Wednesday, June 24, 2020

Mallikarjuna Temple, Pattadakal

Mallikarjuna Temple, Pattadakal, Karnataka, is a smaller version of the Virupaksha temple and was built by Vikramadiyta's second queen Trilokyamahadevi in 745 to celebrate the victory (by Vikramaditya II) over the Pallavas. 

தேர்ந்தெடுக்கப்பட்ட, பன்முகக் கலையின் உச்சம். தென்னிந்தியக் கலையும் வட இந்தியக் கலையும் ஒன்றிணைந்த இணக்கமான கலவை பட்டடக்கல் கற்கோயில்கள்' என்று பட்டடக்கல் சிற்பங்கள் மற்றும் கற்கோயில்கள் குறித்து யுனெஸ்கோ நிறுவனம் குறிப்பிடுகிறது.

பதாமி (வாதாபி), அய்ஹோல் போலவே பட்டடக்கல்லும் சாளுக்கியர்களின் கலைச் சின்னங்கள் நிறைந்த பொக்கிஷக்கூடம். 7-ம் மற்றும் 8-ம் நூற்றாண்டுகளில் எழுப்பப்பட்ட கற்கோயில்களின் தொகுப்பு. எங்கெங்கு நோக்கினும் அந்தத் திசையெங்கும் அழகான சிற்பங்களும் கோயில்களும் நம் மனதைக் கவரும் வண்ணம் அமைந்திருக்கின்றன.

உலகப் பாரம்பர்யச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கும் பட்டடக்கல், கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில், மலபிரபா நதியின் வடகரையில் அமைந்திருக்கிறது. சாளுக்கியர்களின் புகழ்பெற்ற சிற்பங்கள், கற்கோயில்கள் காணப்படும் பதாமி மற்றும் அய்ஹோலுக்கு அருகே காணப்படுகிறது பட்டடக்கல். வேசரபாணி கட்டடக்கலையின் தொடக்கமாகப் பட்டடக்கல் கோயில்களைக் கருதுகிறார்கள். 

அய்ஹோல், 'இந்தியக் கட்டடக்கலையின் தொட்டில்' என்றால், பட்டடக்கல், 'இந்தியக் கட்டடக்கலையின் பல்கலைக்கழகம்' என்று அறிஞர்களால் புகழப்படும் அளவுக்கு சிறப்பான சிற்பங்களையும் கோயில்களையும் கொண்டிருக்கிறது. 1,200 வருடங்களைக் கடந்து சிவப்பு மணல் பள்ளத்தாக்கில் பேரெழிலுடன் காணப்படுகின்றன பட்டடக்கல் கற்கோயில்கள்.

No comments:

Post a Comment