🌹🌹🌹🙏🏻🙏🏻🌺🌺🌺கொரோனாவும் கோகிலா மாமியும்!!!!!!!
(By ரமா ராஜ கோபாலன்)
கோகிலா மாமி, கொரோனாவை பற்றிய விஷயம், கேட்டதிலிருந்து ரொம்ப நடுங்க ஆரம்பித்தாள்.
அவள் நடுக்கத்திற்கு முக்கிய காரணம், அந்த நோய் வந்தால் உதவிக்கு யாரும் பக்கத்தில் இல்லாமல் தனிமை படுத்த படுவார்களே என்றுதான்.
அந்த மாமிக்கு இரு பெண்கள். இருவரும் அமெரிக்காவில். இரண்டு பேர்கள் இருக்கும் ஏரியாவிலும் கொரோனா தனது கால்களை அகல விரித்திருந்தது.
மாமியும், மாமாவும் இந்தியாவில் ஒரு பாடற்பெற்ற ஸ்தலத்தில் தனியாக ஒரு ப்ளாட்டில் இருந்தார்கள்.
கொரோனா காற்றின் மூலம் பரவும் என்பதால் மாமி முதற்காரியமாக தன் வீட்டு எல்லா ஜன்னல்களையும் இறுக்கமாக சார்த்தினாள்.
வெளியுலக தொடர்பை தவிர்க்கணும் என புத்திசாலியைப்போல
மாமாவின் நடைபயிற்சியை நிறுத்தினாள்.முடிந்தவரை வீட்டுக்குள்
நடந்து கொள்ளுங்கள். ஷுகர் ஏறினால் மாத்திரைகளை அதிக படுத்தினால் போச்சு! என்றாள் அசால்ட்டாக.
டீவியில் மார்ச் மாதம் பதினேழாம் தேதி மாமியின் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மாமா, பரிதாபமாக, ஏண்டி,துவாரகைக்கு இரண்டு மாதம் கழித்து
புக் பண்ணியிருக்கோமே என்ன செய்யலாம் ? என ஆலோசனை கேட்டார்.மாமியிடம் கேட்காமல் மாமா எதுவும் செய்ய மாட்டார்.
மாமிக்கு திக்கென்றது. ஏற்கனவே துவாரகை சேவித்து இருந்தாலும்,
அவர்கள் பெரிய பெண் ஆசைப்பட்டாள் என இந்த முறை நிம்மதியாக பெருமாளை,அவள் செலவில் AC, கோச்சில்,AC ரூமில் ஜாலியாக
சேவித்து விட்டு வரலாம் என கற்பனை கோட்டை கட்டியிருந்தாள்.
மாமி எப்பொழுதும் முன் ஜாக்ரதை முத்தம்மா தான்.கவர்மெண்ட் எப்படியும் பத்து நாளில் கொரோனாவை ஒழித்து விடுவார்கள்
என்றாலும் நாம் risk எடுக்க கூடாது என உடனே பீரோவை திறந்து அத்தனை டிக்கெட்டுகளையும் எடுத்து கொண்டு, மாமாவுடன் வண்டியில் போய் கான்சல் செய்து கொண்டு வந்தாள்.
இழப்பீடு AC என்பதால் நிறைய. ஆனால் நஷ்டத்தில் லாபம் பார்ப்பது மாமியின் வழக்கம்.ஊருக்கு போனால் எவ்வளவு செலவழிந்திருக்கும்?
வெயில் வேறு! ராஜஸ்தானில் கொளுக்கும்! என மனதை எதேதோ யோசித்து சமாதான படுத்திக்கொண்டாள்.
உடனே பெண்ணுக்கும் போன் செய்து அவளது துவாரகை கனவை உடைத்தெறிந்தாள். ஆனால் இதனால் பேத்திகளுக்கு ரொம்ப சந்தோஷம். எக்சாம் என்பதால் தங்களை விட்டுவிட்டு,அம்மா
மட்டும் போவதற்கு ப்ளான் பண்றாளே! என்று உருமி கொண்டிருந்தார்கள். இதை கேட்டதும் ஹே! கொரோனா வாழ்க!
என கூச்சலிட்டார்களாம்.போனில் பெண் மாமியிடம் புலம்பினாள்.
மாமி தனது அடுத்த நடவடிக்கையாக, பார்மசிக்கு, படையெடுக்கும் படி
மாமாவை விரட்டினாள்.
நாலு மாதங்களுக்குரிய
ப்ரஷர், ஷுகர், தூக்கமாத்திரை எக்ஸ்ஸெட்ரா எல்லாம் ஆளுக்கு ஒரு பெரிய
பாலீதீன் பை என இரு பைகளில் வாங்கி வந்தனர்.
அடுத்து ப்ரொவிஷனும்
நான்கு மாதங்களுக்கு
வாங்கபட்டது. மாமி தன்
பெண்களுக்கும் அது மாதிரி செய்ய சொல்லி உத்தரவிட்டாள்.
கொரோனாவை எதிர்க்க, சகல ஏற்பாடுகளும் செய்து
விட்டோம் என்ற நிம்மதியில் மாமி டீவியே கதியாக
ஒரு மாதம்
வரை,
இருந்தாள்.
