ஸ்ரீ வைஷ்ணவர்களின் குருபரம்பரை - 1
----------
ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயம்தான் உண்மையான வேதாந்த ஸித்தாந்தம்.
பராசரர் அருளிச்செய்த விஷ்ணுபுராணம் வைஷ்ணவ விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை திடமாக ஸ்தாபிக்கிறது. பராசரருடைய குமாரர் வ்யாஸர்.
வ்யாசருடைய வேதாந்த ஸூத்ரத்துக்கு மிக விரிவாக உரை எழுதினவர் போதாயனர். அவருக்குப் பிறகு ப்ரஹ்மநந்தி என்னும் டங்கர், த்ரமிடர், குஹதேவர் போன்றவர்களும் ப்ரஹ்ம ஸூத்ரத்துக்கு விரிவாக உரை எழுதி இந்த ஸித்தாந்தத்தை ஸ்தாபித்தார்கள்.
இவ்வாச்சார்ய பரம்பரையை ஸ்வாமி ஸ்ரீ தேசிகன் கீழ்கண்டாறு ஒரு பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார்:
---
என்னுயிர் தந்தளித்தவரைச் சரணம் புக்கி
யானடையவே யவர் குருக்கள் நிரை வணங்கிப்
பின்னருளால் பெரும்புதூர் வந்தவள்ளல்
பெரியநம்பி ஆளவந்தார் மணக்கால் நம்பி
நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக்கொண்டார்
நாதமுனி சடகோபன் ஸேனைநாதன்
இன்னமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு
எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே.
----
முதல் ஆசார்யன்: ஸ்ரீமந்நாராயணன்
இரண்டாம் ஆசார்யன்: ஸ்ரீ மஹாலக்ஷ்மி
மூன்றாம் ஆசார்யன்: ஸ்ரீ விஷ்வக்ஸேனர் (ஸேனை முதலியார்) இவர் ஸ்ரீவைகுண்டத்தில் எம்பெருமானுடைய ஸேனைக்குத் தலைவர்
நான்காம் ஆசார்யன்: நம்மாழ்வார்
ஐந்தாம் ஆசார்யன்: ஸ்ரீமந் நாதமுனிகள்
(இவர் நம்மாழ்வார்க்குப் பிறகு நீண்டகாலம் கழித்துப் பிறந்தவர். நாதமுனிகளுக்கு நம்மாழ்வார் யோகமுறையில் உபதேசித்தார்)
ஆறாம் ஆசார்யன்: ஸ்ரீ புண்டரீகாக்ஷர்
ஏழாம் ஆசார்யன்: ஸ்ரீராமமிச்ரர்
எட்டாம் ஆசார்யன்: ஸ்ரீ ஆளவந்தார் (நாதமுனிகளின் பேரன்)
ஒன்பதாம் ஆசார்யன்: மஹா பூர்ணர்
பத்தாம் ஆசார்யன்: ஸ்ரீபாஷ்யகாரர் என்று சொல்லப்படும் ஸ்ரீராமானுஜர்.
இவருக்கு யதிராஜர், எம்பெருமானார் என்று பல திருநாமங்களும் உண்டு.
இவர் பூலோகத்தில் 120 வருஷங்கள் எழுந்தருளி இருந்தார். அவருடைய காலம் கி.பி. 1017-1137. இவர் அருளிச்செய்த 9 க்ரந்தங்கள்: ஸ்ரீபாஷ்யம் (ப்ரஹ்ம ஸுத்ரத்துக்கு உரை), கீதாபாஷ்யம், வேதாந்த ஸங்கரஹம் (வேதம், உபநிஷத்துக்களில் முக்கியமான பகுதிகளின் அர்த்தங்கள்), வேதாந்த தீபம் (வ்யாஸரின் ப்ரஹ்ம ஸூத்ரத்துக்குச் சுருக்கமான உரை), வேதாந்த ஸாரம் (ப்ரஹ்ம ஸூத்ரத்துக்கு இன்னும் சுருக்கமான உரை), சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், ஸ்ரீ வைகுண்ட கத்யம், நித்யம் (ஸ்ரீவைஷ்ணவன் தினமும் அனுஷ்டிக்கவேண்டியவை பற்றி). ஆசார்யர்களாகிற ரத்னங்களால் விளங்கும் குருபரம்பரையான ரத்னமாலையில் நடு நாயகமணியாக விளங்குகிறார் ஸ்ரீபாஷ்யகாரர்.
எம்பெருமானாருக்கு பிறகு
¤ குருகேசர்
¤ எங்களாழ்வான்
¤ நடாதூர் அம்மாள் (வரத தேசிகர்)
¤ அப்பிள்ளார் (கிடாம்பி ராமாநுஜர்)
¤ ஸ்ரீ வேதாந்த தேசிகன்: ஸ்ரீதேசிகனின் இயற்பெயர் வேங்கடநாதன். இவருக்கு ஸ்ரீரங்கநாதன் ‘வேதாந்தாசாரியர்’ என்ற திருநாமத்தையும், ஸ்ரீரங்கநாச்சியார் ‘ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர்’ என்ற திருநாமத்தையும் அளித்தார்கள். இவருடைய ஸ்ரீஸூக்திகள் எண்ணற்றவை. வேதாந்த நூல்கள், ரஹஸ்யக்ரந்தங்கள், வ்யாக்யான க்ரந்தங்கள், ஸ்தோத்ரங்கள், காவ்யங்கள், தமிழ்ப் ப்ரபந்தங்கள் என்று இப்படி ஸம்ஸ்க்ருதத்திலும், தமிழிலும், ப்ராகிருதத்திலும் கூட பலபல க்ரந்தங்களை அருளிச் செய்துள்ளார்கள். 101 வருஷங்கள் இப்பூமியில் எழுந்தருளி இருந்தார். கி.பி. 1268 – 1369.
¤ ஸ்ரீ நயினாராசிரியர், ஸ்ரீ ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ர ஸ்வாமி
¤ கடிகாசதம் அம்மாள்
¤ எம்பார்
¤ பட்டர்
¤ நஞ்சியர்
¤ நம்பிள்ளை
¤ வடக்குத்திருவீதி பிள்ளை
¤ ஸ்ரீ ரஙகேச்வரா்
¤ கேசவாசார்யா்
¤ கமலவாஸர்
¤ கேசவாசார்யர்
¤ ஸ்ரீமத் ஆதிவண் சடகோப யதீந்தர மஹாதேசிகன்
நாம் ஸ்ரீமந் நாதமுனிகளிடமிருந்து பார்ப்போம்..
..... தொடரும்
No comments:
Post a Comment