் தன் உதட்டை என் காதுல வச்சு பசாஸ் ருப்யாங்கறார். நான் இது நியாயமா தர்மமா என யோசிச்சு பணத்தை எடுக்கறதுக்குள்ள வேற பார்ட்டி எடத்தை ரிசர்வ் பண்ணிக்கறது.  இவள் குருஷேத்திர கண்ணனா உபதேசம் பண்ணாமா ஒரு எடத்துல ரெண்டு பேர் உக்காந்து வர கஷ்டத்துக்கு நான்தான் காரணம்னும் இனிமே என்னை நம்பி ஒரு டூரும் வர மாட்டேன்னும் கத்திண்டே வரா..(அதுக்கப்பறம் அடுத்த பதினைஞ்சு வருஷம் எத்தனையோ ஊருக்கு வந்துட்டா)....
மே மாத வெயிலில் நெருப்பை வாரி இறைத்தபடி செல்லும் ட்ரெயினில் எதையும் காதில் வாங்காமல் அடுத்த பயணம் குறித்த சிந்தனையில் ஆழ்கிறேன்.  
                  முற்றும்

(அடுத்து நாங்கள் சென்ற ஊர்கள் தூரம் தங்குமிடம் ஓட்டல் போன்ற விவரங்கள் உங்கள் பயணத்திட்டத்திற்கு. நாளை முதல்...இன்று தொடர்ந்து திருமதி சுபஶ்ரீ எழுதும் கைலாஷ் பயணம் ஆரம்பமாகும்.   பின்னர் எனது மற்ற பயணங்கள்.  
நண்பர்கள் தங்கள் பயண க்கட்டுரைகளை எனக்கு (6381369319)அனுப்பினால் பல குழுக்களில் பிரசுரமாகும்...

No comments:

Post a Comment