வட இந்திய பயணத்திட்டம் வழி தங்குமிடம் உணவு பார்க்க...பகுதி 3
சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள 6381369319
ரிஷிகேஷிலிருந்து கேதார்நாத் தூரம் 216 கிமீ
பத்ரி நாத் பாதையில் உள்ள தேவ ப்ரயாக் ஶ்ரீ நகர் ருத்ரப்ரயாக் இரண்டு யாத்திரைகளிலும் பொதுவான ஊர்கள்.
ருத்ர ப்ரயாகில் பாதை பிரிகிறது…
1)காலம்
மே மாதம் மற்றும் அக்டோபர் மாதத்திற்கு இடையே உள்ள பருவம் பத்ரி கேதார்நாத் புனித ஸ்தலத்திற்கு பயணம் மேற்கொள்ள ஏற்றதாக உள்ளது. இக்காலத்தில் இப்பகுதியில் சுற்றுச்சூழல் இனிமையானதாக காட்சியளிக்கிறது. கடும் பனிப்பொழிவின் காரணமான கேதார்நாத்தில் வசிக்கும் உள்ளூர் மக்கள் குளிர்காலத்தில் தற்காலிகமாக இடம் பெயர்ந்து விடுவர் என்பது ஒரு குறிப்பிடத்தக்க தகவலாகும்.
2)ருத்ரப்ரயாகிலிருந்து கௌரி குண்ட் வரை 60 கிமீ
கௌரி குண்ட்டிற்கு முன்னர் சோன் ப்ரயாக் அல்லது ராம்பூரில் தங்குவது சிறந்தது நிறைய விடுதிகள் உள்ளன..
3)சோன் பரயாக் முதல் கௌரி குண்ட் வரை நமது ஜீப் /கார் அனுமதி இல்லை.
அவர்களது ஜீப்பில் சென்று கௌரி குண்டுலிருந்து கால் நடையாக 20 கிமீ கடுமையான பயணம்…
வழியில் லிஞ்செட்டியில் மட்டும் மிலிட்டரி கட்டுப்பாட்டில் தங்கலாம்.
கௌரி குண்ட் வரை ஜீப்பில் சென்று கால் நடையாக செல்வதானால் ஜீப் வாடகை போக வர 1000 க்குள்.
தங்குமிடம் ஒரு நாளைக்கு 500/- முதல் சீசனைப்பொறுத்து…(மே மாதம் ஏற்புடையது அல்ல என்பது எங்கள் விரிவான கட்டுரையை படித்தவர்களுக்கு தெரியும்)
(கோவேறு)குதிரையில் செல்ல 3000/- கட்டணம்.
மாற்று வழி Helicopter...சுமார் 6000/- முதல் 10000 வரை..Online ல் டிக்கட் புக் செய்யலாம்
(Pawan Hans is resuming daily helicopter services from Phata and Agustmuni to Kedarnath Ji, by 5-seater Bell 407/ Bell 206L4 helicopters. The Phata helipad is located beyond Agustmuni and is also linked by a good motorable road on the way to Kedarnath, Pawan Hans is introducing a helicopter service from Dehradun heliport also to the shrine via Phata / Gauchar. PHHL has made it convenient for pilgrims to visit the Kedarnath Ji shrine at a reasonable ticket cost Beside priority darshan Charge. Devotees would get one hour thirty minutes at Kedarnath for darshan.Pawan Hans is resuming daily helicopter services from Agastya Muni (distt. Rudraprayag) to Kedarnath.)
கேதார்நாத்திலும் டென்ட் வசதியில் தங்குமிடங்கள் உண்டு.
தரிசன நேரமும் ஒரு மணி முதல் 5 மணி நேரம் வரை ஆகலாம்.
வழியில் பார்க்க நிறைய தலங்களும் பத்ரி/ கேதார் நெருங்குகையில் பனி படர்ந்த இமயமும் கண் கொள்ளாக்காட்சி…
கேதார் நாத்தில் தென்னிந்திய உணவு கிடைக்கும்
வழியில் கிடைக்கும் உணவை (பராத்தா ,ரொட்டி,சப்பாத்தி) சாப்பிட பழக வேண்டும்.
தொடரும் நாளை நைனிடால்
No comments:
Post a Comment