Thursday, June 18, 2020

வெண்கடுகு

குடும்ப அமைதிக்கு வெண்கடுகு

பல குடும்பங்களிலும் உள்ள ஓரே பிரச்சனை குடும்ப அமைதி இன்மை. சகோதர, சகோதரிகளிடையே மன வேறுபாடு. 

பல வருடங்களாக ஒற்றுமையுடன் இருந்த  நல்ல குடும்பங்களில் கூட திடீர் என  இப்படிப்பட்ட வேற்றுமை தோன்றத் துவங்குகிறது.  இதற்கு மூலக் காரணமே நம் வீடுகளில் குடி புகுந்து கொள்ளும் தீய சக்திகள்தான்.

ஆகவே அப்படிப்பட்ட தீய சக்திகள் வீடுகளில் புகுந்து கொள்ளும்போது அவற்றின் தீமையைக் குறைக்கும் வழி முறை என்ன?

வீடுகளில் மன அமைதி இல்லாமல், குடும்ப ஒற்றுமை இல்லாமல் உள்ளவர்கள் சாம்பிராணி தூபத்தைப் போட வேண்டும். அதில் சிறிதளவு வெள்ளைக் கடுகை ( வெண்கடுகு என்பார்கள்) போட்டு விட்டு வீட்டில் அனைத்து அறைகளிலும் எடுத்துச் சென்று அந்தப் புகையைக் பரவ விட்டு வந்து சுவாமி அறையில் வைத்து விட வேண்டும்.

அதன் பின் நடப்பதைப் பாருங்கள். வீட்டில் அந்நாள் வரை இருந்து வந்த மன அமைதி மெல்ல மெல்ல  அதிகமாவதைக்  காணலாம். 

வெண் கடுகிற்கு அத்தனை சக்தியா? அது எதனால்?

வெண் கடுகு பைரவருக்குரியது

சாம்பிராணியை தூபத்தை ஏற்றி வைத்து அதன் தூபத்தில் வெண் கடுகைப் போட்டு வீடு முழுவதும் அந்தப் புகையைக் காட்டினால் பைரவரின் அருள் பயவி தீய சக்திகள் ஓடிவிடும்.

போர்களில் அடிபட்டு இறக்கும் தறுவாயில் உள்ள வீரர்கள் பூமியில் கிடக்கும்போது அவர்களை சுற்றி உள்ள இடங்களில் வெண்கடுகைத் தீயிலிட்டுப் புகையை உண்டாக்கினால் யம பகவான் அவர்களின் உயிர்களை பறிக்க வர மாட்டார் என்ற நம்பிக்கை சங்க காலங்களில் இருந்துள்ளது.

வீட்டினில் அமைதியும் இன்பமும் நிலவ வெண்கடுகை புகையுங்கள்

No comments:

Post a Comment