Thursday, April 21, 2022

பூமிக்குள் இருந்த பஞ்சமுக லிங்கம்

 பூமிக்குள் இருந்த பஞ்சமுக லிங்கம்

திரு ஆனைக்காவல் வடக்கு வீதி ஸ்ரீகாமகோடி பீட்த்தின் சங்கரமடத்தின் பின்புறம் – ராஜராஜேஸ்வரர் ஆலயத்தில் , 1943இல் ஸ்ரீ பரமாச்சாரியாள் சில காலம் அங்கு தங்கிய பொழுது ஒரு நாள் , தரிசிக்க வந்த பக்தர்களிடம் இங்கு அருகாமையில் எங்கேனும் கிணறு தோண்டும் வேலை நடைபெருகிறதா என்று கேட்டார். உடனே ஒரு பக்தர் முன் வந்த வழியில் ஓரிடத்தில் கிணறு தோண்டுவதை கண்டதாக கூறினார்.

உடனே நீ போய் கடப்பாரை மம்மட்டியுடன் ஒரிருவரை அழைத்து வா என்றார்.

சில நிமிடங்களில் 3 பேர் கடப்பாரை சகிதமாக பெரிவாளின் முன் வந்து நமஸ்கரித்தனர்.

பெரியவா அவர்களை ஆசிர்வதித்து தன்னுடன் வருமாறு அழைத்து பின்புறம் உள்ள வாழை தோட்டத்திற்குள் சென்றார்.

அங்கு ஓரிடத்தை காட்டி 5 அடிக்கு 5 அடி அளவில் தொடச் சொன்னார்.

ஓரிரு அடிகள் தோண்டியவுடன் ணங் என்று சத்தம் கேட்டது.

உடனே பெரியவா அவர்களை நிறுத்தச் சொல்லி, கையால் மண்ணை அள்ளுங்கள் என்று சொன்னார்.  

சில நிமிடங்களில் ஒரு லிங்கம் தென்பட  

கூடியிருந்த அனைவரும் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர என்று கோஷமிடத் தொடங்கினர்.

அனைவரின் முயற்சியால் ஒரு சின்ன பின்னமும் இல்லாமல் ஒரு பெரிய பஞ்ச முக லிங்கம் அங்கே மண்ணுக் குள்ளிருந்து வெளியே எடுக்கப்பட்டது.

மஹா பெரியவாளின் தபோ சக்தியை அனைவரும் உணர்ந்து அவரை நோக்கி நமஸ்கரித்தனர்.

இன்று நாம் தரிசிக்கும் வகையில் ஒரு கோயிலாக பஞ்ச முக லிங்கேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

மஹா பெரியவா  

முன்பு ஒரு முறை காளத்தி அருகில் பரமக்குடியில் பஞ்சலிங் கத்தைக் கண்டுபிடித்துச் சொன்னது போல் இந்த லிங்கத்தையும் கண்டுபிடித்துச் சொல்லி நித்ய பூஜை நடத்த ஏற்பாடு செய்தார்கள்.

திரிபுர சுந்தரி உடனுறை பஞ்ச முகேஸ்வரராக  அகிலாண்டேஸ்வரி சன்னதியின் அருகில் உள்ள சங்கர மடத்தில் தரிசிக்கலாம்.

ஸ்ரீ ருத்ர மஹாமந்திரத்தில் பரமசிவனுக்கு ஐந்து மந்திரங்கள் கூறப்பட்டுள்ளன.

கிழக்கு பார்த்திருக்கும் முகம் தத்புருஷம். இது ரிக் வேதத்திற்குரியது.

தெற்கு பார்த்திருக்கும் முகம் அகோரம். யஜூர் வேதத்திற்குறியது.

மேற்கு பார்த்திருக்கும் முகம் ஸத்யோஜாதம். ஸாம வேதத்திற்கு உரியது.

வடக்கு பார்த்திருக்கும் முகம் வாமதேவம். அதர்வண வேதத்திற்குரியது.

ஐந்தாவது ஈசானம் ஆகாயத்தை நோக்கி ஜோதிர்மயமாக உருவமில்லாமல் காணப்படுவது.

ஸ்ரீகாளகஸ்தீஸ்வரர் ஆலயத்திற்கு அடுத்தாற்போல் உள்ள பரமக்குடி என்ற குன்றின் மேல் பஞ்சமுக லிங்கம் இருக்கிறது. ஸ்ரீ பரமாசாரியாள் 1932இலும் பிறகு 1939இலும் அப்பஞ்சமுக லிங்கத்தை தர்சனம் செய்து கொண்டார்கள். 1966ஆம் வருடம் ஸ்ரீ பரமாசாரியாளும் ஸ்ரீ ஜெயேந்திர பெரியவாளும் சாதுர்மாஸிய காலத்தில் இந்தப் பஞ்ச முக லிங்கத்தை தர்சனம் செய்துள்ளார்கள்.

வாதாபியில் “ஐகோளை” என்னுமிடத்தில் இம்மாதிரி பஞ்சமுக லிங்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

நேபாளத்திலுள்ள பஞ்சமுக பசுபதீஸ்வரர் லிங்கம்   ஜகத் பிரசித்தம்.

அர்ஜுனன் பரமசிவனைக் குறித்துக் கடும் தவம் செய்து பாசுபதாஸ்திரம் பெற்ற ஸ்தலம்.

ஐந்து முகங்களுக்கும் உள்ள வேத மந்திரங்கள் ‘தைத்ரிய” உபநிஷதின் ஒரு பகுதியான நாராயணவல்லியில் இருக்கின்றன. நாராயணவல்லி என்று கூறப்படும் இப்பாகம் மஹா நாராயாண உபநிஷத் என்றும் வழங்கப்படும்.



No comments:

Post a Comment