158.#திருச்சேறை
அம்மன்/தாயார் : ஞானாம்பிகை, ஞானவல்லி
தல விருட்சம் : மாவிலங்கை
தீர்த்தம் : மார்க்கண்டேய தீர்த்தம், பிந்து சுதா தீர்த்தம், ஞான தீர்த்தம்
புராண பெயர் : உடையார் கோயில்
ஊர் : திருச்சேறை
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், அப்பர்
தேவாரபதிகம்
துடிபடு மிடையுடை மடவரல் உடனொரு பாகமா இடிபடு குரலுடை விடையினர் படமுடை யரவினர் பொடிபடு முருவினர் புலியுரி பொலிதரு மரையினர் செடிபடு சடைமுடி அடிகள்தம் வளநகர் சேறையே.
-திருஞானசம்பந்தர்
தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 95வது தலம்.
திருவிழா:
மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை
தல சிறப்பு:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கடன் நிவர்த்தி செய்யும் ரிண விமோசன லிங்கேஸ்வரர் இங்கு சிறப்பு. இத்தலத்தில் மட்டுமே மூன்று துர்க்கைகள் அமைந்துள்ளன. சிவ துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை, விஷ்ணு துர்க்கை என மூன்று வடிவங்களாக ஒரே சன்னதியில் காட்சியளிப்பது சிறப்பாகும். இங்குள்ள பைரவருக்கு அப்பர் தனியாக தேவார பாடல் பாடியுள்ளார். மற்றும் இடதுமேல் கரத்தில் சூலம் போட்ட மணியுடன் உள்ளது வேறு எங்கும் இல்லாத தனி சிறப்பாகும். ஆண்டுதோறும் மாசி மாதத்து 13, 14, 15 தேதிகளில் காலையில் இங்கே சூரியனது கிரகணங்கள் இத்தலத்து இறைவன் மீதும், அம்பிகையின் பாதங்களிலும் நேரடியாக படுகின்றன.இங்கு தலவிருட்சமான மாவிலங்கை வருடத்தின் நான்கு மாதங்கள் வெறும் இலைகளாகவும், அடுத்த நான்கு மாதங்கள் வெள்ளை வெளேரென்று பூக்களாகவும், அதற்கடுத்த நான்கு மாதங்கள் பூ, இலை எதுவுமின்றி காணப்படும்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 158 வது தேவாரத்தலம் ஆகும்.
பொது தகவல்:
வெளிப்பிரகாரத்தில் மூலவர் சாரபரமேஸ்வரருக்கு இடப்பால் இறைவி அம்பிகையாக ஞானவல்லி அம்மன் சன்னதி அமைந்துள்ளது. இறைவன் நெறிப்படுத்திய வாழ்க்கையின் ஞானத்தை அருள்பவர் அவனது துணைவியராக ஸ்ரீ ஞானவல்லி அம்பாள் அமைந்துள்ளதாக புராணச்செய்தி மூலம் அறிய முடிகிறது. உள்பிரகாரத்தில் விநாயகர், நடராஜர், இடபாரூடர், தெட்சிணாமூர்த்தி, காலபைரவர், துர்க்கை, சூரியன், சனிபகவான் முதலிய சன்னதிகள் உள்ளன.
மேற்கு பிரகாரத்தில் தல விநாயகரும், அவரையடுத்து மார்க்கண்டேயரும், அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தௌமிய முனிவரால் வழிபாடு செய்யப்பட்டதுமான, மக்களின் வறுமையை போக்கி செல்வத்தை கொடுக்கவல்ல ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரரின் சன்னதி ஆகும். இவருக்கு அடுத்து ஸ்ரீ பாலசுப்பிரமணியர் சன்னதியும் பாங்குற அமைந்துள்ளது. இத்திருக்கோயில் சோழர் காலத்தில் குலோத்துங்க சோழன் எனும் சோழ மகாராஜாவால் கட்டப்பட்ட திருக்கோயிலாகும்.
தலபெருமை:
மனிதனுக்கு செம்மை தரும் நெறியை - முக்தி நெறியை அளித்தருளும் இறைவன் வெளிப்படும் தலமிது என்ற பொருளில் திருச்சேறை பெருமானுக்கு ""செந்நெறியப்பர்' என்ற பெயர் வழங்கப்படுவதும் சிறப்பானதாகும். பஞ்ச க்ஷேத்திரம் எனும் பெருமாள் கோயில் அருகில் இருப்பதால் நமது இறைவன் ஸ்ரீ செந்நெறியப்பரையும் ஸ்ரீ சாரபரமேஸ்வர் என அழைக்கலாயினர். மற்ற எங்கும் இல்லாத சிறப்பு இத்தலத்தில் மட்டுமே மூன்று துர்க்கைகள் அமைந்துள்ளன. சிவ துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை, விஷ்ணு துர்க்கை என மூன்று வடிவங்களாக ஒரே சன்னதியில் காட்சியளிப்பது சிறப்பாகும். இத்துர்க்கையை வெள்ளிக்கிழமை தோறும் இராகு காலத்தில் வழிபாடு செய்வது சாலச்சிறந்ததாகும்.
