🌸🌸🌸🌸🌹4🌹🌸🌸🌸🌸🌸
வட இந்திய பயணத்திட்டம் வழி தங்குமிடம் உணவு பார்க்க...பகுதி 4
சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள 6381369319
நைனிடால் ...சென்னையிலிருந்து 2300 கிமீ
சென்னையிலிருந்து டெல்லி செல்ல வேண்டும் .அங்கிருந்து ட்ரெயின் எனில் காத்கோடம் அல்லது ஹல்த்வானி செல்ல வேண்டும்
The nearest railway station to Nainital is Kathgodam. The distance from Kathgodam to Nainital city is approximately 35 km, which takes roughly around 1 hour by cab.
டெல்லியிலிருந்து பஸ் கேப் வசதிகள் உள்ளன
ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன..அருகிலுள்ள பீம்தால் ராணி கேத் போன்ற இடங்களிலும் குறைந்த செலவில் தங்கி இமயத்தின் அழகை கண்டு களிக்கலாம்.
ஆன்மீக தலங்களுக்கும் (நைனா தேவி etc)இமயத்தின் மடியில் பஞ்சமில்லை.
நைனிடால்: இயற்கை காதலர்களின் சொர்க்கபூமி!
பனிமூட்டம் கொண்ட மலைச்சிகரங்களும் வானுயர்ந்த மரங்களும், பறவைகள் எழுப்பும் இனிய ஓசைகளும், சிலுசிலுவென சிலிர்த்து ஓடும் நீர்நிலைகளும், ஆங்காங்கே மலையிலிருந்து குதித்து விழும் நீர்வீழ்ச்சிகளும் என இயற்கையை அதிகம் நேசிப்பவர்களுக்கு ஏற்ற இடமாக அமைந்திருக்கிறது நைனிடால். இந்த நகரம் முழுவதும் நிலப்பரப்பு குறைவு. நீர்நிலைகள் அதிகம். அதனால் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் என்பதுதான் ஹைலைட்டான விஷயம். நகரத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும், நைனிடால் என்கிற ஏரியின் பெயரால்தான், இந்த நகரம் அழைக்கப்படுகிறது. கண்ணுக்கெட்டும் தூரம் வரை பரவிக்கிடக்கும் இந்த ஏரியைச் சுற்றியுள்ள, இயற்கைக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே படகு சவாரிசெய்யும் சுகம் அலாதியானது.
இங்கு இருக்கும் மலைச் சிகரங்களில் மிகவும் உயர்ந்தது நைனி பீக். இது நகரத்தின் மையத்தில் இருந்து 7 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. 2,610 மீட்டர் உயரமுள்ள இந்த மலைச் சிகரத்திலிருந்து பனி மூடிய இமயமலைச் சிகரங்கள் மற்றும் நகரின் எழிலைக் காணும் காட்சி, ஆயுள் முடியும் வரை அகக்கண்விட்டு நீங்காது.
புகழ்பெற்ற கேங் கார்டன் அற்புதமானது. இங்கு ஆங்காங்கே சிறுசிறு குகைகள் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்படி அற்புதமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகள் விளையாடுவதற்கு இந்த கேங் கார்டன் ஏற்ற இடம். பனியால் மூடப்பட்ட இமயமலை சிகரங்களை இங்கு உள்ள `ஸ்னோ வியூவ்’ முனையில் இருந்து காணலாம். 2,270 மீட்டர் உயரமுள்ள இந்தச் சிகரத்திலிருந்து வடக்கு இமயமலை மலைச்சிகரங்களின் அழகை நம்மால் முழுமையாகக் கண்டு ரசிக்க முடியும்.
லேண்டு எண்டு என்கிற பகுதி, நகரத்தின் மையத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3,120 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள, இந்தப் பகுதியிலிருந்து சுர்பாடால் என்ற ஏரியைக் காண்பது பேரானந்தம். தூரத்திலிருந்து பார்க்க, அந்த ஏரி ஒரு பசுவைப் போன்று காட்சியளிக்கும். நகரின் கடைசிப் பகுதியான இதில் நின்றுகொண்டு, நகரின் ஒட்டுமொத்தக் காட்சியையும் பார்த்து ரசிப்பது அற்புதமான அனுபவம். ஆனால், கொஞ்சம் ஆபத்தும் இருக்கிறது. இந்தப் பகுதியில் சில இடங்களைக் கவனமாகக் கடக்க வேண்டும் என்கின்றனர் சிலர். சம்மரில் மட்டும் இல்லாமல், வருடத்தின் எல்லா நாள்களிலும் மிதமான தட்பவெப்ப நிலையை நைனிடால் கொண்டிருப்பது சுற்றுலாப் பயணிகளுக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம்.
ஆன்லைன் பேக்கேஜ்: மூன்று பகல் இரண்டு இரவு முசோரியில் தங்கி சுற்றிப்பார்ப்பதற்கு ரூ.8,000-லிருந்து பேக்கேஜ்கள் கிடைக்கின்றன. இந்த பேக்கேஜில் சைட் சீயிங், தங்குமிடம் மற்றும் உள்ளூர் போக்குவரத்து போன்றவை மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன.
எப்படிச் செல்வது?: நேரடியாக நைனிடாலுக்கு விமானப் போக்குவரத்து கிடையாது. டேராடூன் விமானநிலையம் சென்றுதான் அங்கிருந்து நைனிடால் வர வேண்டும். டேராடூன் விமான நிலையத்திலிருந்து 173 கி.மீ தொலைவில் நைனிடால் அமைந்திருக்கிறது. உத்தரகாண்டிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கத்கோடம் ரயில்நிலையத்துக்கு இந்தியாவின் பல நகரங்களிலிருந்து ரயில் போக்குவரத்து இருக்கிறது. இங்கு இருந்து நைனிடால் 35 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது.
நாளை டேராடூன் ,முசௌரி..
No comments:
Post a Comment