#சென்னை #Madras
ஆங்கிலேயர்களின் நகரம்
-------------------------
சென்னை ஆங்கிலேயர்கள் பார்த்து பார்த்து செதுக்கிய நகரம் - லண்டனின் டிவின் சிட்டி
முதல் பொது மருத்துவமனை - சென்னை பெரியாஸ்பத்திரி 1664 ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டது . அதுவும் 3000 பேர் தங்கி சிகிச்சை பெறுகிற அளவிற்கு.
மருத்துவகல்லூரி - Madras medical college - 1835 ம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக தொடங்கப்படுகிறது
உலகத்தின் முதல் கண் மருத்துவமனை லண்டன் கண் மருத்துவமனை . அது தொடங்கப்பட்டு பதினைந்து வருடங்களிலேயே உலகத்தின் இரண்டாவது கண் மருத்துவமனை தொடங்கப்படுகிறது. எங்கு தெரியுமா? சென்னை எழும்பூரில் 1819 ம் ஆண்டு.
ராண்டஜன் என்ற ஜெர்மனி அறிவியலாளர் 1895 ம் ஆண்டு X கதிர்களை கண்டுபிடிக்கிறார். ஆனால் அவரால் மருத்துவத்துறையில் அதை பயன்படுத்தமுடியவில்லை. சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஐந்து வருடங்கள் கழித்து 1900ம் ஆண்டு X ray machine வாங்கப்பட்டு நோயாளிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு ரான்ட்ஜனின் கண்டுபிடிப்புக்கு நியாயம் சேர்க்கப்பட்டது. 1900 ம் ஆண்டு மெட்ராஸ் நகரத்தில் மின்சாரம் இல்லை . ஆனால் சென்னை பெரியாஸ்பத்திரியில் X Ray கருவி இருந்தது .
லண்டனுக்கு அடுத்து இந்தியாவின் முதல் பொறியியல் கல்லூரி சென்னையில் தான் அமைக்கப்பட்டது .
இந்திய ராணுவத்துக்கு தாய்க்கழகமான Madras regiment 1750 ம் ஆண்டு 20 பட்டாலியன் வீரர்களோடு சென்னையில் தான் ஆரம்பிக்கப்பட்டது.
இது எல்லாவற்றையும் விட என்னை அடிக்கடி பிரமிப்பில் ஆழ்த்தும் விஷயம்
உலகின் முதல் கார்ப்பரேஷன் - லண்டன்
இரண்டாம் கார்பரஷன் - பிரிட்டனின் ஏதோ நகர் அல்ல
அது #மெட்ராஸ் ..!
சென்னை ஆங்கிலேயர்கள் பார்த்து பார்த்து செதுக்கிய நகரம் . உணர்வுப்பூர்வமாக ஆங்கிலேயர்கள் லண்டனுக்கு அடுத்தபடியாக சென்னையைத்தான் நேசித்தார்கள். வந்தாரை வாழவைக்கும் அந்த சென்னை தான் இன்று கொரோனா தொற்று எனும் புதிய சிக்கலில் சிக்குண்டு திணறுகிறது. சென்னை இதிலிருந்து மீளும் என நம்புகிறேன்.
#படித்ததில்பிடித்தது
#www.livetrichy.com
No comments:
Post a Comment