நவக்கிரஹத்தை தரிசித்து, நடராஜபெருமான் சன்னதிக்கருகில் சென்றால் பைரவர் அருள்காட்சியளிக்கிறார். எந்த சிவாலயத்திலும் இல்லாத தனி சிறப்பு இங்குள்ள பைரவருக்கு அப்பரால் பாடல் பெற்ற தனி தேவார பாடல் இங்கு மட்டும் உள்ளது. மற்றும் இடதுமேல் கரத்தில் சூலம் போட்ட மணியுடன் உள்ளது வேறு எங்கும் இல்லாத தனி சிறப்பாகும்.
தரித்ததோர் கோலே கால பயிரவனாகி வேழம்
உரித்துமை யஞ்சக்கண்டு வொண்டிரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே'
சிவபெருமானே பைரவர் கோலத்தில் காட்சியளிப்பதாய் கூறும் தேவாரப் பாடலாகும். ஸ்ரீ பைரவருக்கு அஷ்டமியன்று வடைமாலை சாற்றி, சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் காரியானுகூலம், வழக்கு விவகாரங்களில் வெற்றி, நவக்கிரஹ தோஷங்கள் நீங்குதல் ஆகியவற்றின் பிரார்த்தனா மூர்த்தியாய் ஸ்ரீ பைரவர் விளங்குவது மிக சிறப்பான அம்சமாகும்.
சூரிய பூஜை : தக்கன் யாகத்தில் தான் செய்த தவறுக்கு கழுவாய் தேடி, சூரியன் பல இடங்களிலும், இறைவனை வழிபட்டான் அவ்வாறு சூரியன் பூஜித்த ஸ்தலங்களுள் ஸ்ரீ சாரபரமேஸ்வரர் ஸ்தலமும் ஒன்றாகும் என்பது இத்திருக்கோயிலின் மற்றொரு சிறப்பாகும். ஆண்டுதோறும் மாசி மாதத்து 13, 14, 15 தேதிகளில் காலையில் இங்கே சூரியனது கிரகணங்கள் இத்தலத்து இறைவன் மீதும், அம்பிகையின் பாதங்களிலும் நேரடியாக படுகின்றன. அப்போது சூரிய பூஜை மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த மூன்று நாட்களிலும் மாலை வேளைகளில் கண்டியூரில் சூரிய பூஜை நிகழ்வதும் குறிப்பிடத்தக்கது. மாசி மாதம் முழுவதும் காலையில் இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்
இவ்வூர் ஆற்றூர் ஆறை என மருவி வழங்குதல் போலச் சேற்றூர் என்ற பெயர் சேறை என வழங்கியது எனலாம். தேவாரப் பாடல்களில் வயல்களால் சூழப் பெற்ற வளநகர் என இத்தலத்தை குறிக்கப்படுகிறது.
தல வரலாறு:
இத்தலத்தில் மார்க்கண்டேய முனிவர் தமது ஆத்மார்த்த மூர்த்தியாக இத்திருக்கோயிலின் உட்பிரகாரத்தில், வினாயகருக்கு அருகில் ஒரு லிங்கம் ஸ்தாபித்து, வணங்கி வந்தார். அந்த லிங்கமே கடன் நிவர்த்தீஸ்வரராக விளங்கக்கூடிய ரிணவிமோசன லிங்கேஸ்வரர் ஆகும். (ரிண- கடன், விமோசனம் - நிவர்த்தி. கடன் நிவர்த்தி செய்யும் ஈசன் - ரிண விமோசன லிங்கேஸ்வரர்) மனித பிறவி எடுத்த ஒவ்வொருவரும் தன்னுடைய ஜீவிதத்தில் சுகமாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார்கள்.
ஒருவர் பிறக்கும்போது நல்ல ஆரோக்கியத்துடனும், அறிவு உள்ளவராகவும், கல்வியுடையவராகவும் இருந்தாலும் வறுமை இருக்குமானால் அவரால் சுகத்தை அனுபவிக்க முடியாது. ஆகையால் அப்பேர்ப்பட்ட வறுமை வராமல் இருக்க, வறுமையை நீக்கி செம்மையான வாழ்வு அளிக்கும் இறைவனே ரிண விமோசன லிங்கேஸ்வரர் ஆகும்.
இவ்விறைவர், ரிண விமோசன லிங்கேஸ்வரரை 11 வாரம் திங்கட்கிழமைகளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிக்ஷேகத்தில் கலந்து கொண்டால் பிரார்த்தனை நிறைவேறும்.
