Monday, June 22, 2020

நந்தியின் காதில்......

சிவன் கோயிலில் நந்தியைத் தொடக்கூடாது என்பது நியதி. ஆனால் சிலர் நந்தியின் காதைப் பிடித்து ஏதாவது சொல்லி வேண்டுகிறார்களே இது சரியா?

🔱🔱🔱🔱🌹🌹🌹🌹

தவறு... சிவாலயத்திற்குள் நுழைவதற்கு முன்னால் நந்திக்குப் பின்னால் நின்று கொம்புகள் வழியாக இறைவனை தரிசிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து நந்திக்கு முன்னால் பக்கவாட்டில் வந்து நின்று உள்ளே செல்வதற்கு அனுமதி வேண்டி நந்தி பகவானிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இறைவனுக்கும், நந்திக்கும் இடையே இறைவனை மறைக்கும் விதமாகச் சென்று நிற்கக்கூடாது. உங்களது வேண்டுகோளையும், பிரார்த்தனைகளையும் நேரடியாக இறைவனிடமே முறையிடலாம்.

அதனை விடுத்து இறைவனை நோக்கித் தியானத்தில் அமர்ந்திருக்கும் நந்தியினைத் தொந்தரவு செய்யும் விதமாக அவரைத் தொடுவதும், அவரது காதுகளில் ரகசியமான முறையில் வேண்டுகோளைச் சொல்கிறேன் என்று நம் எச்சில் படும் விதமாக குறைகளைச் சொல்வதும் முற்றிலும் தவறான ஒன்று. பிரதோஷ காலத்தில் நந்தியின் சிரசில் இறைவனின் திருநடனக் காட்சி தென்படுவதால் அந்த நேரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளைச் செய்கிறோம். அந்த நேரத்தில் சிவனடியார்களின் தலைவனாகிய நந்திக்குச் செய்யப்படும் ஆராதனை அந்த ஆண்டனுக்கே செய்யும் ஆராதனை என்பதால் தனிச் சிறப்பு பெறுகிறது. அதனைத் தவறாகப் புரிந்துகொண்டு நந்தியின் காதுகளில் வேண்டுகோளைச் சொல்வது என்பது தவறான செயல்.

கார்ய சித்தி மந்திரம்
****

ஶ்ரீ அகத்தியர்  பெருமான் அருளிய.. தடைகளை நீக்கும் முருக பெருமானின்.. அபூர்வ சிங் சிங்  மந்திரம். கார்ய சித்தி மந்திரமாக...

ஓம் சிங் சிங் சங் சங்,
சாம்பவி புத்ராய நம,
நம வா... வா...., ஸ்வாஹா...


இந்த மந்திரம் அகத்தியர் தீக்ஷா விதி  நூலில் அகத்தியர் அருளியது. வாழ்க்கையில் இருக்கின்ற எப்பேர்ப்பட்ட தடைகளையும் உடைத்தெறிந்து , பக்தியுடன் ஜெபிப்பவர்களுக்கு நினைத்த காரியங்களை உடனடியாக  நிகழ்த்தும் அற்புத சக்தி வாய்ந்த  மந்திரம் இது.

No comments:

Post a Comment