நவகிரக தோஷம் போக்கும் முறை 🕉
ஒரு மஞ்சள் பையில் ஒரு கிலோ நவதானியம் கட்டி வியாழக்கிழமை இரவு அதை தலைக்கு வைத்து படுக்க வேண்டும்.
வெள்ளிக்கிழமை காலை அதை எடுத்து அதனுடன் சிறிது வெல்லம் ,தண்ணீர் கலந்து கிரைண்டரில் அரைத்து கட்டியாக உருட்டி பசு மாட்டிற்கு உண்ணக்கொடுக்க வேண்டும்..
பசு மாட்டில் முப்பத்து முக்கோடி தேவர்களும் உள்ளனர்.அவர்கள் நவதானிய சக்தியை ஈர்த்து திருப்தி அடைகின்றனர்.
இதன் மூலம் நவகிரக தோஷங்களில் இருந்தும் கண் திருஷ்டி செய்வினை தோசங்களில் இருந்தும் விடுபடலம்
****
எண்ணை தானம்*
உடல் மெலிந்தோ,சுறுசுறுப்பு குறைந்தோ, அல்லது ஏதாவது வியாதி மாறி மாறி வந்துக் கொண்டுடே இருந்தால் அது ஒருவகை தோஷத்தால்தான் என்று சொல்லாம்.
மணி – மந்திர ஔஷதம். அதாவது மருந்தும் சாப்பிடவேண்டும், பூஜை பரிகாரங்களும் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
உடல் பாதிப்புகள் நீங்கவும், தோஷங்களும் திருஷ்டியும் போக்க நல்லெண்ணையை உங்கள் சக்திக்கேற்ப சிறு பாத்திரத்திலோ அல்லது பெரிய பாத்திரத்திலோ ஊற்றி, பாதிப்புக்கு உண்டானவர்கள் தங்கள் முகத்தை அந்த எண்ணை பாத்திரத்தில் நன்றாக பார்த்து, மூன்று முறை தங்களின் பெயரை உச்சரித்து பிறகு யாருக்காவது அந்த பாத்திரத்தோடு எண்ணையை தானம் செய்துவிடுங்கள்
.
பாத்திரத்தோடு தானமா? என்று பணத்தை கணக்கு பார்த்தால், அந்த பணத்தை விட மருத்துவ செலவை கணக்கு போடும்போது இந்த தானசெலவே குறைவாகத்தான் இருக்கும்.
மாத்திரைகளை எப்படி நம்பிக்கையோடு சாப்பிடுகிறீர்களோ, அதுபோல் பரிகாரத்தையும் நம்பிக்கையோடு செய்தால்தான் பலன் கிடைக்கும்.
No comments:
Post a Comment