கடன் நீங்கி, வறுமை விலகி, செல்வ வளம் பெருகும். மக்கட்பேறு, கல்வி, பொருள் என அனைத்தும் கிடைக்கும் என்பது திண்ணம்
கடன் சுமை நீக்கும் சாரபரமேஸ்வரர் திருக்கோவில்;
கும்பகோணத்தில் திருச்சேறை என்ற இடத்தில் உள்ளது சாரபரமேஸ்வரர் திருக்கோவில். இந்த கோவிலின் வரலாற்றை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
திருச்சேறை என்ற இடத்தில் உள்ளது சாரபரமேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலய இறைவன் பெயர் சாரபரமேஸ்வரர். செந்நெறியப்பர், உடையவர் என்பன இறைவனின் பிற பெயர்கள். இறைவியின் பெயர் ஞானாம்பிகை.
ஆலய அமைப்பு :
இந்தக் கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் மொட்டை கோபுரமும், அதையடுத்து விசாலமான வெளிப் பிரகாரமும் உள்ளன. வெளிப் பிரகாரத்தின் வடக்குப் பகுதியில் இறைவியின் சன்னிதியும், ஆலய தல விருட்சமான மாவிலங்கை மரமும் உள்ளது. இந்த விருட்சத்தை மகாலிங்க மரம் என்றும் சொல்வதுண்டு.
மொட்டை கோபுரத்தின் உள்ளே நுழைந்ததும் வலதுபுறம் சிவபெருமான், பார்வதியின் சுதை வடிவ திருமேனிகள் உள்ளன. அடுத்துள்ள ராஜகோபுரத்தைத் தாண்டியதும், சிறப்பு மண்டபமும் மகாமண்ட பமும் உள்ளன. அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாசலில் துவார பாலகர்கள் அருள்பாலிக்க, அடுத்துள்ள கருவறையில் இறைவன் சாரபரமேஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக் கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களில், காவிரியின் தென்கரையில் அமையப்பெற்ற 127 தலங்களில் 95-வது தலமாக விளங்குகிறது திருச்சேறை.
இந்த ஆலயத்தில் மூன்று தீர்த்தங்கள் உள்ளன. முதல் தீர்த்தம் ‘பிந்து சுதா தீர்த்தம்’. இது கோவிலின் உள்ளே அமைந்துள்ள கிணறு ஆகும். அமுதத்தில் ஒரு துளி விழுந்ததால் ஏற்பட்ட தீர்த்தம் இது. இரண்டாவது ‘ஞான தீர்த்தம்’. இது ஆலயத்தின் எதிரே உள்ள திருக்குளம் ஆகும். மூன்றாவது தீர்த்தமாக ‘மார்க்கண்டேய தீர்த்தம்’ விளங் குகிறது. இது ஆலய தெப்பக்குளம் ஆகும்.
கருவறை தேவக் கோட்டத்திலும் பிரகாரத்திலும் விநாயகர், ஜூரஹர லிங்கேஸ்வரர், நடராஜர், தட்சிணாமூர்த்தி, அமிர்தகடேஸ்வரர், அபிராமி, மிருகண்டு மகரிஷி, சப்த கன்னிகள், சமயக்குரவர்கள், பால சுப்பிரமணியர், மகாலட்சுமி, வாயுலிங்கம், ஜேஷ்டா தேவி, மூன்று துர்க்கைகள், சண்டிகேஸ்வரர், சூரியன், காளீஸ்வரர், நாகராஜர், நவக்கிரக நாயகர்கள் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
மகரிஷி மோட்ச தலம் :
மகாபாரதத்தில் எரியும் அரக்கு மாளிகையில் இருந்து பாண்டவர்கள் வெளியேற யுத்திகள் கூறியவரும், குந்திதேவிக்கு உபதேசம் செய்தவருமான தவுமிய மகரிஷி இத்தலத்தில் மோட்சம் பெற்றதாக வரலாறு.
ஞானம் இருந்தால் மட்டுமே ஒரு மனிதன் முழு மனிதன் ஆவான். எவ்வளவு செல்வம் இருப்பினும் அதை காக்க அறிவு என்ற ஞானம் வேண்டும். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஞானத்தை அள்ளித் தருவதால், இத்தல இறைவி ஞானாம்பிகை என அழைக்கப்படுகிறாள்.
இத்தலத்தில் பரிகார தெய்வமாக ‘ரிண விமோசன லிங்ககேஸ்வரர்’ விளங்கு கிறார். மார்க்கண்டேய முனிவர் தன்னுடைய ஆசிரமத்தில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தார். அந்த மார்கண்டேய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அவரின் ஆத்மார்த்த லிங்கமே ரிண விமோசன லிங்கேஸ்வரர்.
