Monday, June 22, 2020

இராம ஜென்ம பூமி முதல் கிருஷ்ண ஜென்ம பூமி வரை பகுதி 26

இராம ஜென்ம பூமி முதல் கிருஷ்ண ஜென்ம பூமி வரை பகுதி 26 
( Sujatha &Venkatesan 6381369319)

குரு" நாட்டில், இரு அரச வம்சங்களுக்குள் உள்ள ஈகோ பிரச்சனையை தீர்ப்பதற்காக பல்லாயிரம் பேரைப் பலியெடுத்த யுத்தம்தான் குருஷேத்திர யுத்தம் எனும் வரலாற்றின்  பின்னணியில்,...அது நிகழ்ந்த பூமியின் ரத்த சாட்சியாக அருகிலுள்ள ரண பூமி எனும் இடத்திற்கு போறோம்…

போரில் வீழ்ந்து விட்ட பீஷ்மரைப் பார்க்க பாண்டவர்களும், கௌரவர்களும் அங்கே வந்த போது, தனக்கு தண்ணீர் தாகமாக இருக்கிறது எனச் சொல்லவே, கங்கையை நினைத்து பூமியில் தனது பாணத்தினைச் செலுத்தி அங்கேயே கங்கையை தோன்றச் செய்தான் அர்ஜுனன். பாணத்தினால் தோன்றிய கங்கா – பாண் கங்கா. அதிலிருந்து வந்த தண்ணீரைப் பருகி தாகம் அடங்கியது பீஷ்மருக்கு.

அங்க கட்டினதுதான் பீஷ்ம குண்ட் கோவில்
இந்த இடத்தில் அம்புகள் தைத்த உடலோடு பீஷ்மர் படுத்திருக்க, அருகிலேயே பாண்டவர்கள் அனைவரும் நின்று கொண்டிருக்கும்படி ஒரு கோவில் கட்டியிருக்கிறார்கள். கோவில் வாசலிலேயே அனுமனுக்கு 26 அடியில் ஒரு பெரிய சிலையும் கட்டியிருக்கிறார்கள். பாணத்தினால் உருவான குளத்தினைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் படிகள் அமைத்து வைத்திருக்கிறார்கள்.. கோவிலும் மற்ற கட்டுமானங்களும் அமைக்கப்பட்டது இந்த நூற்றாண்டிலாகத் தான் இருக்க வேண்டும்.இருந்தாலும் நமது கற்பனை 5000 ஆண்டுகள் முன் நோக்கி பாயறது. 

எப்படிப்பட்ட தியாகி! விஷ்ணு சஹஸ்ர நாமம். அம்பு படுக்கையில் இருந்தபடி ஆயிரம் நாமங்களால் இறைவனை துதிப்பதுஎன்பது லேசான விஷயமா?  பகவத் கீதை மனிதனுக்கு கடவுள் உபதேசித்தது. விஷ்ணு சஹஸ்ரநாமம் மனிதன் கடவுளை நோக்கி துதித்தது. இந்த இரண்டுமே பிறந்த இடங்களை ஒரே நாளில் தரிசிக்க முடிந்தது இறையருள்தான். அங்கு அமர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்யறேன். இவர் வழக்கப்படி அங்க  வந்த குரோம்பேட் வைதேகி பார்த்த சாரதி க்ரூப் காராகிட்ட எவ்வளவு நாள் எவ்வளவு ரூபான்னு விஜாரிச்சிண்டிருக்கார்..(தான் சிக்கனமா வந்தோம்கற பெருமைய சொல்லிக்க)அங்க இந்தில எழுதினதெல்லாம் அவாளுக்கு படிச்சுக்காட்டறார்

