Wednesday, June 24, 2020

கிழமையும் மகத்துவமும்

சித்தர்களின் தற்காப்பு கலை ஜோதிடம் 

கிழமையும் மகத்துவமும் 

எந்தந்த வேலையை எந்தெந்த கிழமையில் செய்தால் வெற்றியும் தோல்வியும் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்

வாரம் என்பது  பிருத்வி தத்துவத்தை குறிக்கும் 

முக்கியமான அனைத்து விஷயங்களும் வாரம் மட்டுமே முடிவு செய்யும்

பிறப்பின் தத்துவத்தை சொல்லுவது வாரம்

வாரத்தின் ஆண்-பெண் உதயம் இருக்கிறது

வாரத்தில் முக்கியமாக பார்க்கவேண்டிய விதி

வார சூனியம் 
வார பூரணம்
வார திதி ஜயிக்கயம் 
வார ஆண் பெண் 
வார  உதயம் அஸ்தமனம் 

இது போன்ற இன்னும் பல்வேறு விவரங்கள் இருக்கிறது

1 நம் வணங்கும் தெய்வம் நமக்கு பூரண அருள் செய்ய வேண்டும் என்று நினைத்தால் வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று 
பூஜை விரதம்  ஜெபம் ஹோமம் தவம்  செய்தால் நன்று  

பகல் 30 நாழிகை மட்டுமே பலனுண்டு

2 நமக்கு முற்றிலுமாக அனைத்து நோய்களும் தீர வேண்டும் என்றால்
அல்லது கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் முதலில் எடுக்கக்கூடிய மருந்தை தேய்பிறை செவ்வாய்க்கிழமை 
எடுத்தால்  வியாதி தம்பனம் ஆகும்

இதனை சோதனை செய்து பாருங்கள் வெற்றி கிடைக்கும்

3 ஆத்ம ஞானம் முப்பு ஆய்வில் இருக்கக்கூடிய  பெரியவர்கள் 
ஞான நிலையை விரும்பும் அனைவரும் வளர்பிறை வியாழக் கிழமை பகலில் தெற்குநோக்கி தனது அந்த செயலை செய்தால் வெற்றி கிட்டும்

இதற்கு நிறைய விதிகள் உண்டு அதற்கான விதிகளை தருகிறேன்

4 பெண்கள் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது தேய்பிறை செவ்வாய்கிழமை மட்டுமே குளிக்க வேண்டும் 

5 வளர்பிறையில் செவ்வாய்கிழமை
குளித்தால் கணவனின் ஆயுளுக்கு பங்கம் ஏற்படும்  

6 ஆண்கள் தன் தேகத்தை கட்டுமஸ்தாக
வைத்துக்கொள்ள  
வீரியமும் அழகும் கூட 
வளர்பிறை சனிக்கிழமை 
தேய்பிறை புதன் கிழமை மட்டுமே குளிக்க வேண்டும் 

இது மிக முக்கியம் செய்து பாருங்கள் வெற்றி கிட்டும்

7 தலை முடி வெட்ட சவரம் செய்ய தேய்பிறை வெள்ளிக்கிழமை செய்தால் நல்லது 

8 ஆப்ரேஷன் செய்து கொள்ள தேய்பிறை செவ்வாய்க்கிழமை செய்வது நல்லது

9 நகம் வெட்ட வளர்பிறை புதன்கிழமை செய்வது மிக மிக நல்லது

நல்ல கணவன் அமைய
நல்ல மனைவி அமைய 
வீட்டில் பொன்பொருள் 
ஆபரணங்கள் சேர
நல்ல உத்தியோகம் கிடைக்க 
செய்யும் தொழில் விருத்தி ஏற்பட
நல்ல குழந்தைகள் பெற்று எடுக்க ஆண் வாரிசு கிடைக்க
நல்ல ஆயுள் 
தேக ஆரோக்கியத்துடன் இருக்க
இது போன்ற பல்வேறு விஷயங்களுக்கு  எந்த கிழமை  எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொண்டால் வெற்றி கிட்டும்

பஞ்சாங்க விவரங்களை தெரிந்து கொண்டாலே அனைத்து விவரங்களும் அறிந்து வெற்றிகொள்ள முடியும் தற்போது உள்ள ஒரு சிலரை தவிர பஞ்சாங்கங்களில் படிப்பதும் இல்லை பார்த்ததும் இல்லை  கம்ப்யூட்டரில் ஜாதகத்தை கணித்து பலன்களை சொல்லிவிட்டு சரியாக இருந்தால் மட்டுமே பெரிய ஜோதிடராக முடியாது தனக்கு  வரும் இன்னல்களை தற்காத்துத் தெரியாதவன் எப்படி பெரிய ஜோதிடராக முடியும்

தற்காப்பு கலை ஜோதிடம் ஜோதிடத்தைக் கற்றுக் கொள்ளுங்கள் வெறும் பலன் சொல்லும் ஜோதிடத்தை கற்றுக் பயன் கிடையாது 
பிறருக்கு பயனடையும் மட்டுமே ஜோதிடம் உருவாக்கப்படவில்லை தனக்கும் சேர்த்து தான் அது இது பல ஜோதிடருக்கு தெரியாது
பழமையான ஜோதிட நூல்களில் இந்த விவரங்கள் இருக்கிறது தேடி கண்டுபிடித்து படியுங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்

சித்தர்களின்சித்தர்கள் நவகிரகத்தில் வைத்து  வெறும் கணிதத்தின் மட்டும் சொல்லவில்லை 
அதையும் கடந்து முக்கியமான விஷயங்கள் அதில் தான் வைத்துள்ளார்  

இந்த நவகிரகத்தை எவனொருவன் சரியாக புரிந்துகொண்டால் 
அவனை வாதம் வைத்தியம் யோகம் ஞானம் என்ற படிநிலை அனுபவங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் 

அரைமணிநேரத்தில் அஷ்டகர்மம் விளையாட்டை விளையாடுவான்

இது போன்ற இன்னும் பல்வேறு தகவல்களை அடுத்த பதிவில் பார்ப்போம் 

கல்யாண கிருஷ்ணன் 
பஞ்சாங்க ஆய்வாளர்
சென்னை

No comments:

Post a Comment