ஜிஞ்சர் மோர்
🍱 தேவையானவை:
மோர் - 500 மில்லி, பச்சை மிளகாய் - 1, இஞ்சி - சிறு துண்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, கொத்தமல்லி - சிறிதளவு, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.
🍴 செய்முறை:
இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
மோருடன் அரைத்த விழுது, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்துமல்லியைப் போட்டுக் கலந்து பரிமாறவும். விருப்பப்பட்டால் ஐஸ் க்யூப் சேர்த்துக் கொள்ளலாம்.
குறிப்பு:
இதில் சேர்க்கப் பட்டிருக்கும் கறிவேப்பிலை, இஞ்சி ஆகியவை வியர்வை யினால் வீணாகும் சத்துக்களை சமன்படுத்தும். அதிக செலவு இல்லாத பட்ஜெட் ட்ரிங்!
No comments:
Post a Comment