துபாயிலிருந்து ஒரு ஆன்மீகப் பயணம் By Subasree
ஆரம்பமாகின்றது. 😊மானசரோவர் பயணம் பகுதி (1)...
மானசரோவர் பயணம் என்பது, என் அனுபவத்தில், நம் நம்பிக்கையையும், பொறுமையையும் ஒரு சேர உணரவைப்பதற்காகத் தான் இருக்கின்றது.
சில விஷயங்களை, வார்த்தைகளால் வர்ணித்துவிடலாம்.. ஆனால் இயற்கை சார்ந்த விஷயங்களை நாம் பார்த்து, மகிழும் போது தான், அவை நம் மனதில் நிறைவு பெறுகின்றது...
பயணக்கட்டுரை யார் வேண்டுமானாலும் எழுதலாம்.. ஆனால் நாம் போய்ட்டு வந்த அனுபவத்தை உணர்ந்து எழுதும் போது, அவை ஒருத்தருக்காவது பயன்பட்டாலும், என்னைப் பொறுத்தவரை வெற்றி தான்...
யாருக்கெல்லாம் இந்தப் பயணம் பயன்படும் என்று நினைக்கின்றீர்களோ, அவர்களுக்காக, நீங்கள் உங்க டைம் லைனில் ஷேர் செய்யுங்கள்.
சரி என்னுடன் வாருங்கள்.. பயணிப்போம்.. :)
கைலாஷ் மானசரோவர் யாரெல்லாம் போகலாம்?. எல்லாருமே தரிசனம் செய்யப் போகலாம்.. ஆனால் அதற்கு முக்கியமாக தேவை ஒன்றே ஒன்று தான் .ஆம் நமக்கு ஆழ்ந்த நம்பிக்கையும், ஆர்வமும் இருந்தால் போதுமானது.
கைலாஷ் போவதற்கு இரண்டு வழிகள் உள்ளது..
1. முதல் வழி டெல்லி, நேபாள், காத்மண்ட், தார்சண்ட், லாசா, புரங்க், மானசரோவர், கைலாஷ்.. இந்த வழி கிட்டத்தட்ட 2500 கிலோமீட்டர் கூடுதலாக இருக்கும்.
2. இரண்டாவது வழி. டெல்லி, லக்னோ, நேபாள்கஞ்ச், சிமிகோட், ஹில்சா, சைனா பார்டர், புரங்க்,மானசரோவர், கைலாஷ்.. முதல் வழியைக் காட்டிலும், இது கொஞ்சம் சுலபமான வழியாக இருக்கும். ஆனால் வானிலை மாற்றத்திற்கு ஏற்ப நாம் பயணம் செய்வோம்..
இரண்டாவது வழியில் சின்ன விமானம்(18 Seater), Helicopter (6 Seater) இருக்கும். இவற்றில் தான் பயணம் செய்ய வேண்டும்....
சுபஸ்ரீயாகிய நானும், என் கணவர் ஸ்ரீராம் அவர்களும், துபாயிலிருந்து, ஜூன் 2018ம் வருடம் 20ம் தேதி இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றோம்.. எங்கள் குடும்ப நண்பர் கணேஷ் அவர்கள், கத்தாரிலிருந்து டெல்லி புறப்பட்டார். எங்கள் குழுவில் 120 பேர் கைலாஷ் வருவதால், எங்களைக் கூட்டிச் செல்லும் டூர் ஆப்பரேட்டர், க்ரூப் விசா எடுத்து இருந்தார்கள்.. 21ம் தேதி காலை டெல்லியை அடைந்தோம்... அங்கிருந்து, அருகில் உள்ள ஹோட்டலுக்குச் சென்று ரெஸ்ட் எடுத்தோம். பிறகு, எங்கள் பாஸ்போர்ட்டை நொய்டாவில் கொடுப்பதற்காக, டெல்லியிலிருந்து காரில் புறப்பட்டோம்.. (இங்கு துபாயில் சைனீஸ் தூதரகத்தில், கைலாஷ் போக தனியாக விசா எடுக்க அனுமதியில்லை..)
ஆபிஸ் போய், அவர்களைச் சந்தித்தோம். லக்னோவில் எல்லாருடைய பாஸ்போர்ட்டையும் தருவதாகச் சொன்னார்கள்...நொய்டாவில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, திரும்ப டெல்லி வந்து ஒரு நாள் நன்கு சுத்தினோம்..
டெல்லி, நம் தலை நகர் தான். பச்சை பசேல் என எங்கு பார்த்தாலும் மரங்கள்.. எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது... என்ன தான் மேல் தட்டு மக்கள் இருந்தாலும், அடித்தட்டு மக்கள் தங்களுக்குத் தெரிந்த வேலை, தொழிலை செய்துக்கொண்டு வாழ்க்கையை நகர்த்துகின்றார்கள். நிறைய பான் கடைகள் இருக்கின்றது. நிமிடத்தில் தயார் செய்து கொடுக்கின்றார்கள்... வெயில் கொஞ்சம் ஜாஸ்தி தான்..இருந்தாலும் அழகாகத் தான் டெல்லி இருக்கின்றது.... இரவு நண்பர் வீட்டுக்குச் சென்று டின்னர் முடித்துவிட்டு ரூமிற்கு வந்தோம்..
பகுதி (1).. வாருங்கள். மானசரோவருக்கு பயணம் செய்வோம்.. !!! 😊

No comments:
Post a Comment