Friday, April 1, 2022

திருநாராயணபுரம் மேலக்கோட்டை

ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏

திருப்பம் தரும் திருநாராயணபுரம்

மேலக்கோட்டை

ஸ்ரீ ராமானுஜர் திருப்பணி செய்த தலம்

மைசூரில் இருந்து 70 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருநாராயண புரத்தில் உள்ள திரு நாராயணன் கோயில்.

அடிவாரத்தில் திரு நாராயணரும் மலை மீது யோக நரசிம்மரும் காட்சி தருகிறார்கள்.

நரசிம்ம ஜெயந்தி ராமானுஜர் ஜெயந்தி கிருஷ்ண ஜெயந்தி 

ராம நவமி

வைகுண்ட ஏகாதசி

பங்குனி உத்திரம்

இந்த நாட்களில் தரிசனம் செய்வது மிகவும் விசேஷம் ‌

மகாவிஷ்ணுவிடம் இருந்து விஷ்ணு சிலை ஒன்றை பெற்றார் பிரம்மா.

 அதை தனது மகன் சனத்குமாரர்க்கு கொடுத்தார் .

பூலோகம் வந்த சனத்குமாரர் திருநாராயணபுரத்தில் அந்த சிலையை பிரதிஷ்டை செய்தார்.

 இங்கு வழிபட்டால் பத்ரிநாத்தை தரிசித்த பலன் கிடைக்கும் 

பெருமாளையே கணவராக எண்ணி வாழ்ந்த வரத நந்தினி என்னும் பக்தை மூலவரின் திருவடியில் இருக்கிறாள்.

உத்ஸவர் செல்வநாராயணர் ஸ்ரீதேவி & பூதேவியுடன் காட்சி தருகிறார்.

இங்கு

ஸ்ரீராமானுனஜருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது .

உபதேச முத்திரையுடன் காட்சி தரும் இவர், பக்தர்களின் குறை கேட்டு நிவர்த்தி செய்யும் பாவனையில் இருப்பதால் 

பேசும்  யதிராஜர்

(ராமானுஜர்)

எனப்படுகிறார்.

 இங்குள்ள இசை தூண் கலை நுட்பத்துடன்  செதுக்கப்பட்டுள்ளது.

 அருகிலுள்ள கல்யாணி தீர்த்தங்கரையில் பிந்துமாதவன், நாராயணன் ,லட்சுமி நரசிம்மர் ,மாருதி சன்னதிகள் உள்ளன .

400 படிகள் மலை எறினால் அங்கு யோக நரசிம்மருக்கு கோயில் உள்ளது.

 விஷ்ணு பிரகலாதனுக்காக நரசிம்ம அவதாரத்தில் இரணியனைக் கொன்றார்..

 தன் தந்தை இறக்கக் காரணமாக இருந்த பிரகலாதனுக்கு ,பிதுர் ஹத்ய தோஷம் ஏற்பட்டது .

 இதைப்போக்க பிரகலாதன் இங்கே தவம் புரிந்தார்.

 யோகநிலையில் நரசிம்மர் காட்சி அளித்து தோஷத்தை போக்கினார்.

அவரே இங்கு எழுந்தருளியிருக்கிறார்.

இவரது சன்னதி முன் படிக்கட்டுகளாக நவக்கிரகங்கள் உள்ளன

இந்த படிகளில் கால் வைத்தாலே நமது கிரக தோஷங்கள் நீங்கும்

வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்களேன்.

தொடர்புக்கு தொலைபேசி எண் 

08236- 299839.

ஸ்ரீ யோக நரசிம்மர் திருவடிகளே சரணம்

திருநாராயணர் பொற்பாதம் பணிவோம்

ஓம் நமோ நாராயணாய 🙏 



No comments:

Post a Comment