Monday, June 22, 2020

கட்டழகர் கோவில் மலை

அதிசய பெருமாள்...!!
🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕

👉 பொதுவாக ஒவ்வொரு கோவிலிலும் சில ஆச்சரியமான அற்புதங்கள் நடைபெறும். அதற்கு காரணம் அங்கு காணப்படும் கடவுளின் சக்தியாகும். அப்படி ஒரு அதிசய நிகழ்வு ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள பெருமாள் கோவிலில் நடைபெறுகிறது.

👉 பல அற்புதமான காட்சி அமைப்புகளோடு அழகான இடமான கோவில் பட்டணமாகிய ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவிலேயே குன்றின் மீது எழில்மிகும் அழகோடு கட்டழகர் கோவில் மலை உச்சியில் மிக பிரம்மாண்டமாக காட்சி அளிக்கின்றது. 

👉 இங்கு சுந்தரவல்லி, சௌந்தரவல்லி சமேத சுந்தரராசப் பெருமாளைத் தரிசிக்கலாம். மலைமீதுள்ள இக்கோவிலுக்கு செல்ல 247 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இந்த படிகட்டுகள் தமிழ் எழுத்துகள் 247-ஐ உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.

👉 மேலும் இந்த மலை மீது சிலம்பு ஊற்று என்ற தீர்த்தம் இருக்கிறது. இது அங்குள்ள நாவல் மரப் பொந்தில் இருந்து உற்பத்தியாவது அதிசயமான ஒன்றாகும். 

👉 அந்த நீரூற்றின் நீர் கீழ்நோக்கி மட்டுமே செல்கின்றது. அக்காட்சி காண்பவர் மனதை கொள்ளை கொள்கின்றது. 

👉 கோவிலின் பின்புறமுள்ள மலையைப் பார்த்தால் பெருமாளே பள்ளி கொண்டதுபோல் காட்சி தருகிறது.

No comments:

Post a Comment