(கொரானா பயத்துல ஆத்துல உக்காந்து இப்ப குருஷேத்தர நினைவுகள எழுதரச்சே ஒன்னு நினைவு வரது. 
அஸ்வத்தாமன் நாராயண அஸ்திரத்தைப் பயன்படுத்த நினைத்த போது, பாண்டவரின் பக்கபலமாக இருந்த கிருஷ்ணா பரமாத்மா, பாண்டவர்களுக்கு ஒரு கட்டளையிட்டார். எல்லா வீரர்களும் தங்கள் கையில் வைத்திருக்கும் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, கைகளை கட்டி அமைதியாக நில்லுங்கள். போரிடும் எண்ணமும், எதிரிகளை அழிக்க நினைக்கும் எண்ணமும் மனதில் இருந்து நீக்கி சாந்தமாக அமைதியாக இருக்க வேண்டும் என கட்டளையிட்டார். 
யாரும் போரிடும் எண்ணத்தோடு இல்லாததால் அமைதியாக இருந்ததால், நாராயண அஸ்திரத்திற்கு உண்டான நேரம் காலாவதியானது. அதனால் அந்த அஸ்திரத்தின் வீரியம் குறைந்து அமைதியானது.
நாராயண அஸ்த்திரமும் அதற்கான நேரம் முடிந்ததும் அமைதியானது போல், கொரோனா வைரஸின், நாம் அமைதியாக வீட்டில் இருக்க, அதன் பரவும் வேகம் நின்று, மக்கள் சாதாரண நிலைக்கு திரும்ப முடியும் என்பதை உணர வேண்டும்.)
அர்ச்சுனனுக்குச் சரணாகதி அளித்த கோலத்தில் கிருஷ்ணர் வலது கையில் சங்குடன் ‘துவாரபுரித் தேவர்’ எனும் பெயரில் மணிமங்கலம் ராஜகோபால சுவாமி கோயிலில் மட்டும் அருள்புரிகிறார். வேறு எங்கும் காணக்கிடைக்காத குருஷேத்திர கிருஷ்ணரின் அற்புதக் கோலம் இது.

கர்ணவதம்
 கர்ணவதம் என்பது ஒரு நீண்ட பள்ளப் பகுதியாகும். இவ்விடத்தில்தான் கர்ணனுடைய தேர் சக்கரம், அர்ஜுனன் அவனை கொல்லும்முன், சிக்கிக் கொண்டது..

ஜ்யோதீசர்...
குருக்ஷேத்திரா நகரத்திலிருந்து பெஹோவா கிராமத்திற்குச் செல்லும் வழியில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இடம் தான் இந்த ஜ்யோதிசர். இந்த இடத்தில் ஒரு பெரிய ஆலமரம். அந்த மரத்தின் கீழே தான் கீதோபதேசம் நடைபெற்றதாக நம்பிக்கை. 

குருஷேத்திரம் என்பது ஒரு ஊர் அல்ல. அது நம் உடம்புதான். இடையறாது மனிதரின் உடம்பின் உள்ளே குருஷேத்திரப் போர் நடந்து கொண்டே இருக்கிறது”. காமம், குரோதம், லோபம், மூர்க்கம், மதம், மாச்சரியம் என்று ஆறு குணங்களால் மனிதன் அவதிப்படறான். . காமம் என்பது துரியோதனன், திரெளபதியை விரும்பியவன். குரோதம் என்பது கர்ணன், தெய்வத் தன்மை நிரம்பினாலும் பாண்டவர்கள் மீதுள்ள பொறாமையால் நாசமானவன். லோபம் சகுனி. மதம் துச்சாதனன் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். 


ராத்திரி திரும்பற வழியில தமிழ் தெரிந்த வடக்கத்தி குடும்பத்த சந்திக்கறோம்.  ராத்திரி சாப்பிட அவங்க வீட்டுக்கு கூப்பிடறா.,அன்பா மறுத்துட்டு ரோடு கடைல பராத்தா சாப்பிட்டு சத்தரம் வரோம்.  

கனவுல குழந்தைக்கண்ணன் விளையாட்டுக்காட்டிண்டே குழல் ஊதி ராதையுடன் காதலித்து திடீரென விசுபரூபம் எடுத்து ரத்த பூமியின் சாட்சியாக தேரோட்டி வரார். நான் பிரம்ம குண்டத்தின் குளிர்ச்சியும் இரண பூமியின் வெப்பமும் கலந்த நந்தவனப்பூக்களின் நறுமணமும் இரண பூமியின் நிண நாற்றமும் இழைந்த ஆகாயப்பெருவெளியில் கரைந்து கொண்டிருக்கிறேன்.   
படங்கள் குருஷேத்திரக்காட்சிகள் 1)கீதோபதேசம்2)ஜயத்ரதன் தலையை கொய்தல்3)அபிமன்யு சக்கர வியூகம்4)பீஷ்மர் அம்புப்படுக்கை5)ஜாகர்தாவில் மகாபாரதப்போர் சிற்பம்
                            தொடரும்.





No comments:

Post a Comment