*துபாயிலிருந்து ஒரு ஆன்மீகப் பயணம் ஆறாவது (6) அத்தியாயம். ஆரம்பமாகின்றது. 😊
By. சுபஸ்ரீஸ்ரீராம்
(Subhasri Sriram Dubai)*
இன்று ஜூன் 30ம் தேதி மதியம் 3 மணி..
ஒரு வழியாக சிமிகோட் வந்து இறங்கினோம். அங்கு உள்ள அதிகாரி, இன்று க்ளைமேட் மிக மோசமாக இருந்தது. ஏற்கனவே விமானம், ஹெலி எல்லாம் வானிலைனால நிறுத்தப்பட்டது.
நேபாள்கஞ்ச்லிருந்து, உங்கள் ஹெலி நல்லபடியாக வரணுமே என்று எல்லாரும் கவலைப் பட்டோம். நல்லபடியாக தரை இறங்கிவிட்டீர்கள் என்று சொன்னார்..
கடவுளுக்கு நன்றி..
வீடியோவில் பார்த்தாலே தெரியும். அவ்வளவு சந்தோஷம்...
சின்ன ரன்வே தான்.. அதைச் சுற்றி மலைகள். பாக்கவே அவ்வளவு ரம்மியமாக இருந்தது.. மெதுவாக ஏறி எங்கள் இடத்து ரிசார்ட் அடையும் போது, மணி 3.40 மாலை..
அங்கு உள்ள இன்சார்ஜ் ரூம் கீ கொடுத்தார். எங்கள் ரூம் நம்பர் 5.. மொத்தம் 12 ரூம்கள். கீழ 6 ரூம். மேல 6 ரூம்.. ஒவ்வொரு ரூமிற்கு 6 பேர்கள்.. எங்கள் லக்கேஜ்களை வைத்துவிட்டு, நேராக ரிசார்ட் ரெஸ்டாரண்ட்க்கு வந்தோம்..
எங்களுக்காக சாப்பாடு டீ சமோசா இருந்தது.. வந்தக் களைப்பைப் போக்குவதற்காக சூடாக டீ குடித்தோம்.
கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு ரூமிற்குச் சென்றோம்.
சிறிது நேரம் ரெஸ்ட் எடுத்துவிட்டு, வெளிய வரும் போது டிபன் தயார் என்று ஆள் சொன்னார்.. உடனே அனைவரும் ரெஸ்டாரண்டிற்கு வந்தோம்..
இரவு சுடச் சுட, பருப்புக் கிச்சடி, மோர்க்குழம்பு, தேங்காய் புலவு, வடநாட்டு சர்க்கரைச் சாதம், சுட்ட அப்பளம், ஊறுகாய்.... சாப்பிட்டுவிட்டு ரூமிற்கு வந்துவிட்டோம்.
சாயங்காலம் செம்மக் குளிராக இருந்தது..
எல்லாருக்கும் டயர்ட்டாக வேறு இருந்தது.,..
சுபம்,(Tour Operatior), நாளை சீக்கிரம் குளித்துவிட்டு, ஹில்சா போக ரெடியாகுங்கள் என்று சொன்னார்.
நாளைக் காலை சிமிக்கோட்டிலிருந்து, ஹில்சா ஹெலி வழிப்பயணம் இருக்கின்றது.. சீக்கிரம் கைலாஷ் தரிசனம் பண்ணப்போகின்றோம், என்ற சந்தோஷத்தில் நேபாள் நேரத்திற்கு இரவு 9,30க்கு எல்லாம் படுத்துவிட்டோம்.
இயற்கையுடன் போட்டிப்போட யாரால் முடியும்.. அவ்வளவு கொள்ளை அழகு..
நாளை ஜூலை 1ம் தேதி..
மீண்டும் மானசரோவர் பகுதி தொடரும்... நாளை சந்திப்போம்.. !!! 😊
சிமிக்கோட் ரன்வே உலகத்திலேயே மிகச் சிறியது. கொஞ்சம் அபாயகரமான ரன்வே. நல்லத் திறமைசாலிகள் வேலை செய்யும் இடம்
No comments:
Post a Comment