நமது பூஜை அறையில் செம்பு பாத்திரத்தில் நீர் வைத்து பூஜை செய்வதனால், இவ்வளவு நன்மைகளா? தெரிந்து கொள்வோமா
# நாம் தினந்தோறும் பூஜை செய்யும் போதும் பூஜைக்காக சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்வதற்காக எச்சில் படாத உணவுகள், பழங்கள் ஆகியவற்றை நாம் கடவுளுக்கு வைக்கலாம்.
# மண் பானையிலேயோ அல்லது செம்பு பாத்திரத்திலேயோ தண்ணீரை நிரப்பி வைப்பது மிகவும் நல்ல பலனை கொடுக்கும்.
# பூஜை செய்யும் போது நமக்கு தெரிந்த அளவு மந்திரங்களை உச்சாடனம் செய்ய வேண்டும். அவ்வாறு மந்திரங்களை உச்சாடனம் செய்யும் போது அதில் இருக்கும் நேர்மறையான அதிர்வலைகள் அந்த தண்ணீரில் இறங்கும். இவ்வாறு செய்து அந்த தண்ணீரை அருந்துவதால் நன்மைகள் உண்டாகும்.
# எந்தக் காரணத்தை முன்னிட்டும் இரும்புப் பொருள்களை பூஜைக்குப் பயன்படுத்தக்கூடாது. இரும்பு யமனுக்கு உரியது. இரும்பினால் நேர்மறை சக்திகளை கிரகிக்க முடியாது.
# வெள்ளி, தாமிரம், ஈயம் பூசிய பித்தளை, மண்ணால் ஆன பூஜைப் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம்.
# ஒவ்வொரு நாளும் பூஜை அறையில் செம்பு பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீரை மாற்றி விட வேண்டும்.
அந்த பூஜை செய்த தண்ணீரை, மறுநாள் வீட்டின் கூரையிலோ அல்லது கால் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும். இதனால் வீட்டில் துர்சக்திகள் நுழைவது தடுக்கப்படும்.
# பூஜையின்போது மணியின் இனிய ஓசையானது தீய சக்திகளை விரட்டி, தெய்விக சக்தியை வீட்டில் நிலவச் செய்யும் வல்லமை கொண்டது.
# தினமும் மணியோசை எழுப்பி, செம்பு பாத்திரத்தில் நீரூற்றி வைத்து
பூஜை செய்பவர்களின் வீடுகளில் தெய்வ கடாட்சம் நிரம்பி, ஆரோக்கியமும் சகல சௌபாக்கியங்களும் பெருகும்.
No comments:
Post a Comment