19.04.2022 TUESDAY
இன்று ஒரு தகவல் நவதிருப்பதி கோயில்கள் திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது.
தர்மராஜ் சூர்யா சென்னை.
===
💜💙💚🧡💛🤍💛🧡💚💙💜
நவதிருப்பதி ஸ்தலங்களில் ஸ்ரீ வைகுண்டம்
🌺🌸🌻🌷☘️🐚☘️🌷🌻🌸🌺
நவதிருப்பதிகள் என்று அழைக்கப்படும் ஒன்பது வைணவ க்ஷேத்திரங்களும் நவக்கிரகங்களுடன் தொடர்புடையவை எனக் கருதி வழிபடப்பட்டு வருகின்றன.
ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமாளே நவக்கிரகங்களாக கருதப்பட்டு வழிபடப்படுகின்றன.
சோழ நாட்டில் அமைந்துள்ள தலங்களுக்கு ஒப்பாக இந்த பாண்டிய நாட்டு நவதிருப்பதி தலங்கள் நவக்கிரக தலங்களாகப் போற்றப்படுகின்றன. இந்த தலங்கள் அனைத்தும் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளன.
💢✳️💢✳️💢✳️💢✳️💢✳️💢
நவக்கிரகங்களில் தலைமைப் பதவி வகிக்கும் சூரியன் மகாவிஷ்ணுவே ஆவார். அவரை சூரிய நாராயணன் என்றும் கூறுகின்றனர். ஈஸ்வரப் பட்டம் பெற்ற சனி பகவானைத் தவிர மற்ற கோள்கள் எல்லாம் நெற்றியில் திருமண்-நாமம்- அணிந்திருப்பதிலிருந்து நவக்கிரகங்கள் வைணவத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதை உணரலாம்.
🟣🔵🟢🟠🟡⚪🟡🟠🟢🔵🟣
தசாவதாரங்களும் கோள்களும்:
திருமாலின் பத்து அவதாரங்களும் அவற்றுடன் தொடர்புடைய நவகோள்களும் பின் வருமாறு:
2. கிருஷ்ணர் அவதாரம்: சந்திரன்
3. நரசிம்மர் அவதாரம்: செவ்வாய்
4. கல்கி அவதாரம்: புதன்
5. வாமன அவதாரம்: குரு
6. பரசுராம அவதாரம்: சுக்கிரன்
7. கூர்ம அவதாரம்: சனி
8. மச்ச அவதாரம்: கேது
9. பலராமர் அவதாரம்: குளிகன்
10. வராகர் அவதாரம்:ராகு
🌐🌀💠♨️💢♨️💠🌀🌐
நவ திருப்பதிகள்:
நவகிரகங்களுடன் தொடர்புடைய நவதிருப்பதிகள் பின்வருமாறு:
2. சந்திரன்: வரகுணமங்கை
3. செவ்வாய்: திருக்கோளூர்
4. புதன்: திருப்புளியங்குடி
5. குரு: ஆழ்வார்திருநகரி
6. சுக்கிரன்: தென்திருப்பேரை
7. சனி: பெருங்குளம்
8. ராகு: இரட்டை திருப்பதி (தேவர்பிரான்)
9. கேது:இரட்டை திருப்பதி (அரவிந்தலோசனா)
🍊🍐🍎🍋🥥🍇🍓🥭🍑🍈🫐
நவதிருப்பதி ஸ்தலங்கள் அனைத்தும் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்றவை ஆகும்.
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான்
நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இந்த வாரம் தரிசிக்கவிருப்பது நவதிருப்பதிகளில் சூரியனுக்குரிய தலமான அருள்மிகு கள்ளபிரான் சுவாமி திருக்கோயில்
====
No comments:
Post a Comment