உலகத்தின் எல்லா ஊர்களின் கொரோனா
நிலவரங்கள் அவளுக்கு
அத்துபடி.
பலி எண்ணிக்கை இன்று இத்தனை என தூக்கத்திலும் உளறினாள்.
திடீரென தன் பெண்களின் நிலவரம் குறித்து சந்தேகம் எழுந்தது. தினமும் அவர்கள் போன் செய்ய அலுத்து கொண்டனர்.
அதனால் மாமி ஒரு வழி
கண்டுபிடித்தாள்.
இங்க நாங்க ஓகே!
என தினமும் வாட்ஸ்ஏப்பில் மெசேஜ்
எழுதி கட்டை விரலை
உயர்த்தி காட்ட வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு
வந்தாள்.
அம்மாவின் சொல்லுக்கு எப்பொழுதும் முடிந்தவரை சிறு வயதில் இருந்தே
மறுபேச்சு சொல்லாமல் வளர்ந்தவர்கள் ஆதலால் மாமியின்
நாங்க ஓகே!க்கு ஓகே
சொன்னார்கள்.
ஒரு மாதம் வரை இதே
நிலைமை தொடர்ந்தது.
பாரத பிரதமரின் விளக்கேற்றும் ஐடியாவில்
மாமிக்கு நம்பிக்கையில்லை.
இருந்தும், பிரதமர் மேலுள்ள மரியாதையில், அவாத்து ஹாலின் இரு மூலைகளில் ஏற்றி வைத்தாள்.
பிறகு போனில் கொரோனாவுக்கு மருந்தாக வருகிற அத்தனை டிப்ஸ்களையும் ஒன்று
விடாமல் இரு பெண்களுக்கும் பார்வேர்டு செய்வது
மாமியின் முக்கிய கடமையாயிற்று.
வடிவேலுவின் கொரோனா ஜோக்ஸையும் நடுவில் ரசித்து வந்தாள்.
கோவில்கள் மூடி இருப்பதால் மாமியின்
கோவிலுக்கு போக வில்லையே என்கிற
குற்றவுணர்வு குறைந்தது.
இரண்டு மாதங்களாயிற்று.
ஒரு நாள் மாமி போனில் காலை பத்து மணிவரை, அமெரிக்க பெண்ணிடமிருந்து
"நாங்க ஓகே!" மெசேஜ்
வரவில்லை என்றதும்
நடுங்கினாள்.
மாமியாக அவர்களுக்கு ரொம்ப போன் பண்ண மாட்டாள்.
அன்று மனதை தேற்றிக்கொண்டு,
பெண்ணுக்கு போன்
செய்தாள்.
ஞாயிற்றுகிழமை என்பதால் ஆழ்ந்த
உறக்கத்தில் இருந்த அவளது பெண்,
அம்மா! நாங்க ஓகே! தான்! ஓகே தான்!
தூங்கிட்டேன், அதான்,
உடனே போட முடியலே
என அம்மாவை தூக்க கலக்கத்துடன் சமாதானப்படுத்தினாள்
மாமியின் மாப்பிள்ளை,
இந்த விஷயத்தை அறிந்து,
உலகத்தில் உள்ள அத்தனை பேர்களும்
கொரோனாவை
எதிர்கொள்ள வேண்டியது தான்.
விதியும், எதிர்ப்புசக்தியும் இருப்பவர்கள் பிழைத்து கொள்வார்கள் என்று
உன் அம்மாவிடம் சொல்லு!
என ஒரே போடாக போட்டாராம்.
பிறகு ஒரு நாள் போனில், அவள் பெண்
"இப்போ தான் கார்த்தாலே சீக்கிரமா
எழுந்திருக்காமல் நிம்மதியா தூங்கறேன்!
குழந்தைகள் உடம்பும் வெயிட் ஏறியிருக்கு என்றாள்.
பெரிய பெண்ணிடமிருந்தும்,
வொர்க் ப்ரம் ஹோம்
நிம்மதியா இருக்கும்மா!
அலையாமல் இருக்கேன்.
பசங்களுக்கு வீட்டில் நிறைய பட்சணங்கள்
பண்ணி தருகிறேன்,!
என கொரோனாவுக்கு
பேவராக போன் வந்தது.
மாமியும் யோசித்தாள்.
டீவியில் தேவையில்லாத
சாவு,குடி கொலை, திருட்டு எல்லாமே
கொரோனா வந்து
அடக்கிடுத்து.அல்லது
அவைகள் நடந்தாலும்,
தேவையில்லாமல் சொல்லி டென்ஷனை
ஏற்றாமல், டீவிகாரன் இதுக்கு தான் முக்கியத்துவம் தறான்.
அதனால் கொரோனாவுடன் நாம வாழ பழகிட்டோம்!
அது இருக்கணும்னு
நெனைக்கிற காலம் வரை இருந்து, என்ஜாய்
பண்ணிட்டு தான்
போகட்டுமே! என்கிறாள்!
ரமா ராஜகோபாலன். https://www.facebook.com/100001467288908/posts/3247323048659906/?d=n
No comments:
Post a Comment