Thursday, April 21, 2022

நான்காவது முடிச்சு

 நான்காவது முடிச்சு

மவுனமாக தலை குனிந்து இருந்த என் முதுகில் மெல்ல தட்டிய ராதிகா,
''சரி நான் கிளம்பறேன்.. பழசெல்லாம் மனசில போட்டு குழப்பிக்கிட்டு
இருக்காதே. இதுதான் யதார்த்தம். புரிஞ்சுக்கோ. மறக்காம கல்யாணத்துக்கு வந்துடு.." என்று சொல்லி விட்டு கல்யாண
பத்திரிக்கையை என் கையில் திணித்து விட்டு, வழக்கம் போல என் கன்னத்தை கிள்ளி விட்டு கிளம்பினாள்.

அவள் கிள்ளி விட்டு நகர்ந்ததும் மெல்ல வலி எடுக்க ஆரம்பித்தது,
மனதில்.
'ராதிகாவா இப்படி செய்தாள்..?
நம்பவே முடியவில்லையே. அப்போ நாம் இவளிடம் மனம் விட்டு
பேசியதெல்லாம் வீண்தானா..? 
அப்போ நான் என் மனசில் இருந்தததை  இவளிடம் சொல்லும்போதெல்லாம் எனக்கு ஆறுதல் சொன்னதெல்லாம் நடிப்புதானா..? ச்சே.. என்ன பெண் இவள்..?" நினைக்க நினைக்க மனம் பரிதவித்தது.

திடீரென்று எனக்குள் இருந்த துடிப்பு, சுறுசுறுப்பு எல்லாமே இழந்ததுப் போன்று ஒரு வெறுமையான உணர்வு தோன்ற ஆரம்பித்தது.
---------------------------------------------
அப்படியே நகர்ந்துகொண்டே பத்திரிக்கையைப் பிரித்தவன் கண்களில்
'அன்றொருநாள் அவள் பெயருடன் அவன்பெயரை எழுதி ரசித்த நண்பரின் மணப் பத்திரிகையின் படம்தெரிய படித்ததும் வேறென உணர்ந்து'முதல் முடிச்சை அவிழ்த்தவனாய் மகிழ்ந்த நேரம் அழைப்பிதழ் அவளின் சகோதரி திருமணத்திற்கு என அறிந்து இரண்டாம் முடிச்சையும் இனிதாய் அவிழ்த்து இயல்பானான்

சகோதரியின் மணப்பத்திரிக்கை என்ற மகிழ்வில் தன் 3முடிச்சு கனவில்
மிதந்தவனுக்கு 'இதற்கெதற்கு இத்தனை ஆர்ப்பாட்டத்தையும் டிவிட்சையும் வைத்து டென்சன் கொடுத்தாளோ!' என்று நினைத்த நேரம்

வந்தது வாட்ஸ்அப் செய்தி . அதில் 'டேய் சரத் நான் உன் அக்காள் திருமணத்திற்கு வந்தும் மொய் எழுதவில்லை என்பதை மனதில்
வைத்து நீயும் என் அக்காள் திருமணத்தில் மொய் எழுதாம இருந்திடாதடா' என்பதைப் படித்ததும் நான்காவது முடிச்சவிழ்த்தவனாய் -
அடி பக்கி இதற்குத்தானா இத்தனை டிவிஸ்ட் - என்றபடி நகர்ந்தான்
by சுந்தரமூர்த்தி

No comments:

Post a Comment