பொதுவாக மனிதனாகப் பிறந்தவருக்கு பிறவிக்கடனும், இப்பிறவியில் பொருள் கடனுமாக இரண்டு கடன் உண்டு. ரிண விமோசன லிங்கேஸ்வரரை முறையோடு வழிபட்டால், இந்த இரண்டு கடன்களிலிருந்து விடுபடலாம். எனவே இவர் கடன் நிவர்த்தீஸ்வரர் என போற்றப்படுகிறார். தொடர்ந்து 10 திங்கட்கிழமைகள் இவருக்கு அர்ச்சனை செய்து, 11-வது வார முடிவில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் உரிய பலன் கிடைக்கும்.
இங்குள்ள பைரவரை தொடர்ந்து எட்டு அஷ்டமி திதியில் அர்ச்சனை செய்து வழிபட்டு, ஒன்பதாவது அஷ்டமி திதி அன்று பைரவருக்கு வடை மாலை சாத்தி வழிபட்டால் வேண்டியது நிறைவேறும்.
மூன்று துர்க்கைகள் :
வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத வகையில் சிவதுர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை என்று மூன்று துர்க்கை சன்னிதிகள் இந்த ஆலயத்தில் ஒரே இடத்தில் அமைந்துள்ளது. ராகு கால நேரத்தில் இந்த மூன்று துர்க்கை களையும் வழிபடுவது நல்ல பலனைத்தரும்.
இந்த ஆலயத்தில் ஆடிப்பூரம், நவராத்திரி, கந்த சஷ்டி, கார்த்திகை, பிரதோஷம், அஷ்டமியில் பைரவர் சகஸ்ரநாம அர்ச்சனை ஆகியவை சிறப்பாக நடைபெறுகின்றன.
மாசி மாதம் 13,14,15 தேதிகளில் சூரிய கதிர்கள் மூலவர் மேல் விழுகிறது. இறைவனுக்கு சூரிய பூஜை செய்து முடித்து சில மணி நேரங்களில் இறைவியின் திருப்பாதங்களில் சூரிய ஒளி படுவதைக் கண்டு நாம் சிலிர்க்காமல் இருக்க முடியாது.
கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்ப கோணத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருச்சேறை திருத்தலம். இங்கு செல்ல கும்பகோணத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது.
விச்வேச்வராய நரகார்ணவதாரணாய
கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய
கர்பூரகாந்தி தவளாய ஜடாதராய
தாரித்ரியது: கதஹநாயநம: சிவாய
கௌரீப்ரியா யரஜநீச கலாதராய
கலாந்தகாய புஜகாதி பகங்கணாய
கங்காதராய கஜராஜ விமர்தநாய
தாரித்ரியது; கதஹநாய நம: சிவாய
பக்திப்ரியாய பவரோக பயோபஹாய
உக்ராய துர்கபவஸாகர தாரணாய
ஜ்யோதிர்மயாய குணநாம ஸுஹ்ருந்யகாய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய
சர்மாம்பராய சவபஸ்மவிலேபநாய
பாலோக்ஷணாய மணிகுண்டல மண்டிதாய
மஞ்ரபாதயுகளாக ஜடாதராய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய
பஞ்சாநநாய பணிராஜ விபூஷணாய
ஹேமாம்சுகாய புவனத்ரணமண்டி தாய
ஆனந்த பூமிவரதாய தாமோயாய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய
பானுப்ரியாய பவஸாகரதார ணாய
காலாந்தகாய கமலாஸந பூஜிதாய
நேத்ரத்ரயாய சுபலக்ஷக்ஷ்ண லக்ஷிதாய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய
ராமப்ரியாய ரகுநாத வரப்ரதாய
நாகப்ரியாய நரகார்ண வதாரணாய
புண்யேஷு புண்யபரிதாயஸுரார்சிதாய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய
முக்தேச்வராய பலதாயகணேச்வராய
கீதப்ரியாய வ்ருஷபேச்வர வவாஹராய
மாதங்கசர்மவஸநாய மஹேச்வராய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய
வஸஷ்டே நக்ருதம் ஸ்தோத்திரம்
ஸர்வஸ்ம்பத்கரம் சீக்ரம் புத்ர
பௌத்ராதி வர்த்தனம்
திரிஸந்த்யம்ய: படேந்நித்யம்
ஸஹிஸ்வர்கமவாப்னுயாத்
தஹந சிவஸ்தோத்திரம் ஸம்பூர்ணம்
ஓம் நமசிவாய
இந்த ஸ்லோகத்தை தினசரி மூன்று வேலை படிப்பதன் மூலம், பிறவிக்கடன், பொருளாதாரக் கடன் நீங்கி, நல்ல புத்திரர்களை அடைந்து தேக ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுளோடு, சொர்க்க அனுபவத்தை அடைவார்கள்.
என வசிஷ்டர் அருளிய தாரித்திரிய தஹன சிவ ஸ்தோத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment