இராம ஜென்ம பூமி முதல் கிருஷ்ண ஜென்ம பூமி வரை பகுதி 26 ( For comment Venkatesan 6381369319)
அடுத்த நாள் கார்த்தால மறுபடியும் பிரம்ம குண்டத்துல தீர்த்தமாடிட்டு உள்ளூர் கோயில்கள் பார்க்க கெளம்பினோம் திகலகு தெரியாத ஊர்ல அரை குறை பாஷை தெரிஞ்சுண்டு காளி கோயில் பத்தி விஜாரிக்கிறோம். எதோ ஒரு திசையக்காட்டி நடந்து போகச்சொல்றா..எதோ ஒரு பிள்ளையாண்டான் ரொம்ப தூரம் வண்டியில லிஃப்ட் தரேங்கறான். இவர் அவன் பின்னால ரெண்டு கால போட்டு ஒக்காந்துண்டு என்னை கடைசிய ஒண்டிக்க சொல்றார். அம்மா காளீ என்னக்காப்பாத்துன்னு பயந்துண்டே உக்கார்றேன். கோயில் வந்துடறது.
சக்தி பீடங்கள்ல ஒன்னு ..ஸேவிச்சுக்கோங்கறார்
. .பத்ரகாளி மாதாவின் கோவில் இது. ஐம்பத்தியோரு ஷக்திபீடங்களில் ஒன்று எனக் கருதப்படும் இந்த கோவிலில் தான் சதி தேவியின் வலது கணுக்கால் விழுந்தது. கோவிலின் வாயிலில் இப்போதும் சதி தேவியின் வலது கணுக்கால் இங்கே விழுந்ததை நினைவுபடுத்தும் விதமாக சலவைக்கல்லால் செய்யப்பட்ட சதி தேவியின் வலது கணுக்காலை இங்கே பதித்து வைத்திருக்கிறார்கள்.
டெரக்கோட்டாவில் செய்யப்பட்ட குதிரை பொம்மைகளை இந்த காளி கோவிலில் மக்கள் காணிக்கையாக செலுத்துகிறார்கள். மேலே சொன்ன தேவியின் சலவைக்கல்லால் ஆன கணுக்கால் அருகிலும், கோவில் கர்ப்பக் கிரகத்தின் அருகிலும் நிறைய டெரக்கோட்டா குதிரைகள் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
அங்கேர்ந்து ஒரு கிலோமீட்டர் நடந்து சென்றால் இருப்பது ஸ்தானேஷ்வர் மஹாதேவ் மந்திர். குருக்ஷேத்திரா நகரின் தானேசர் கிராமத்தில் இருக்கும் இக்கோவில் ரொம்ப தொன்மையானது.
குறுகிய ரோட்ல ரெண்டு பக்கமும் வீடுகள். அவற்றில் பெரும்பகுதி இடத்தினை மாடு கட்டும் இடம் அடைத்திருக்க, எல்லா பக்கத்திலிருந்து எருமைச் சாணி வாசம்! தெருவிலும் மாட்டுச் சாணம் ஆங்காங்கே இருக்க, அதை மிதிக்காது தாண்டிச் செல்வது உங்க சாமர்த்தியம். இதில் வாகன ஓட்டி வேறு, ”செருப்பை வண்டியிலே விட்டுப் போங்க” என்று சொல்லவே, பலர் வண்டியிலேயே விட்டுவிட்டு சாலையில் ”தத்தக்கா பித்தக்கா நாலு காலு” என நடனமாடியபடியே வந்தார்கள். நல்லவேளை எனது காலில் செருப்பு போட்டுக்கொண்டே சென்றேன்!
ஆங்காங்கே சில கடைகளிலிருந்து – “பூ வாங்கிட்டு போங்க சார், சிவனுக்கு வில்வ இலை வாங்கிட்டு போங்க சார், பூஜைப் பொருட்கள் வாங்கிட்டு போங்க சார்” குரல்கள் [குருக்ஷேத்திரத்தில் எங்கே தமிழ்க்குரல் என கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது...... உங்க சௌகரியத்துக்காக ஹிந்தியில் கேட்டவற்றை தமிழில் எழுதி இருக்கிறேன்]. எருமைச் சாண வாசத்தில் பூக்களின் வாசம் நாசி வரை வரவேயில்லை! சாதாரணமாகவே வடக்கில் பூக்கள் ”வாசமில்லா மலரிது” ரகம் தான்! இவற்றையெல்லாம் தாண்டி கோவில் சென்று சேர்ந்தேன். முதலில் உங்களை வரவேற்பது ஒரு பெரிய குளம். நான்கு பக்கங்களிலும் படித்துறை கட்டி குளத்தின் நடுவே ஒரு பெரிய சிவன் சிலை வைத்திருக்கிறார்கள்.
இந்தக் குளத்தின் தண்ணீருக்கு மருத்துவ குணங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ராஜா பான் என்பவருக்கு குஷ்டரோக நோய் இருந்ததாகவும் பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் தீராத அவரது நோய், இந்தக் குளத்தின் புனித நீரில் சில துளிகள் பட்டதுமே குணமடைந்ததாகவும் சொல்கிறார்கள். இன்னும் ஒரு கிளைக்கதையாக, இந்த குளத்தில் கர்ப்பிணிகள் குளித்தால், குளத்தில் இருக்கும் மீன்கள் எல்லாம் இறந்துவிடும் என்றும் சொல்கிறார்கள். இப்போது குளத்தின் படிகளில் பாசி மண்டிப்போய் இருப்பதால், யாரும் இங்கே குளிப்பதாகத் தெரியவில்லை.
மறுபடியும் அங்கேர்ந்து நடந்து எதோ ஒரு கோட்டைக்கு அழைச்சிட்டு போறார்.
சஹேலிங்கறவர் கல்லறையாம்..
சஹேலியின் கல்லறை என்று சொல்லப்பட்டாலும், அங்கே மொத்தம் ஆறு கல்லறைகள் – ஒன்று சஹேலியின் மனைவியின் கல்லறை மற்றவை யாருடையது என்ற தகவல்கள் தெரிந்து கொள்ள முடியவில்லை.
பெரிய கோட்டைச் சுவர்களைக் கடந்து உள்ளே சென்றால் அழகிய சதுர வடிவில் ஒரு பூங்கா. தற்போதும் மிக அருமையாக பராமரிக்கப்பட்டு வரும் பூங்கா. சாதாரணமாக Archeological Survey of India பராமரிக்கும் தளங்கள் அவ்வளவு சரியாக இருக்காது. ஆனால் இங்கிருக்கும் பூங்கா நன்றாக பராமரிக்கப்பட்டு இருப்பது கண்டு மனதில் மகிழ்ச்சி. பூங்காவினுள் இருக்கும் கல்லறையைக் காணும்போது எங்கே குருக்ஷேத்திராவில் தாஜ் வந்தது என்று தோன்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
பக்கத்துல ஒரு கோட்டை…இதப்பத்தி இவர் சொல்வார். ….
குருக்ஷேத்ரா நகரத்தின் எல்லைப்பகுதியில் 1 கி.மீ நீளமும் 750 மீ அகலமும் கொண்டதாக அமைந்திருக்கும் ஒரு மேட்டுப்பகுதி ஹர்ஷ் கா டிலா என்று அழைக்கப்படுகிறது.
இது தரை மட்டத்திலிருந்து 15-18 மீ உயரம் எழும்பியிருக்கிறது. இந்த மேட்டுப்பகுதியில் குஷானர்கள் காலம் மற்றும் முகலாயர்கள் காலத்தை சேர்ந்த பல வரலாற்று சான்றுகள் புதைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்திய தொல்லியல் துறை இந்த மண் மேட்டில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டபோது முதலாம் நூற்றாண்டு தொடங்கி 19 ம் நூற்றாண்டு வரையிலான ஆறு வெவ்வெறு கலாச்சார வரலாற்று காலங்களுக்குரிய சான்றுகள் கிடைத்துள்ளன.
ராஜபுதன, குப்த, குஷாண, பிற்கால குப்த, வர்த்தமான, சுல்தான் மற்றும் முகலாய அரசாட்சி காலங்களுக்குரிய சான்றுகள் இவற்றில் இடம் பெற்றிருப்பது ஒரு விசேஷமான அம்சமாகும்.
இங்கு கண்டெடுக்கப்பட்டவற்றில் பிற்கால குப்தர்கள் காலம் மற்றும் குஷாணர்கள் காலத்திய பொருட்கள் முக்கியமானவை. வண்ணம் பூசப்பட்ட உபயோகப்பொருட்கள் மற்றும் பலவிதமான செங்கல் கட்டுமானங்கள் ஆகியவை இவற்றில் அடங்கும்.
இந்தோ – இஸ்லாமிய காலத்துக்குரிய சில கட்டிட சிதிலங்களும் இங்கு காணப்படுகின்றன. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தோட்டப்பூங்கா வளாகத்திலிருந்து மேலும் சில புராதனப்பொருட்கள் கிடைத்திருக்கின்றன.
தொல்லியல் மற்றும் வரலாற்று ரசிகர்களுக்கு பிடித்தமான ஸ்தலம் இந்த ஹர்ஷ் கா டிலா என்பதில் சந்தேகமில்லை.
படங்கள் 1,2,3)இந்தோனேஷியா மகாபாரத சிற்பங்களும் 4)பிரம்ம சரோவர் அற்புத தோற்றமும்
தொடரும்.




No comments:
Post a Comment