👆அருள்மிகு ஜுரஹரேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்:
இந்த கோயிலில் ஸ்ரீரங்கத்தைப் போல தோற்றமுடைய பிரணவாகார விமானம் உள்ளது.
இந்த அபூர்வ விமானத்தின் நான்குபுறமும் ஜன்னல்கள் உள்ளன. காய்ச்சல் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடும் போது, இந்த ஜன்னல்களின் வழியே வரும் காற்று, வெளிச்சம் ஆகியவை நோயைக் குணமாக்குவதாக தகவல் இருக்கிறது.
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
பிரார்த்தனை:
தீராத காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் இங்குள்ள ஜுரஹரேஸ்வரரை வழிபட்டுச்செல்கின்றனர்
மகா சதாசிவ மூர்த்தி:
இவர் கயிலாயத்தில் இருப்பவர். இவர் இருபத்தி ஐந்து தலைகளும், ஐம்பது கைகளையும் கொண்டவர். எனவே இவரை நாம்
மகா சதாசிவமூர்த்தி என்கிறோம்.
ஜீரஹரேஸ்வரர் கோயில் விமானத்தில் சுதை சிற்பமாகத்தான் காண முடியும். மேலும் பல கோயில் விமானங்களில் தான் தரிசிக்க முடியும். இவரை வணங்கினால் சிவதரிசனம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.
மேலும் கடுமையான காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் கருப்பஞ்சாறால் இவரை அபிஷேகம் செய்தால் கடும் காய்ச்சல் நீங்கி தேகம் ஆரோக்கியம் பெறுவர் என்றும் நம்பப்படுகிறது.
No comments:
Post a Comment