துபாயிலிருந்து ஒரு ஆன்மீகப் பயணம் மூன்றாம் (3) அத்தியாயம். தொடர்கின்றது. 😊
By சுபஸ்ரீஸ்ரீராம் ( Subhasri Sriram)
இன்று ஜூன் 29ம் தேதி வெள்ளிக்கிழமை..
இன்றிலிருந்து 3 ம் தேதிவரை தான் கைலாஷ் பயணம்..
காலை எழுந்தவுடன், வழக்கம் போல தினசரி கடமைகளை முடித்தோம். பிறகு பெட்டிகளில் உள்ள துணிகளை எல்லாம் நேர்ப்படுத்தி, பூட்டி ரூமைக் காலி செய்துவிட்டு, நேராக தரைத் தளத்திற்கு வந்தோம். ரிசப்ஷன் கவுண்டரில் சாவியயைக் கொடுத்துவிட்டு, 4ம் தளத்தில் சாப்பிடச் சென்றோம். பஃபே டிபன் இருந்தது..
சாப்பிட்டுவிட்டு, க்ரவுண்ட் ஃப்ளோர் வந்தோம்.
எங்கள் குழுக்களுக்காக 2 ஏ.சி பஸ் லக்னோவிலிருந்து, நேபாள்கஞ்ச் செல்வதற்காக, ஹோட்டலுக்கு வெளியே தயார் நிலையில் இருந்தது.. அவரவர் லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு போய், பஸ்ஸின் தொப்பையில்( சைடு பகுதியில் 😝) வைத்துவிட்டு, கடைசி சீட்டில் ஏறிக்கொண்டோம்..( வேறு இடம் இல்லை)...
சரியாக ராகு காலத்துக்கு 10 நிமிஷம் முன் பஸ் லக்னோவிலிருந்து நேபாள்கஞ்ச் நோக்கிப் புறப்பட்டது.. கிட்டத்தட்ட 140 கிலோமீட்டர் பயணம்..
லக்னோ அருமையான நகரம்.. ரொம்ப நீட்டாக இருக்கிறது.. பல அடிக்குமாடிக் குடியிருப்புக்கள், நிறைய இடங்களில் பார்க்கமுடிகிறது.. நல்ல வளர்ச்சியுடன் இருப்பது, கண்களுக்குத் தெரிகிறது..
இப்படியாக லக்னோ எல்லையைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் பஸ் நகரத்தொடங்கியது..
பஸ் ட்ரைவர் ரேஸூக்குப் போறவர் போல செம்ம ஸ்பீடு..
இதில் நாங்கள் கடைசி சீட்டுக்கும் மொதல் சீட்..
அரிசியில உமி இருப்பது போல, எங்களிடம் சில மனக்குப்பைகள் இருப்பது ட்ரைவருக்கு தெரிந்துவிட்டது போல.. சும்மா முறத்தில அரிசி புடைப்பது போல, எங்களையும் தன் கை வண்ணத்தால், ட்ரைவர் தூக்கி தூக்கிப் போட வைத்தார்.. பிறகு 2 மணி நேரம் கழித்து வாஷ் ரூம் போவதற்காக வண்டியை நிறுத்தினார்..
பக்கத்தில பான் கடை இருந்தது.. உடனே இதான் சாக்கு என்று எல்லாரும் வாங்கிச் சாப்பிட்டோம்..செம்ம டேஸ்ட்.. மீண்டும் வண்டி கிளம்பியது... ஒரு வழியாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பஹ்ரைச் மாவட்த்தில் இருந்து 16 கிலோமீட்டர் தள்ளி Rupaidiha கிராமத்தில் இந்திய நேபாள எல்லை உள்ளது.. நமக்கு ருபைதிஹா கிராமம். அந்தப் பக்கம் நேபாள்கஞ்ச்.
நம் எல்லையில் ஆர்மி நண்பர்கள் இருந்தனர். பேப்பர் செக் பண்ணவுடன், அங்கிருந்து நகர்ந்து நேபாள் எல்லையைத் தொட்டனர்.. பஸ்ஸில் இறங்கி சிறிது நேரம் நின்றோம்.. கைடு பேப்பர் எல்லாம் கொடுத்தார். அந்த ஆர்மி செக் பண்ணவுடன் அங்கிருந்து சித்தார்த் ஹோட்டலை நோக்கி பஸ் நகர்ந்தது.. சரியாக 3 மணிக்கு வந்து சேர்ந்தோம்... ரூம் கீ வாங்கி், லக்கேஜை எடுத்துக்கொண்டு ரூமிற்குப் போனோம்.. முகம் அலம்பிக்கொண்டு சாப்பிடப் போனோம்..
சாப்பிட்டு விட்டு வந்து சிறிது நேரம் தூங்கினோம்...
மாலை 6 மணி அளவில், டீ, காபி, பிஸ்கட் எடுத்துக்கொண்டு, நேபாள்கஞ்ச் அருகில் ஒரு சக்திப் பீடம் உள்ளது.. கோவிலின் பெயர் பாகேஸ்வரி அம்மன்.. வாடகைக்குக் கார் வைத்துக்கொண்டு, கோவிலை தரிசனம் செய்தோம்.. மிக அழகாக உள்ளது.. திரும்ப ஹோட்டல் வந்தோம்.. 7 மணிக்கு மீட்டிங்க் இருந்தது.
கைலாஷ் டூருக்குத் தேவையான Duffle Bag, Back Bag, Jolna பை, கைலாஷில் பூஜை செய்வதற்கான, ஊதுபத்தி, சூடம்,விபூதி,குங்குமம், ப்ரசாதம், கல்கண்டு, இனிப்பு உருண்டை அனைத்தும் டூர் ஆப்பரேட்டர் எல்லாருக்கும் வழங்கினார்.
எங்கள் சந்தேகங்களுக்கு விரிவாக பதில் அளித்தார்.. மேக்சிமம் 10 kilo Duffle bag ல் இருக்கணும். அதில் துணிகள், சோப், மாத்திரை, டானிக் எல்லாம் அடக்கம்... மீட்டிங்க் முடிந்து டின்னர் சாப்பிட்டோம்..
பிறகு ரூமிற்கு வந்து, கைலாஷ் செல்வதற்காக துணி மணிகளை டஃபில் பேக்கில் பேக் செய்து விட்டு, இரவு 11.30 மணிக்குத் தூங்கப்போனோம்..
இரவு வணக்கம்.. மீண்டும் மானசரோவர் பகுதி தொடரும்... நாளை சந்திப்போம்.. !!! 😊
No comments:
Post a Comment