Tuesday, June 30, 2020

மானசரோவர் பயணம் பகுதி 07

துபாயிலிருந்து ஒரு ஆன்மீகப் பயணம் ஏழாவது (7) அத்தியாயம்.  ஆரம்பமாகின்றது. 😊

இன்று ஜூலை 1ம் தேதி. 

காலையில் 5 மணிக்கு எழுந்து, பல் தேய்த்துவிட்டுக் குளிக்கப் போனோம்.. தண்ணீர் செம்ம ஜில்லிப்பாக இருந்தது.. எப்படியோ மேனேஜ் செஞ்சுக் குளித்தோம்..

வெளியில் சூரிய பகவான் தெரிந்தார். மனசுக்குள் ஒரு மத்தாப்பாக சந்தோஷம், என்னுள் வெடித்துக் கிளம்பியது..ஆஹா இன்று ஹில்சா கிளம்பி விடுவோம்னு ஒரு நம்பிக்கைத் துளிrவிட்டது..

நானும், ஸ்ரீராமும் Back Bag, Duffle Bag  எல்லாத்தயும் தயாராக ரூமில் வைத்துவிட்டு, டீ குடிக்க ரெஸ்ட்டாரண்ட் போனோம்.. சுபத்திடம் எப்பொழுது கிளம்பனும்னு கேட்டோம்.

சிமிக்கோட்ல மத்த பேர் இருக்காங்க.. அவங்க அங்கேர்ந்து கிளம்பிட்டாங்கன்னு சொன்னவுடனே, நீங்க தயாரா இருங்க.. அடுத்தது நீ்ங்க் ஹில்சா போகலாம்னு சொன்னாரு. சரின்னு சொல்லிட்டு ரூமுக்கு வந்தோம். எங்க ஃப்ரண்ட் கணேஷ் இன்னும் வரலை..   :(

திடீர் என்று, எங்கிருந்தோ மேகங்கள் வந்து, மழைப் பெய்ய ஆரம்பித்தது. உடனே எல்லாம் கேன்சல் ஆகி, இங்க தான் இருப்போம்னு சுபம் சொல்லிட்டாரு.. 

எங்கள் எல்லாருக்கும் மூட் அவுட் ஆகிவிட்டது.. ரூமிலேயே  சிறிது நேரம் நாங்க உட்கார்ந்திருந்தோம்..பிறகு வெளிய வந்து, பொழுது போகாம கேமராவும் கையுமாக அலைந்தோம். ரூம், அருகிலேயே  நேபாள் ஸ்டைலில்  ஒரு சிவன் கோவில் இருக்கிறது.. நாங்க போய் சீக்கிரம் கைலாஷ் போகணும்னு ப்ரார்த்தனைப் பண்ணிக்கொண்டோம்..

டிபன் ரெடி என்று ஒரு ஆள் வந்து சொன்னார்.
காலை மணி 7.45.. டிபன் பரோட்டா, ஊறுகாய், டீ.. காபி இல்லை.. :( டிபன் பிடிக்கலை தான். வேறு வழியில்லை.. எப்படியோ ஒன்று சாப்பிடுவதற்குள் மணி 8.30 ஆகிவிட்டது.. ஒவ்வொருவரும் பேசிக்கொண்டோம்.. அப்படியே நேரம் ஓடிவிட்டது..

மதியம் 1.15 மணி.. சாப்பிடப் போனோம்.. கொள்ளுக்கூட்டு, உருளைக்கிழங்கு சதுர சதுரமாக நறுக்கிய ஃப்ரை, புல்கா, அப்பளம், கேரட்,தக்காளி, வெள்ளரி போட்ட சேலட், ஊறுகாய்.  சாப்பிட்டோம். இங்கு தான் நெட் கனெக்‌‌ஷன் நன்றாக வரும் என்பதால், அவரவர் மொபைலை ஆன் செய்தோம்.. இப்படியே நேரம் போய்க்கொண்டு இருந்தது.. சரியாக 4 மணிக்கு டீ, பிஸ்கட் தயாராக இருந்தது.. எடுத்துக்கொண்டோம்..

எங்கள் ரூமில் அம்மா,பையன் தங்கியிருந்தார்கள்.. நாங்க  நால்வரும், மீண்டும் ரூமிற்கு வந்து தூங்கிவிட்டோம்..

இரவு 7.30 மணிக்கு ஒரு ஆள் வந்து டிபன் ரெடி என்று சொன்னார்.. நாங்க எல்லாரும் சாப்பிடப் போனோம்..  சாப்பிட்டோம்.. சிறிது பேசிவிட்டு ரூமிற்கு வந்து தூங்கினோம்...

Acclimatization  - தமிழ் அர்த்தம்.
புதிய தட்பவெப்பநிலைக்கு ஏற்பப் பழக்கப்படுத்திக்கொள்ளுதல் என்று அர்த்தம். 

ஆனால் சில சமயம் மனசு ஏற்றுக்கொண்டாலும், நம் உடம்பு ஏற்றுக்கொள்ளாது. இது பொதுவாக எல்லாருக்கும் பொருந்தும். 

அப்ப யாருக்கு என்ன நடந்தது??... 

மீண்டும் மானசரோவர் பகுதி தொடரும்... நாளை சந்திப்போம்.. !!! 😊





No comments:

Post a Comment