Monday, June 22, 2020

வாஸ்து குறிப்புகள்

வாஸ்து குறிப்புகள் 

அலுவலகங்களும்
 தொழிற்கூடங்களும், வணிக மையங்களும் வாஸ்துப்படி அமைக்கப்பட்டால், நஷ்டங்கள் ஏற்படாமல் தடுத்து லாபத்தை ஈட்ட முடியும். இனி அதற்கான வழிமுறைகளைப் பார்க்கலாம்.

1. அலுவலகத்துக்கும் , தொழிற்சாலைகளுக்குமான மனையும் கட்டடமும் சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ இருக்கவேண்டும். செவ்வகமானால், நீள அகலங்கள் 1:2 என்ற விகிதாச்சாரத்தில் இருக்கவேண்டும். இப்படி அமையப்பட்ட இடமானது உங்களுக்கு வருட முழுவதும் லாபம் ஈட்டித் தந்துகொண்டே இருக்கும்.
2. சுற்றிலும் நாற்புறமும் சாலைகளோ அல்லது வடக்கிலும் கிழக்கிலும் சாலைகளோ இருப்பது அதிர்ஷ்டமும் லாபமும் தரவல்லதாக இருக்கும்
3.  அலுவலக அதிகாரி, அலுவலகத்தின் தென்மேற்கில், கிழக்கு அல்லது வடக்குப் பார்த்தபடி அமரவேண்டும்.
4. கம்ப்யூட்டர் ரூம் தென்கிழக்கில் அமைய வேண்டும்.
5. மார்க்கெட்டிங் சம்பந்தப்பட்ட பகுதிகள் வடமேற்கில் அமைய வேண்டும்.
6.கடையாக இருந்தாலும் சரி, வணிக மையமாக இருந்தாலும் சரி, அதை மிகவும் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.  தரை நன்கு கண்ணைக் கவரும் டைல்ஸ்களால், ஆனதாகவும் இருக்கவேண்டும்.
7. கடைக்கு முன்பாக மரமோ, கம்பமோ, அல்ல்து கிணறோ இருப்பது வேதையை உண்டாக்கி கடையை முடக்கிவிடும். பிஸினஸில் பலவித தடங்கல்களையும், பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.  எனவே, அலுவலகத்துக்கோ, தொழிற்சாலைக்கோ கடைக்கோ நேரெதிராக, அவ்வாறு கிணறு , பெரிய மரங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
8. வளம் தரும் இடமாகக் கருதப்படும் . வடகிழக்கில், நீர்த்தடாகமோ அல்லது நீரூற்றோ அமைக்கலாம். அது மேன்மேலும் வளர்ச்சியைக் கூட்டும்.
9. ஸ்வஸ்திக் போன்ற அதிர்ஷ்டத்தைக் குறிக்கும் குறிகளை கடையின் கதவில் பொருத்திக்கொள்ளலாம். அல்லது வரையலாம். கேஷ் கௌண்டர்களை வடக்குப் பார்த்தபடி அமைக்க வேண்டும்.  எந்த சமயத்திலும் பணம் வைக்கும் பெட்டியை காலியாக வைக்கக்கூடாது.
10. வாஸ்து விதிகளின்படி, கஸ்டமர் வணிக வளாகத்துக்கோ, கடைக்கோ எந்த வழியாக  நுழைகிறாரோ அதை முகப்பு என்று சொல்லலாம். அந்த முகப்பின் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் என்பதை கீழே பார்க்கலாம்.

( அ.) வடக்குப் பார்த்த வாசல்—-  முன்னேற்றத்தையும் செல்வச் செழிப்பையும் குறிக்கும்.
(ஆ). தெற்குப் பார்த்த வாசல்——- நஷ்டத்தையும், தடைகளையும் ஏற்படுத்தும். மோசமான கிரக சஞ்சாரங்களால், நீங்கள்
பாதிக்கப்பட்டிருக்கும்போது  மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
(இ). மேற்குப்பார்த்த வாசல், ——-   லாபமும் நஷ்டமும் மாறி மாறி வரும். லாபம் தடைப்பட்டு , தடைப்பட்டு வரும்.
(ஈ). கிழக்குப் பார்த்த வாசல்—— லாபகரமாக இருக்கும்.

மேற்கூறப்பட்ட வாஸ்து விதிகளின்படி, தொழிற்சாலைகளையோ, வணிக வளாகங்களையோ அமைத்துக்கொண்டு  தொழிலில் வளர்ச்சி காண வேண்டுமாய் 
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் சுவாமியை பிரார்த்தனை செய்கிறேன்.

No comments:

Post a Comment